செல்வத்தை அழிக்கும் வீட்டில் வளர்க்க கூடாத மரம் செடி கொடிகள்.
எந்த குறையும் இல்லாமல் செல்வங்கள் சேர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால் நமக்கு நடக்கிறது எல்லாம் வீட்டில் சண்டை சச்சரவு கடன் சுமை அதிகரிக்கிறதும் காரணமே இல்லாமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை செல்வதுமாக தான் இருக்கும்.
இதற்கு காரணம் நாம் சாதாரண மரம் செடி கொடி என்று நினைக்கின்ற தாவரங்கள். தாவரங்களுக்கு எதிர்மறை சக்திகள் அதிக அளவில் இருக்கும். உங்கள் வீட்டில் கஷ்டங்களும் அடிக்கடி கெட்ட விஷயங்களும் மட்டுமே நடக்கிறது என்றால் வைக்க கூடாத மரம் செடி கொடிகள் அருகில் இருப்பது தான் காரணம்.
அகஸ்த்திய முனிவர் சில மரங்களுடைய பெயர்களை குறிப்பிட்டு இந்த மரங்களை வீட்டில் வளர்க்கவே கூடாது என்று சொல்லி இருக்கிறார். வாஸ்து சாஸ்திரத்தின் படி கஷ்டத்தையும் கடனையும் கொடுக்கக்கூடிய துரதிஷ்ட மரம் செடி கொடிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.அப்படிப்பட்ட துரதிஷ்ட மரங்கள் உங்களுடைய வீட்டில் இருந்தால் அந்த மரங்களை அகற்றி விடுங்கள்.
சொந்தமாக ஒரு வீடு கட்டுவது தான் ஒரு மனிதனுடைய வாழ்நாள் லட்சியமாக இருக்கும். நாம் மிகவும் விரும்பி கட்டிய வீட்டில் அழகுக்காகவும் ஆசைக்காகவும் நிறைய செடி கொடிகள் வாங்கி வளர்ப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி அகஸ்தியர் கூற்றுப்படியும் வீட்டில் வளர்க்க கூடாது என்று சொன்ன மரம் செடி கொடிகளை வளர்த்து வந்தால் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படும். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை சென்று வருவர். வருமானம் கையிலையே தங்காது. கடன் தொல்லையினால் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த வீட்டை இழக்கும் சூழ்நிலை கூட உருவாகும். அப்படிப்பட்ட மரங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு எதனால் அந்த மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
முள் செடிகள்
பொதுவாக இப்பொழுது நிறைய பேருடைய வீட்டு வாசலிலேயும் அலுவலக மேஜைகளிலும் கள்ளிச் செடிகள் என்று சொல்கின்ற முள் செடிகளை அழகுக்காகவும் கண் திருஷ்டிக்காகவும் வளர்த்து வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கூர்மையான முள் செடிகளை வளர்க்கிறது மூலமாக அந்த செடிகளை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தமும் குழப்பமான பதட்டத்தையும் தான் ஏற்படுத்தும். கள்ளிச்செடிகளுக்கு எதிர்மறையாற்றல் அதிக அளவில் இருக்கிறதினால் மோசமான சக்திகளை கொண்டுவரும். மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுபோல கற்றாழை செடியும் ஒரு துரதிஷ்ட செடியாக பார்க்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் அதிகம் இருந்தாலும் வீட்டு வாசலில் வைக்கிறது மூலமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
இரண்டு : மூங்கில்
பச்சை பசேல் என்று கண்ணை கவரும் விதத்தில் பாதுகாப்பான முட்களோடு இருப்பதால் நிறைய பேர் வீட்டை சுற்றி வேலி போல வளர்த்து வருகின்றனர். ஆனால் வாஸ்துபடி மூங்கில் மரம் வீட்டில் பல சிக்கல்களை உண்டு பண்ணும் துரதிஷ்டம் வாய்ந்த ஒரு மரமாகவும் பார்க்கப்படுகிறது. நம்முடைய ஹிந்து மதத்தில் இந்த மரத்தை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் ஒரு வீட்டில் யாராவது இறந்து போனால் பாடைகட்ட மூங்கில் மயத்தை பயன்படுத்துவார்கள். கெட்ட காரியத்திற்கு தான் மூங்கில் நம் வீட்டிற்கு வர வேண்டும் மற்ற சமயத்தில் மூங்கில் மரம் நம் வீட்டில் இருந்தால் எப்பொழுதும் வீட்டில் அழுகை சப்தத்தை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். அதனால் அழகுக்காக மூங்கில் மரம் வளர்த்தாலும் இனிமேல் அப்படி ஒரு தவறு செய்யாதீர்கள்.
மூன்று :அரசமரம்
பொதுவாக பிள்ளையார் கோவில்களிலும் ஆற்றங்கரை குளக்கரைகளிலும் இருக்கும் அரச மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால் நல்ல சக்திகளை வீட்டுக்குள்ளே கொண்டு வரும் என்று நிறைய பேர் அரச மரத்தை வீட்டில் வளர்த்து வருகின்றனர். அது தவறு, வீட்டில் அரச மரம் இருந்தால் பணவிரையம் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அதனால் அதை எடுத்து போய் கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும் நட்டு வைத்து விட வேண்டும். இதனால் பண விரயம் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அரச மரத்தை சுற்றினால் அதிகமான நன்மைகள் இருக்கிறது. ஆனால் அதே நேரம் வீட்டில் இருந்தால் அந்த அளவுக்கு கெடுதலும் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்
நான்கு : புளியமரம்
நம் வீட்டிலோ அல்லது நமக்கு பக்கத்தில் இருக்கும் இடத்திலோ புளியமரம் வளர்த்து வந்தால் அந்த வீட்டோட மகிழ்ச்சியும் சந்தோஷமும் புளிப்பா மாறிடும் என்று சொல்லி புளிய மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். புளிய மரத்தில் எதிர்மறை ஆற்றல் (Negative Energy) அதிகமாக இருக்கும் அதனால் பேய் பிசாசுகள் எல்லாம் புளிய மரத்தில் தங்கி இருக்கும். உச்சி கால நேரத்திலும் ராத்திரி நேரத்திலும் புளிய மரம் அருகில் போக கூடாது என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். புளியமரம் இருக்கின்ற இடத்தில் புதிதாக ஒரு வீடோ அல்லது கோவிலோ கட்ட மாட்டார்கள். அந்த இடத்தில் அதிக அளவில் எதிர்மறையாற்றலும் தீயவைகளை தனக்குள்ளே தக்கவைக்கக்கூடிய சக்தியும் இருக்கும். சாலை ஓரத்தில் புளியமரத்தில் மோதிதான் அதிக வண்டிகள் விபத்திற்கு உள்ளாகும்.
கிராமத்தில் இருக்கிறவர்கள் வீட்டில் கண்டிப்பாக புளியமரம் இருக்கும். உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் உடல் பிரச்சினை இருந்தால் உடனே புளியமரத்தை வெட்டி விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக மாற்றங்கள் நடக்கும்.
ஐந்து : தென்னை மரங்கள்
தென்னை மரங்கள் ஒற்றைப்படை வரிசையில் வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் இரட்டை படை வரிசையில் தான் தென்னை மரங்களை வளர்க்க வேண்டும். ஒற்றைப்படை வரிசையில் தென்னை மரங்கள் இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். வீட்டில் பேரிச்சை மரங்கள் வளர்ந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும்.
ஆறு : பனைமரம்
பனைமரம் இருக்கின்ற வீட்டில் பணம் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். அதோடு தலைக்கு மேல் கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பனைமரம் வீட்டுக்குள்ளே இருந்தால் குடும்பத்தில் இருக்கின்ற நபர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
விரைவில் வாடி போகின்ற எந்த செடியையும் நம் வீட்டில் வளர்க்க கூடாது. பஞ்சு போன்ற செடிகளை தெரியாமல் கூட வீட்டில் வளர்க்காதீர்கள். அந்த செடி எப்படி சீக்கிரம் காய்ந்து போகிறதோ அதே போல் நம் குடும்பமும் செழிப்பாக இல்லாமல் ஒளி இழந்து போகும் என்று சொல்லி இருக்காங்க.
இலந்தை மரத்தையும் நம் வீட்டில் தவறுதலாக கூட வளர்க்க கூடாது. காடு போன்ற இடத்தில் தான் இலந்தை மரங்கள் வளர்க்க வேண்டும். இலந்தை மரங்களை வளர்ப்பவர்கள் தனக்குத்தானே அவர்கள் வறுமைய தேடுகிறார்கள். அதோடு அவர்கள் வீட்டு அமைதியையும் இலந்தை மரம் சீர்குலைக்கும்
இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்
போன்சாய்
அழகுக்காக மரம் மாதிரியே ரொம்ப சிறிய அளவில் இருக்கக்கூடிய போன்சாய் மரங்களையும் வீட்டில் வளர்க்கக்கூடாத ஒரு தாவர வகை என்று சொல்லியிருக்கின்றனர். இந்த வகை தாவரங்களை வீட்டுக்குள்ளே வளர்க்காமல் வெளியே வைத்து வளர்ப்பது தான் நல்லது. வெறும் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படும் இந்த வகை தாவரங்களை வீட்டில் வடக்கு திசையில் எப்பவுமே வைக்கக்கூடாது. இந்த மாதிரியான போன்சாய் மரங்களைத் தவிர மற்ற சின்ன சின்ன செடிகளை வீட்டுக்குள்ளே வடக்கு திசையில் வைத்து வளர்க்கலாம். அதேபோல் வீட்டோட கிழக்கு திசையில் அதிக உயரம் உள்ள மரங்களையும் பருமன் உள்ள மரங்களையும் கட்டாயம் வளர்க்கக்கூடாது.
நம் வீட்டில் வளர்க்கின்ற மரங்களும் செடிகளும் பட்டு போயிருந்தாலோ அல்லது காய்ந்து போய் இருந்தாலோ அதை உடனே வெட்டி எடுத்து விடுவது நல்லது. முறையான பராமரிப்பு இல்லாமல் வாடிப்போன பூக்களைம் இலைகளையும் உடனே வெட்டி விடவேண்டும். அதை அப்படியே விட்டு விட்டால் வீட்டில் இருப்பவர்களுடைய மனநிம்மதி சீர்குழைந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷமான மனநிலை இருக்காது. வீட்டில் வளர்க்க கூடாத தாவரமும் வீட்டிற்கு உள்ளேயும் வீட்டை சுத்தி கட்டாயமாக வைக்க கூடாதுன்னு சொல்றாங்க அது மட்டும் இல்லாம அத்திமரம் விளாம்பரம் பனைமரம் வாகை எட்டி எறுக்கு மரம் ஆமணக்கு ஆலமரம் நாவல் மரத்தையும் நம் வீட்டில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது.
அகத்தியர் குணசுருட்டு நூலில் குறிப்பிட்டுள்ள வீட்டில் கட்டாயம் வளர்க்கவே கூடாத 17 வகையான மரம் செடி கொடிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.பருத்தி மரம், அகத்தி மரம், பனை மரம், நாவல் மரம், அத்திமரம், எறுக்கு மரம், வெள்ளெருக்கு மரம், புளிய மரம், கருவேலன் மரம், முருங்கை மரம், கல்யாண முருங்கை மரம், கல்லி மரம், கரு ஊமத்தை மரம், இலவம் மரம், வில்வம் மரம், ருத்ராட்ச மரம் உதிர வேங்கை மரம்ஆகிய எல்லா செடிகளுமே வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்.