சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்

 சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்.

Top 10 Health Benefits of Chayote Squash(chow chow) in Tamil.

காய்கறிகளில் ஒரு சில காய்கறிகள் மட்டும் தான் நம் உடலில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். அந்த வகையில மிக முக்கியமான ஒரு காய் சௌசௌ. இதற்கு வெஜிடபிள் பியர் சயோஸ்குவாஸ் மிர்லிடன் என வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது.  சாப்பிடுவதற்கு சற்று சவ சவ என்று இருக்கிறதினால் பலராலும் விரும்பப்படாத காயாக இருக்கிறது.


இந்த சௌசௌவில் இருக்கக்கூடிய சத்துக்களும் மருத்துவ குணங்களும் மிகவும் அதிகம். சௌசௌ சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இதன் மருத்துவ பயன்கள் தெரிந்தால் கண்டிப்பாக சௌசௌ வை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள். 


சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


ஒன்று : உடல் எடையை குறைக்கும். 


உடல் எடையை குறைக்க டயட் ஃபாலோ பண்றவங்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு காய் சௌசௌ. காய்கறிகளிலேயே சௌசௌவுடைய கலோரிகள் மிக மிகக் குறைவு 100 கிராம் சௌசௌவில் வெறும் 19 கலோரிகள் தான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் நார்ச்சத்து மிகவும் அதிகம் 100 கிராம் சௌசௌவில் 1.7 கிராம் டைட்டரி ஃபைபர் இருக்கிறது. இது நன்றாக வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுப்பதோடு நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலமாக உடல் எடையை குறைப்பதற்கு உதவக்கூடிய ஒரு காய் சௌசௌ.


இரண்டு : ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்


 சௌசௌவில் இருக்கக்கூடிய ஒரு சில கெமிக்கல் காம்போனென்ஸ்  இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகப்படுத்தும். இதனால் இன்சுலின் வேலை செய்யாத நிலையை குறைக்கக்கூடியது சௌசௌ. 


 டைப்2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதொரு காய். இன்னும் கரையக்கூடிய நார்ச்சத்து மிக அதிகம் இது உணவின் மூலமாக வரக்கூடிய ரத்த சர்க்கரையை வெகுவாக குறைக்கும். சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறவர்கள் தினசரி உணவில் சௌசௌவை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. 


இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்


மூன்று : மாரடைப்பு வராமல் தடுக்கும்.




பொதுவாக ரத்தத்தில் ஹோமோ சிஸ்டின் அளவு அதிகம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆனால் சௌசௌவில் இருக்கக்கூடிய வாலிபனால் மட்டும் பைட்டோ கெமிக்கல்ஸ் போன்ற சத்துக்கள் பாத்தினா ஹோமோ சிஸ்டின் அளவை சீராக வைக்க உதவி செய்வதோடு மாரடைப்பு வர விடாமல் தடுக்கிறது. மேலும் இதில் மிர்சிடின் என்னும் ஒரு வகை ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது இது இதயத்தை பாதிக்கக்கூடிய காரணிகளை தடுப்பதோடு ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும் இதன் மூலமாக இதே ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கூடியது இந்த சௌசௌ.


நான்கு : ரத்த சோகை வர விடாமல்  தடுக்கும் 


உடலில் ரத்த உற்பத்திக்கு தேவையான அயன் விட்டமின் பி2 விட்டமின் பி9 போன்ற அடிப்படை சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காய் சௌசௌ. இது புதிய சிவப்பணுக்களை உற்பத்திக்கு உதவி செய்வதோடு அனிமல்ஸ் என்று சொல்லக்கூடிய இரத்த சோகை வராமலும் தடுக்கும்.அனிமியா பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. 


ஐந்து : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விட்டமின் சி சத்து மிகவும் அவசியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இந்த விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ள காய்களில் மிக முக்கியமான காய் சௌசௌ. 100 கிராம் சௌசௌவில் 7.7 மில்லி கிராம் விட்டமின் சி சத்து இருக்கும். இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க உதவி செய்வது மட்டும் இல்லாமல் பல்வேறு விதமான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது.


இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.


ஆறுகல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


 



கல்லீரலில் வரக்கூடிய பிரச்சினைகளிலேயே மிக முக்கியமான பிரச்சனை  பேட்டரி லிவர் என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் தான் ரத்தத்தில் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பதன் விளைவாகவும் உடலில் பேட்மிட்டபாலிசம் சீராக நடைபெறாததன் விளைவாகவும் கல்லீரல் கொழுப்புகள் படியும். ஆனால் சௌசௌவுவை அடிக்கடி உணவு சேர்த்துக் கொள்ளும்போது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமில்லாமல் கல்லீரல் கொழுப்புகள் படிவதையும் தடுக்கிறது. மேலும் கல்லீரல் செயல்பாட்டையும் அதிகரிக்க கூடியது சௌசௌ. 


ஏழு : கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. 




கர்ப்ப காலங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான ஃபோலேட் என்று சொல்லக்கூடிய விட்டமின் பி9 போலிக் அமிலம்.  சௌசௌவில்  ஃபோலேட் அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சௌசௌவில் 93 மைக்ரோகிராம் ஃபோலேட் நிறைந்திருக்கு இந்த ஃபோலேட் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் 100 கிராம் சௌசௌவுவை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஒரு நாளைக்கு தேவையான 40% ஃபோலேட் சத்தை இயற்கையாக எளிதாக  பெற முடியும்.


எட்டு ; புற்று நோய் வராமல் தடுக்கும்.


சௌசௌவில்  இயற்கையாகவே அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி கேன்சர் பிராப்பர்டீஸ் நிறைந்திருக்கிறது. ஃப்ரீ ராடிகல்ஸ் னால் உடலில் செல்கள் சேதம் அடைவதை தடுப்பதோடு செல்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்ககூடியது சௌசௌ. மேலும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி போன்ற ஆன்டிஆக்சன் கேன்சர் செல்களின் வளர்ச்சி தடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் வராமலும் தடுக்கக்கூடியது சௌசௌ.


இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க


ஒன்பது: சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் 




சௌசௌவில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சௌசௌவில் 125 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது ஒரு சிறந்த டைருட்டிக்காக செயல்படுவது மட்டுமில்லாமல் சிறுநீரகங்களில் கற்கள் உருவாமல் தடுக்கிறது. மேலும் 94% வரை நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய் சௌசௌ. இது உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் வைத்து கொள்வது மட்டுமில்லாமல் சிறுநீர் நன்கு பிரிவதற்கு உதவியாக செயல்படும். இதன் மூலமாக சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கக்கூடியது சௌசௌ.


பத்து: மலச்சிக்கலை நீக்கும்.



மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாமல் இருப்பதுதான். ஒரு சௌசௌவில் 3.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 14% நார்ச்சத்து. இது குடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோடு மலம் எளிதில் வெளியேறவும் உதவி செய்கிறது.  மலச்சிக்கல் வராமல் பாதுகாக்க கூடியது சௌசௌ.


சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *