திரிபலா சூரணத்தின் பயன்கள்…!

திரிபலா சூரணம்.


திரிபலா சூரணத்தின் பயன்கள்…! திரிபலா சூரணம் என்பது  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்று சொல்லக்கூடிய ஒரு மூன்று மூலிகைகள் சேர்ந்தது.  கடுக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு அதன் மேற்பகுதி அதாவது சதையுடன் கூடிய தோல் பகுதி, தான்றிக்காய் தோல் பகுதியையும்  அதே மாதிரி நெல்லிக்காயிலும் உள்ளே  இருக்கக்கூடிய விதையை எடுத்துட்டு நெல்லி வற்றல்னு சொல்லிட்டு காயவைத்து அந்த நெல்லிக்காயோட வெளிப்புற பல்ப மட்டும் சேர்த்தோம். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்ததுதான் திரிபலா சூரணம் என்று சொல்லக் கூடியது.


இதையும் படிக்கலாமே:கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்


இதை ஒரு சர்வரோக நிவாரணி அப்படின்னு  சொல்லலாம். எல்லா நோய்களுக்குமே இது  ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். நீங்கள்  முடியிலிருந்து பாதம்வரைக்கும் பல நோய்களுக்கும் இது  ஒரு மருந்தாக இருக்கு. அப்படி என்னென்ன நோய்களுக்கு இதைப் பிரயோகிக்கலாம் என்றும்  அதை எப்படி பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்வோம்.

இப்போ உதாரணத்துக்குத் தலைமுடிக்கு திரிபலாவை இன்டெர்னலாவும் எடுத்துக்கலாம் எக்ஸ்டர்னலாவும் எடுத்துக்கலாம். திரிபலாவில் முடியை  ரிப்பேர் பண்றதுக்கான தன்மை அதிலே இருக்கு சோ முடி  பொலிவு இல்லாமல் இருக்கு சீக்கிரம் கொட்டுது அப்படிங்கறவங்க இரவில் திரிபலா சூரணத்தை எடுத்துக்கும்பொழுது முடி நல்லா வளரத்துக்கான வாய்ப்புகள் இருக்கு.

 நீங்கள் திருப்பலாவை உபயோக படுத்தி  ஹேர் வாஷ் பண்ணின பிறகு சூரணத்தை  தண்ணீரில் போட்டு நன்றாகக் குலுக்கிவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டில் போட்டு அதை  நீங்கள் தலை குளித்தபின்    முடியை நன்றாக பிரித்து பிரித்து ஸ்பிரே பண்ணிவிட்டு ஒரு பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். நன்றாகப் பொலபொலவென்று  ஷைனிங்கா இருக்கிறதை நம்மளால் பாக்க முடியும்.

 திரிபலா சூரணத்தை  மோரில் கலந்து முகத்தில் தடவினால்  சரியாக வாய்ப்புகள் இருக்கு

வாய்ப்புண்ணுக்கு

திரிபலா சூரணத்தை  வெதுவெதுப்பான தண்ணீரில்  ஒரு டீஸ்பூன் அளவிற்கு கலந்து வாய் கொப்பளித்தால் வாயில் இருக்கும் புண்கள் மற்றும் நாக்கில் தொண்டையில் இருக்கும் புண்கள் வலி ஆகியவை விரைவில் குணமாகும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினாலே வித்தியாசம் தெரியும்.

பற்கள்

பற்கள் நிறைய பேருக்கு ஆடும் அந்த மாதிரி இருக்கக்கூடியவர்கள் பற்றொடி மாதிரி நீங்கள் திரிபலா சூரனத்தை பயன்படுத்தும்பொழுது அந்தப் பற்கள் உறுதியாக மாறுவதை உங்களால்  பார்க்க முடியும். 

உடல் பருமனை குறைக்க திரிபலா சூரணத்தை உபயோகப்படுத்தலாம்.

இரண்டு விஷயம் 


இதையும் படிக்கலாமே: இன்சுலின் சுரப்பை தூண்டும் பத்து விதமான உணவுகள்


திரிபலா சூரணத்தின் பயன்கள்…!

ஒன்று  திரிபலா ஊரல் குடிநீர்

நீங்கள் காலையில் எழுந்தவுடனே ஒரு லிட்டர் தண்ணிரில்  2 ஸ்பூன் திரிபலா பவுடரை போட்டு நல்லா குலுக்கி எடுத்து வச்சிருங்கள். அதிலிருந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதாவது  9:00 மணியிலிருந்து 11, 12 மணிக்குள் ஒரு லிட்டர் தண்ணீரையும் நீங்கள் குடிச்சு முடிச்சிடனும். இந்த மாதிரி பண்ணும்பொழுது உங்களுடைய மெட்டபாலிசம் ரெகுலரைஸ் ஆகும். உங்களுக்குக் குடல் கழிவுகள் தங்காது அதனால் சீக்கிரம் உடல் இளைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு இது ஒரு முறை

இன்னொரு முறை

இரவில் மட்டும் திரிபலா சூரணம் அரை ஸ்பூன் ஹாட் வாட்டரில் கலந்து டீ மாதிரி குடிக்கிறது.   காலையில் உடனே உங்களைப் பாத்ரூம் போய் உங்களுடைய காலைக்கடனை முடிக்கிறதுக்கு உதவியாக இருக்கும்.

