திருநீறு பூசுவதால் என்ன நன்மை? திருநீறை எப்படி பூச வேண்டும் ?
நம்முடைய நிம்மதிக்காகவும் இறைவனின் அருளை பெறுவதற்கும் கோவிலுக்கு போய் சாமியை கும்பிடுகிறோம். அப்பொழுது அங்குள்ள அர்ச்சகர்கள் விபூதி குங்குமத்தை நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார். அந்த விபூதியை நெற்றியில் பூசுவதற்கு பல விதிமுறைகள் இருக்கிறது. அந்த விபூதியில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா? எந்த விரலால் அந்த விபூதியை பூசணும் என்று தெரியுமா? நாம் நெற்றியில் அணியும் விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது நமக்கு நன்மையும் மற்ற சில விரல்களை பயன்படுத்தும் போது நமக்கு தீமையும் உண்டாகும். ஏன் திருநீர் பூச வேண்டும்? திருநீறின் மகிமை என்ன? எந்த விரலால திருநீறு பூசினால் என்ன பலன் கிடைக்கும்.
கோவிலில் கொடுக்கும் திருநீறை கீழே சிந்தினால் எப்படிப்பட்ட பாவங்கள் நம்மை வந்து சேரும் உடம்பின் எந்தெந்த இடங்களில் விபூதி பூசலாம். எங்கெல்லாம் பூசக்கூடாது. முக்கியமாக திருநீறை பூசும்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? நாம் அன்றாடம் நம் நெற்றியில் பூசும் விபூதி பிரசாதத்தை பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
சைவ சமயத்தின் முழு முதல் கடவுளான சிவபெருமானை குறிப்பது இந்த விபூதி. ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவ தத்துவம் என்பதை விபூதி குறிக்கிறது. நாடாண்ட மன்னனும் நூல் பலகற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள். இதுதான் நாம் நெற்றியில் பூசம் திருநீறு உணர்த்தும் தத்துவம். எப்பேர்ப்பட்டவர்களாய் இருந்தாலும் மரணத்திற்கு பிறகு இறுதியில் தீயில் வெந்து அனைவரும் ஒரு பிடி சாம்பலாக ஆவார்கள் என்ற தத்துவத்தை உணர்த்துவது இந்த திருநீறு.
. மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால் அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது. சூரியக் கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும் அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள் அர்த்தங்களை கொண்டதாக இருக்கும். பிரம்மன் எழுதிய தலை எழுத்தை அழித்து இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீறுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த விபூதியை நெற்றியில் எப்படி எடுத்து பூச வேண்டும் என்று சில சம்பிரதாயங்கள் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே :குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!
ஆள்காட்டி விரலை விபூதி அணிவதற்கு பயன்படுத்துவது தவறு. அந்த விரலைக் கொண்டு விபூதி பூசுவதால் பொருள் இழப்பு உண்டாகும்.
நடுவிரலை கொண்டும் விபூதி அணிந்து கொள்ளக்கூடாது. நடுவிரலில் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.
விபூதியை நெற்றியில் பூசுவதற்கு மோதிர விரலே சரியான விரல். மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.
சிறுவிரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மோதிர விரல் மற்றும் கட்டைவிரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு உலகமே தன் வசப்படும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெரும்.
ஆள்காட்டி விரலால் விபூதியை எடுத்து பொட்டு போல பூசக்கூடாது நெற்றி நிறைய பூச வேண்டும் அப்படி நாம் திருநீறை பூசும்பொழுது நமது முன் வினையால் பிரம்மன் நமது தலையில் எழுதி இருக்கும் கெட்ட முன்வினை பயன்கள் ஈசனின் அருளால் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.
அதேபோல பையில் உள்ள திருநீரை தலைகீழாக தவிர்க்கக்கூடாது ஈர உடையுடனும் ஒற்றை துணி உடுத்திக் கொண்டும் ஆடை இன்றியும் திருநீரை பூசக்கூடாது.
திருநீறு பூசும்போது எக்காரணம் கொண்டு அந்த திருநீரை கீழே போடக்கூடாது. கோவிலில் சிந்த கூடாது.
அது போல கோவில்களில் நாம் நெற்றியில் இட்ட பிறகு மிஞ்சிய திருநீரை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதை ஒரு இலையிலையோ அல்லது ஒரு பேப்பர்லையோ மடித்து பத்திரப்படுத்திக்கலாம். முடிந்தால் மத்தவர்களுக்கு கொடுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் திருநீரை கீழே சிந்தாதீர்கள்.
நமது உடலிலையை மிகவும் பவித்திரமான பாகம் என்றால் அது நம்முடைய வெற்றிதான் நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சும சக்தியும் நம் நெற்றியில் உள்ளது. திருநீரை புருவ மத்தியில் இட்டால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம் தொண்டைக் குழியில் விபூதி இட்டால் நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். நெஞ்சுக்குட்டின் மையப்பகுதியில் திருநீறிட்டால் தெய்வீக அன்பை பெறலாம்.
கோவிலில் கொடுக்கும் அந்த விபூதிக்கு பின்னால் பல அறிவியல் உண்மைகளும் ஒளிந்து இருக்கிறது. நம் நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிளுக்கவும் செய்யும் புகை நிற விபூதியையும் பொன்னிற விபூதியையும் பயன்படுத்தக்கூடாது தலையை கவிழ்த்துக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக் கொண்டும் விபூதியை பூசக்கூடாது. ஒரு விரலால் கண்டிப்பாக திருநீரை எடுக்கவோ தரிக்கவோ கூடாது.
இதையும் படிக்கலாமே :அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.
பாவங்கள் பல செய்த பாவிகள் முன் நின்று திருநீரை பூசக்கூடாது. அசுத்தமான நிலத்தில் நின்று கொண்டு திருநீறு பூசக்கூடாது. வழி நடையிலும் திருநீறு பூசக்கூடாது தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் திருநீரை பூச வேண்டும் வலது கை திருநீரை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழே தொங்கக்கூடாது.
ஒருவரிடம் இருந்து திருநீறை வாங்கும் பொழுது வாங்குபவர்கள் மேலாகவும் கொடுப்பவர்கள் கீழாகவும் நின்று விபூதியை வாங்கக்கூடாது. திண்ணை ஆசனம் பலகை குதிரை இவற்றின் மீது அமர்ந்து திருநீறை வாங்கக்கூடாது ஒருவர் திருநீறை கொடுக்கிறார்கள் என்றால் அதை வேணாம் என்று சொல்லி மறுக்கக்கூடாது.
திருநீறை பூசும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன்
திருஆல வாயான்திரு நீறே
இந்த ஒரு மந்திரத்தை திருநீறு பூசும்போது தொடர்ந்து நீங்கள் உபயோகித்து வந்தால் திருநீறின் மகிமைகளை உணர்ந்து கொள்ளலாம்.
எதுனால் நாம் திருநீறு பூசவேண்டும்.
புருவத்தின் நடுவே உள்ளது தியான நிலை ஆத்ம பிரகாசம் என்று சொல்வார்கள். அந்தப் பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் தியானம் ஊன்ற வேண்டும் என்பதற்காகவே சந்தனம் குங்குமம் திருநீறு திருமண் முதலியவற்றை நாம் நெற்றியில் பூசிக் கொள்கிறோம்.
இந்த திருநீற்றை பூசுவதன் மூலம் நம் எதிரில் உள்ளவர்களை எளிதில் வசியம் செய்ய முடியுமாம். அதாவது ஹிப்னாடிசம் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். எப்படி என்றால் இரு புருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் தான் நெற்றியில் திலகமும் திருநீறு குங்குமம் திருமண்ணை பூசுகிறோம் நெற்றியில் தொடர்ந்து திருநீறு விபூதி பிரசாதத்தை பூசுவதன் மூலம் குண்டலினி சக்தியை உயர்த்த முடியும் என்பதால் திருநீறு பூசப்படுகிறது.
மற்றவர்களின் பார்வையில் இருந்து வெளிப்படும் நல்ல சக்தியாய் இருந்தாலும் தீய சக்தியாக இருந்தாலும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் நம்மை கவர்ந்திழுக்கும் அவர்களை தன்னிலை இழக்க செய்து அவர்களின் எண்ணங்களை மாற்றி தன் வசப்படுத்துவதும் திருநீறு பூசிக் கொள்வதின் மூலம் எளிதில் செய்து விடலாம். மனோ தத்துவம் ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் போன்றவற்றிலும் மற்றவர்களின் பார்வையும் மன எண்ணங்களும் இடம்பெறுகிறது.
கண்ணேரு கண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் நம்மில் ஊடுருவதை தடுக்கவும் திருநீறு பூசப்படுகிறது. மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன்ஸ் சுரக்கும். பிட்யூட்டரி சுரப்பியை தூண்ட செய்யும் இடம் இந்த வெற்றி தான் அந்த இடத்தில் சந்தனமோ திருநீறோ பூசும்பொழுது உடலின் வெப்பம் குறைந்து சூடு தணியும் நீரில்லா நெற்றி பால் என்பார்கள் அதாவது திருநீறு பூசாத நெற்றி பால் அடைந்த நெற்றி என்கிறார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச் சென்ற உயிர்வளர்ப்பு முறையின் தொடக்கம் இந்த திருநீறு பூசுதல் இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் செயல்படும். மற்றவர்களை விட அதிகமாக சிந்திக்கலாம் மனம் ஒருநிலைப்படும் எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் காரிய சித்தி உருவாகும் இதை முறையாக செய்ய வேண்டும் அதனால்தான் திருநீறு பூசுவது மிகவும் அவசியமான ஒன்றாய் இருக்கிறது.
அனைத்து கோவில்களிலும் கொடுக்கும் விபூதி ஒரே விபூதி தான் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதுதான் இல்லை. மொத்தம் ஒன்பது வகையான விபூதிகள் இருக்கிறது.
கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம், இரட்சை, சாரம், பசுமம், பசிதம், விபூதி.
கல்பம் கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்சபிரம்ம மந்திரங்களால் சிவா அட்டையில் எரித்து எடுப்பதுதான் கல்பத்திருநீறு.
இதையும் படிக்கலாமே :ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்? யார் போக வேண்டும்?
அணுகல்பம் ஆரன்யங்களில் அதாவது காடுகளில் கிடைக்கும் பசும் சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத்திருநீறு.
உபகல்பம் மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தை காட்டுத்தீயில் எரித்து அதன் பிறகு சிவ அக்னியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு.
அகல்பம் அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை சுல்லிகளால் எரித்து எடுப்பது அகல்பத்திருநீறு,
இரட்சை திருநீறு சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சபசுக்களில் ஒன்றாகும். இந்த பசுவானது சிவனது ஈசானிய முகத்தில் இருந்து தோன்றியது அத்துடன் இந்த பசுவானது சிவப்பு நிறத்தை கொண்டு தான் இருக்கும் இந்த பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் திருநீறை தான் இரட்சை என்று அழைக்கப்படுகிறது.
சாரம்திருநீறு சுசிலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும் இந்த பசுவானது சிவனது தர்புருச முகத்தில் இருந்து தோன்றியதாகும் அத்துடன் இந்த பசுவானது வெண்மை நிறத்தினை கொண்டது இந்த பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்படுகிறது.
பசுமத் திருநீறு சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும் இந்த பசுவானது சிவனுடைய அகோர முகத்தில் இருந்து தோன்றியது இந்த பசு வெண்மை நிறத்தைக் கொண்டது. இந்த பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறே பசுமத்திருநீறு என்று அழைக்கப்படுகிறது.
பசிதத்திருநீறு பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்று இந்த பசுவானது சிவனது வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியது அத்துடன் இந்த பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்படுகிறது.
விபூதி தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இந்த பசுவானது சிவனது சத்யோ தோஷ முகத்தில் இருந்து தோன்றியது அத்துடன் இந்த பசுவானது கபில நிறத்தில் இருக்கும் இந்த பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்படுகிறது.
வட திசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் வலது கையின் ஆள்காட்டி விரல் நடுவிரல் மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீரை எடுத்து அண்ணாந்து நின்று பூசிக் கொள்ளும் போது திருச்சிற்றம்பலம் என்றும் சிவாயநம அல்லது சிவசிவா என்று உதடு பிரியாது மனம் ஒன்று சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்.
ஒன்று வெற்றி முழுவதும் அல்லது மூன்று கை படுக்கை வச கோடுகளாக திருநீரை பூச வேண்டும் காலை மாலையும் பூஜைக்கு முன்னும் பூஜைக்கு பின்னும் ஆலயம் செல்வதற்கு முன்னும் உறங்க போவதற்கு முன்பும் திருநீரை பூசிக்கொள்ளலாம் நெற்றியில் முழுவதும் பரவி பூசுவதை உத்தூளனம் என்று சொல்லுவார்கள். மூன்று படுக்கை வச கோடுகளாக பூசுவதை திரிகுண்டலம் என்று சொல்லுவார்கள்.
திருநீறை இந்த உடம்பில் எங்கெல்லாம் பூசிக்கொள்ளலாம்.
18 இடங்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள.
உச்சித்தலை நடுவில் நெற்றி மார்பு தொப்புளுக்கு சற்று மேல் இடது தோல் வலது தோல் இடது கையின் நடுவில் வலது கையின் நடுவில் இடது மணிக்கட்டு வலது மணிக்கட்டு இடது இடுப்பு வலது இடுப்பு இடது கால் நடுவில் வலது கால் நடுவில் முதுகுக்கு கீழே கழுத்து முழுவதும் வலது காதில் ஒரு பொட்டு இடது காதில் ஒரு பொட்டு.
திருநீறை பூசி கொள்வதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
தடையற்ற இறை சிந்தனை உயர்ந்த நற்குணங்கள் குறைவற்ற செல்வம் பெரியோர்களின் நல்வாக்கு நல்லோர்களின் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் ரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப்பட்டவைகளை ஒதுக்கும் மனப்பாங்கும் தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்து பெயர்களையும் அழைத்து பிறவிப் பிணி அறுத்து மோக்ஷம் செல்ல வழி காட்டும் இந்த விபூதி.