தீராத கஷ்டங்கள் தீர குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுங்கள்

குலதெய்வ கோவிலுக்கு ஒரே ஒரு கிலோ வாங்கி கொடுத்து விடுங்கள் விதியால் நடக்கவே கூடாது என்று இருந்தாலும் உடனே நடக்கும். தீராத கஷ்டங்கள் தீர குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுங்கள்

குலதெய்வ கோவிலுக்கு நிறைய பேர் போறதே இல்லை. எனக்கு நேரமே இல்லை என்று கூறுவார்கள். சில பேர் அலட்சியமாக விட்டுவிடுவார்கள். அப்படி இருக்கக்கூடாது. மாதா மாதம் குலதெய்வ கோவிலுக்கு நாம் போகவேண்டும். முடியவில்லை என்றால் வருடத்திற்கு இரண்டு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு போகவேண்டும்.

 சிலர் குலதெய்வ கோவிலுக்குநாங்கள் கிளம்புகிறோம் ஆனால் எங்களால் போகவே முடியவில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையால் தடைபடுகிறது அப்படின்னு சொல்லுவார்கள். இவர்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது.

அது என்னவென்றால் ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொண்டு அதில் விரலி மஞ்சள் ஒன்றும்  அதனுடன் ஒரு கைப்பிடி அளவு சில்லறை நாணயங்களையும் மஞ்சளுடன் சேர்த்து வைத்து துணியை கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும்.

பூஜை அறையில் வைத்த மஞ்சள் மற்றும் சில்லறை நாணயங்கள் சேர்ந்த துணி முடிச்சிருக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி மற்றும் தீபம் காட்டி அதனுடன் ஒரு வேண்டுதலாக நாங்கள் விரைவில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்.

 நாங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் மன்னித்து குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். உன்னுடைய கோவிலுக்கு வரக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு கொடு என்று வேண்டிக் கொள்ளலாம். குலதெய்வ கோவிலுக்கு சீக்கிரம் போகக்கூடிய சூழல் வரும்.

நேரம் காலம் தானாக கூடி வரும் அப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு செல்லும்பொழுது மஞ்சள் நாணயங்கள் கட்டிய மஞ்சள் துணியை எடுத்துக்கொண்டு சென்று குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்

தீராத கஷ்டங்கள் தீர குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுங்கள்

ஒரு சிலர் எங்களுக்கு குலதெய்வமே தெரியாது நாங்கள் என்ன செய்வது.  குலதெய்வத்தை கண்டுபிடிக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கிறது.

குலதெய்வ கோவிலுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடிய பொருட்களில் நான்கு பொருட்கள் இருக்கிறது. இந்த பொருட்களை நீங்கள் கொடுத்தால் தீராத கடன் சுமை இருந்தாலும் தீரும். நீங்கள் எப்படிப்பட்ட வறுமையில் இருந்தாலும் உங்களுடைய கஷ்டம் கரைந்து உங்களுக்கு நல்லது நடக்கும்.

அரிசி

தெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் தீராத கஷ்டம் எல்லாம் தீரும்

இதில் ஒரே ஒரு பொருளை நீங்கள் உங்களுடைய கையால் குலதெய்வ கோவிலுக்கு ஒரே ஒரு கிலோ கொடுத்தாலே போதும். உங்களுடைய கஷ்டம் எல்லாம் கரைந்து போகும்.

நீங்கள் இந்த பொருட்களை வீட்டிலிருக்கும் பொருட்களில் இருந்து எடுக்காமல் கோவிலுக்கு செல்வதற்கு முதல் நாள் கடையிலிருந்து புதிதாக வாங்கி வந்து வைத்து விட வேண்டும் கோவிலுக்கு சென்று அங்கே இருக்கும் கடைகளில் வாங்கி கொடுக்கலாமே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் முதல் நாளே கடையில் இருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருந்து அந்த பொருளை எடுத்துக் கொண்டு போய் கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.

குலதெய்வத்தை நாம் முறைப்படி வழிபட்டோம் என்றால் நம்முடைய வீட்டில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் துர்மரணங்களும் ஏற்படாது. பெரிய அளவில் உடல் நலத்தில் பிரச்சனைகள் வராது. தீராத கடன் சுமை இருந்தாலும் தீர்ந்து போகும். குலதெய்வம் என்பது நம்முடைய குலத்தைக் காக்கின்றவர்கள். அவர்கள் நம்முடைய முன்னோர்கள் வழிபட்டவர்களாகவும் இருக்கலாம். நம்முடைய முன்னோர்கள் குல தெய்வங்களாக மாறியும் இருக்கலாம். இவர்கள் தான் நமக்கு ஒரு கஷ்டம் வந்ததும் ஓடோடி வருவார்கள்.

வெல்லம்

தெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் தீராத கஷ்டம் எல்லாம் தீரும்

இஷ்ட தெய்வமாக இருந்தாலும் எந்த தெய்வமாக இருந்தாலும் குலதெய்வத்தோட அனுகிரகம் இருந்தால் தான் எந்த தெய்வமும் நமக்கு நல்லது செய்ய முடியும். எந்த விதமான தீய சக்திகளும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்திகள் நம்மை நெருங்க முடியாது.

குலதெய்வ கோவிலுக்கு நாம் போகவில்லை என்றால் வீட்டில் இருக்கும் திருமண வயது பிள்ளைகளுக்கு திருமணம் தள்ளிக் கொண்டு போகும் தடைபட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியமும் தடைபடும். வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்காவது உடல் நல குறைவு மற்றும் விபத்தினால் ஏற்படும் மன கஷ்டங்கள் போன்றவைகள் ஏற்படும்.

வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாகவும் எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ குல தெய்வ கோவிலுக்கு மாதம் ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் சென்று வர வேண்டும்.

நெய்

தெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் தீராத கஷ்டம் எல்லாம் தீரும்

வெளிநாட்டில் இருப்பவர்கள் குலதெய்வ கோவிலுக்குவரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருப்பவர்கள் தமது வீட்டிலேயே ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பபை எடுத்து அதில் முழுவதுமாக நீரை நிரப்பி அதனுள் மஞ்சள் குங்குமம் எலுமிச்சம் பழம் ஒன்று சிறிது பச்சை கற்பூரம் அதனுடன் ஒரு ஏலக்காய் ஆகியவற்றை போட்டு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 108 முறை சொல்லி வணங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் இந்த பூஜை செய்யலாம் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பௌர்ணமி நாளன்று இந்த பூஜையை செய்யல்ம். அவ்வாறு செய்தால் உங்களுடைய குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்.

குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்பவர்கள் பௌர்ணமி அன்று சர்க்கரை பொங்கல் வைத்து சாமி கும்பிடுங்கள். மாவிளக்கு போட்டு வழிபடுவது மிகவும் சிறப்பானது.

பருப்பு

தெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுத்தால் தீராத கஷ்டம் எல்லாம் தீரும்

குலதெய்வ கோவிலுக்கு போகும் போது அங்கு ஏதாவது பழுதடைந்து இருந்தது என்றால் அதை சரி செய்வதற்கு உங்களால் இயன்ற பொருள் உதவியை செய்யலாம்.  எத்தனையோ குலதெய்வ கோவில்கள் பராமரிக்க வழியில்லாமல் பழுதடைந்து காட்சியளிக்கிறது. உங்களுடைய குலதெய்வம் கோவில் என்றால் நீங்கள் செல்லும் பொழுது உங்களால் இயன்ற ஒரு உதவியை செய்து அங்கு தினமும் விளக்கேற்றுவதற்கு உதவலாம்.

நெய்வேத்தியம் செய்து  சாமிக்கு படைப்பதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது. அதற்கு அரிசி, பருப்பு, நெய் மற்றும் வெல்லம் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து பிரசாதம் செய்து சாமிக்கு படைக்க உதவி செய்யலாம்.

குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு முக்கியமான பொருள் வெல்லம். இந்த வெள்ளத்தை நாம் அங்கு போய் கடையில் வாங்கி கொடுக்க கூடாது. நம் வீட்டில் ஏற்கனவே இருக்கும் வெள்ளத்தையும் எடுத்துச் செல்லக்கூடாது. நாம் குலதெய்வ கோவிலுக்கு போகின்றோம் என்றதும் கடைக்கு சென்று வாங்கி வந்து வீட்டில் இருந்து அதை எடுத்துக் கொண்டு போய் தானமாக கோவிலுக்கு வழங்க வேண்டும். அது எவ்வளவு என்றால் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெல்லம் வாங்கி கொடுக்கலாம்.

வெல்லத்தை கோவிலுக்கு கொடுத்த பின் அங்கு குளம் இருந்ததென்றால் அந்த குலத்திற்கு சென்று அங்கே ஒரு வெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து விடவேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உடல் உபாதைகள் இருந்தாலும் சில நாட்களிலேயே இந்த வெல்லம் கரைந்து போவது போல் அந்த கஷ்டமும் உங்களை விட்டு கரைந்து போய்விடும். அதேபோல அம்மாவாசைக்கு அம்மாவாசை குலதெய்வ கோவிலுக்கு சென்று இரண்டு மண் விளக்குகளில் நல்லெண்ணை ஊற்றி விளக்கு ஏற்றிவிட்டு எலுமிச்சம் பழத்தை கோவில் சூலாயுதத்தில் குத்திவிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை சாமிகிட்ட வைத்து அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் எது இருந்தாலும் அது  விரைவில் தீர்ந்துவிடும். குலதெய்வ கோவிலுக்கு இந்த பொருட்களை கொடுத்து தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறவர்களுக்கு அவர்கள் வேண்டுவது எல்லாம் கிடைக்கும்.

அது இல்லாமல் எவ்வளவு பூஜை   பரிகாரம் செய்தாலும் குலதெய்வம் அனுகிரகம் இல்லாமல் இந்த பொருட்கள் எல்லாம் ஒன்று கூட நீங்கள் கொடுக்காமல் இருந்தீர்கள் என்றால் எந்த தெய்வத்தோட அனுகிரகமும் உங்களுக்கு கிடைக்காது. 

குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு அப்படின்னு சொல்லுவார்கள். அதனால் குலதெய்வ கோயிலுக்கு இயன்ற பொழுதெல்லாம் சென்று இந்த பொருட்களை மறக்காமல் வாங்கிட்டு போங்க. அதில் முக்கியமானது வெல்லம் ஒரு கிலோ வெல்லமாவது வாங்கிக் கொண்டு சென்று உங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து பாருங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *