தமிழ்நாட்டின் முதல் 10 விவசாயம் சார்ந்த தொழில்கள்.
விவசாயத்தில் அதிக லாபம் தரக்கூடிய பத்து தொழில் ஆலோசனைகள்.
ஒன்று: ஆடு வளர்ப்பு
இரண்டு : தேனீ வளர்ப்பு
உங்களுக்கு நிறைய இடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய இடத்திலேயே அதாவது உங்களுடைய வீட்டிலேயே கூட தேனீ வளர்க்க முடியும். இதிலே கிடைக்கக்கூடிய தேனை நீங்கள் விற்பனை செய்வதன் மூலம் உங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும். இதை நீங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அதிக லாபத்தை சம்பாதிக்கலாம்.
இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்
மூன்று : காய்கறி விற்பனை
உங்களிடம் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அந்த நிலத்திலேயே நீங்கள் காய்கறிகளை பயிரிட்டு அதை விற்பனை செய்யலாம். விவசாய நிலம் இல்லை என்றாலும் கூட உங்களால் காய்கறியை விளைவிப்பவரிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கலாம். சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்வதாக இருந்தால் உள்ளூரிலும் சற்று பெரிய அளவில் வியாபாரம் செய்வதாக இருந்தால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் நீங்கள் பொருள் ஈட்டலாம். இப்பொழுது இன்டர்நெட் சேவை சுலபமாக இருப்பதினால் நீங்கள் வெளிநாட்டு வியாபாரம் பற்றி சுலபமாக தெரிந்து கொள்ளலாம். வெப்சைட் மூலம் ஆன்லைனில் தேடினால் நம்பிக்கையான இறக்குமதியாளர்கள் கிடைப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இங்கிருந்து வாங்கி விநியோகம் செய்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம்.
நான்கு : கோழி வளர்ப்பு
கோழிகளை வளர்ப்பதன் மூலம் உங்களுக்கு நிறைய வழிகளில் லாபம் கிடைக்கும். கோழிகளை வளர்த்தால் அதோட முட்டைகளை நீங்கள் விற்கலாம். அது மட்டும் இல்லாமல் குஞ்சுகளாகவும் இறைச்சிகளாகவும் விற்பனை செய்யலாம். இதுபோன்று நிறைய வழிகளில் உங்களுக்கு இந்த தொழிலில் லாபம் கிடைக்கும். கோழி வளர்ப்பதற்கு சிறிய இடமே போதுமானது. நிறைய கிராமத்து பெண்கள் வீட்டில் கோழி வளர்ப்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கின்றனர்.
ஐந்து : பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
உங்களிடம் ஆடு மற்றும் மாடுகள் இருந்தால் அதன் மூலம் வரும் பாலை பாலாக விற்பனை செய்யலாம் அல்லது தயிர், மோர், வெண்ணை, நெய், பன்னீர் போன்று மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம். உங்களிடம் அதிகமான ஆடு அல்லது மாடுகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு இருந்தால் கூட நீங்கள் எந்த தொழிலை ஆரம்பிக்கலாம். பால் அனைவருக்கும் தேவையா ஒரு பொருள் இதை விற்பனை செய்வது மிகவும் சுலபம். முன்பு அதிகமான ஆடுகள் மட்டும் மாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்து இருக்கும். ஆனால் இப்பொழுது நிறைய வீடுகளில் ஆடு மாடுகள் இல்லை. அதனால் நீங்கள் இந்த தொழிலை செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க
ஆறு : இயற்கை உரங்கள் விற்பனை
மக்கள் அனைவரும் இப்பொழுது இயற்கை விவசாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறனர். இந்த சூழ்நிலையில் இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபத்தை ஈட்டலாம்.இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கு அரசாங்கத்தில் நிறைய சலுகைகள் இருக்கிறது. இந்த இயற்கை உரங்கள் தயார் செய்வதற்கு சிறிய அளவிலான இடம் போதுமானது. இயற்கை உரங்களை நகர்ப்புறங்களில் உள்ளவர்களும் விரும்பி வாங்கி மாடித்தோட்டங்களை அமைத்து சொந்தமாக காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். அதிகப்படியான லாபம் பெற இயற்கை உரங்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
ஏழு : இயற்கை விவசாயம்.
இயற்கை விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை நீங்கள் விற்பனை செய்யலாம். மக்கள் இப்பொழுது எல்லாம் இயற்கை பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள். அதனால் உங்களுக்கு இந்த விளைபொருட்கள் நன்றாக விற்பனை ஆகும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை மதிப்புகூட்டியும் விற்பனை செய்யலாம். வினியோகஸ்தர்கள் மூலமும் விற்பனை செய்யலாம். இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
எட்டு : காளான் வளர்ப்பு
கிராமங்களில் அதிக அளவில் இல்லையென்றாலும் நகர்புறங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் காளான் அதிக அளவில் விற்பனையாகிறது. அதிகமான நபர்கள் இப்பொழுது மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாக காளான் விளங்குகிறது. காளான் வளர்க்க குறைந்த அளவு இடவசதி இருந்தால் போதும். வீட்டிலே கூட காளான் வளர்க்கலாம். 23 நாட்களிலேயே முழு வளர்ச்சியடைந்து விடும்.முதலீடும் அதிகமாக தேவைப்படாது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்
ஒன்பது : பூக்கள் வளர்ப்பு
உங்களிடம் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அந்த நிலத்தில் நீங்கள் பூக்களை பயிரிட்டு அதை விற்பனை செய்யலாம். விவசாய நிலம் இல்லையென்றாலும் பரவாயில்லை பூக்கள் விவசாயம் செய்பவர்களிடம் வாங்கி நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்யலாம். நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பூக்கள் அனைவரும் விரும்பி வாங்கும் பொருள்.
பத்து : மீன் வளர்ப்பு
அசைவ உணவில் மிக முக்கியமான உணவு மீன். மீனிற்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கும். மீன் தொட்டிகளிலோ அல்லது சிறு குட்டைகளிலோ வளர்த்து விற்பனை செய்யலாம். மீனை நேரடியாகவோ அல்லது வியாபாரியிடமோ விற்பனை செய்யலாம். மீன் வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும்.