மலச்சிக்கல் இல்லாமல் பாத்துக்கும்

இதை  மாத்திரைகளாகவும் யூஸ் பண்ணலாம். நீங்கள் பூரணமாக யூஸ் பண்ற மாதிரி இருந்ததுனா ஒரு முக்கால் ஸ்பூன் வரைக்கும் தண்ணியில் போட்டு எடுத்துக்கலாம் டேப்லெட்டா யூஸ் பண்றீங்க அப்படின்னு சொன்னா ரெண்டு டேப்லெட் வரைக்கும் எடுத்துக்கறதுக்கு யூஸ் பண்ணி பழகிக்கலாம். நம்முடைய குடலுக்கு  அடிமையாகாது. என்ன காரணம்னா  திரிபலா அந்தக் காலத்தில்  நரை திரை மூப்பு என்பதெல்லாம் இல்லாமல் இருக்க உபயோகப்படுத்தி இருக்காங்க. 

திரை என்றால்  நமக்குக் கண்ணில் பொறை விழாமல் இருக்கறதுக்கும் முடி  நரைக்காமல் இருக்கிறதுக்கும் வயதாகாமல் இருக்குறதுக்கும் பயன்படுத்திய  மூலிகைகளில் ஒன்றுதான்  திரிபலா சூரணம்.

சர்க்கரை நோயாளிகள்

சாதாரணமாகத் திரிபலா சூரணத்தை எந்த நோய்க்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  சர்க்கரை நோயாளிகள் இரவில்  திரிபலா சூரணத்தை  வெந்நீரில் போட்டு எடுத்துக்கிட்டோம் என்று சொன்னால் ஆரம்பகால கட்டத்தில் இருக்கக்கூடிய சக்கரை நோயாளிகள் ஹெச்பி ஒன்ஸ் ஒரு ஆறிலிருந்து ஏழு குள்ள தான் இருக்கிறது அப்படிங்கிறவங்க திரிபலா சூரணத்தை மட்டுமே பயன்படுத்தி அவங்க நோயிலிருந்து கண்டிப்பாக அவங்களால் விடுபட முடியும்.

ஹீமோகுளோபின்

இதையும் படிக்கலாமே: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 வகையான உணவுகள்

திரிபலா சூரணத்தை  சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் ரொம்ப கம்மியாக இருக்கிறவர்கள்   திரிபலா சூரணத்தை  சாப்பிடுவதற்கு முன்னாடி காலையில் ஒரு அரை ஸ்பூன் இரவு ஒரு அரை ஸ்பூன் இன்க்ரீஸ் ஆகுறதை பார்க்க முடியும்.

சிறுகுடல் பெருங்குடல் எல்லாம்  புண் அதிகமாக இருக்கும் வயிற்றில் புண் அதிகமாக இருக்கும். அந்த லேயர்ஸ் எல்லாமே  அரிச்சிடுச்சுன்னு டாக்டர் சொல்லுவார். அந்த மாதிரி நியூக்கர்ஸ் லேயரை  திரும்ப ஃபார்ம் பண்றது நம்மளுடைய உணவுக் குழலிலிருந்து ஆசனவாய் வரைக்கும் இருக்கின்ற அந்த நியூக்கர்ஸ் லேயர் ஏரோசனைசரி பண்ணக்கூடிய தன்மை  திரிபலா சூரணத்துக்கு இருக்கிறது. இரவில் நீங்கள் திரிபலா சூரணம் யூஸ் பண்றது  நிச்சயமாக மூல நோயைக் குணப்படுத்தக்கூடிய தன்மை உடையதாக ஆகும்.

கால் வெடிப்பு

காலில் வெடிப்பு இருக்கக்கூடியவர்கள் திரிபலா சூரணத்தை    ஒரு  அகலமான பாத்திரத்தில்   போட்டு வெதுவெதுப்பான தண்ணிரை ஊற்றி கலந்து  உங்களுடைய காலை அதிலே  10 நிமிடங்கள் ஊற வைத்து அப்புறம் எடுத்து காலை கழுவி விடவும். இதுபோலத் தொடர்ந்து செய்து வந்தால் கால் வெடிப்பு சீக்கிரமாகச் சரியாவதை உங்களால் பார்க்க முடியும்

உங்களுடைய உடல் வாகை  சரி பண்ணக்கூடிய தன்மை திரிபலா சூரணத்துக்கு இருக்கிறது. உங்கள் உடலை வடிவமாகக் கொண்டு வருமே ஒழிய அவர்களை ரொம்ப ஒல்லியாக்கி உருக்குடைய மாதிரி செய்யறது திரிபலா சூரணத்தோட வேலை கிடையாது. முகத்தில் இருக்கக்கூடிய பிம்பிள்ஸ் எதுவுமே இருக்காது கூடவே பீரியட்ஸ் ரெகுலேட் ஆகும் இத்தனை விஷயங்கள் திரிபலா சூரணத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *