செலவில்லாத இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து நிறைந்த செலவில்லாத இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

(Dry leaf compost)

செடிகள் செழித்து வளரத் தொழு உரம் மண்புழு உரம் என்று பல வகை இயற்கை உரங்களைப் பயன்படுத்துறோம். இதையும் பலர் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாகச் சிட்டி ஏரியாவில் இருக்கிறவர்களுக்கு தொழு உரம் மண்புழு உரம் எளிதாகக் கிடைக்கிறது இல்லை. இதற்காக ஏதாவது ஒரு நர்சரியை தேடி போய் தான் வாங்க வேண்டி இருக்கிறது. செலவில்லாத இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

ஆனால் இந்த இயற்கை உரங்களுக்கு மாற்றாக இன்னொரு இயற்கை உரமும் இருக்கிறது. இதைத் தேடி எங்கேயும் போக வேண்டியது இல்லை. இதை விலை கொடுத்து வாங்க வேண்டியதும் இல்லை. தலை சத்து மணி சத்து சாம்பல் சத்து என்று செடிகள் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய மூன்று சத்துக்களும் இதிலே இருக்கிறது.

இந்த இடத்தைச் சிட்டி சைடில் உள்ளவர்களும் பைசா செலவில்லாமலும் எந்தவித அலைச்சலும் இல்லாமலும் வீட்டிலேயே எளிதாகத் தயாரித்து வருஷம் முழுவதும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். . காடுகளில் வளரும் தாவரங்கள் செழித்து வளரக் காரணம் என்ன? அதற்கு யார் உரம் கொடுப்பது என்று பார்த்தால் அதற்கு உரமே அந்தக் காடுகளில் உள்ள தாவரங்களின் இலைகள் தான். இலைகள் உதிர்ந்து மண்ணின் மேற்பரப்பில் விழுந்து இது நாளடைவில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மண்ணோடு மண்ணாகி சிறந்த உரமாகத் தாவரங்களுக்குக் கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே: நடவு முதல் அறுவடை வரைக்கும் இஞ்சி சாகுபடி முறை

இதே முறையைத் தான் நமது வீட்டில் பின்பற்றி ஹோம் மேட் டிரைலர் தயாரிக்கப்படும். இதற்குத் தேவையானவை என்னென்ன இதை எப்படி தயாரிப்பது? எப்படி ஸ்டோர் பண்ணி வைப்பது? எத்தனை நாளைக்கு ஒருமுறை செடிகளுக்குக் கொடுப்பது? எந்தெந்த செடிகளுக்குக் கொடுக்கணும்? எந்தெந்த செடிகளுக்குக் கொடுக்கக் கூடாது? போன்ற விவரங்களையும் இப்பொழுது நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

முதலில் இதற்குத் தேவையானது ஒரு பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டி இருந்தால் கூடப் போதும். அந்த அளவை பொறுத்து அது பிடிக்கிற அளவை தான் எடுத்துக்கலாம். இந்தக் கண்டைனருக்கு கீழே ஒரு நாலு ஹோல்ஸ் போட்டு வச்சுக்கோங்க. அடுத்தது நமக்குத் தேவையானது இலை தலைகள். இந்த இலை தழைகளை தேடி நாம் எங்கேயும் போக வேண்டியது இல்லை.

நம்முடைய தோட்டத்தில் உள்ள காய்ந்த இலை சருவுகள் புரூடிங் பண்ணின கிளைகளில் உள்ள இலைகள் அல்லது அறுவடை முடிந்த செடிகளின் இலைகள் என்று எந்தத் தாவரத்தின் கிளைகளாக இருந்தாலும் பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலை, மா இலை, பாதாம் இலை, கொய்யா இலைகள் போன்றவற்றில் கால்சியம் அதிகம் இருக்கிறது. இப்படிப்பட்ட இலைகளைச் சேர்க்கும்போது நாம் தயாரிக்கும் கம்போஸ்ட் அதிக தரமானதாக இருக்கும்.

இதிலே கவனிக்க வேண்டியது நோய் தாக்குதல் ஏற்பட்ட இலைகள், மாவு பூச்சியுள்ள இலைகள், பூச்சிகள் முட்டை வைத்த இலைகள் இவற்றையெல்லாம் இதற்குப் பயன்படுத்தக் கூடாது. காரணம் என்னவென்றால் இதன் இலைகள் மக்கினாலும் விதைகள் அப்படியே இருக்கும்.

இது உரத்தோடு இருப்பதினால் உரம் பயன்படுத்தும்போது தேவை இல்லாமல் இது மற்ற செடிகளுக்கும் நோய் பரவும் அதனால் இதைத் தவிர்க்க வேண்டும்.   தோட்டத்தில் கொய்யா மரத்திலிருந்து கீழே விழுந்த கொஞ்சம் இலைகள்  மற்ற செடிகளின் இலைகள்.

இதையும் படிக்கலாமே: இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை

முதலில் இதில் உள்ள குச்சிகள் மற்றும் கட்டைகளை எடுத்திடனும். இலைகள் மக்கிய பிறகும் குச்சிகள் மக்க வெகுநாட்கள் ஆகும். அதனால் இந்தக் குச்சிகள் சிறிய கட்டைகளை எடுத்திடலாம்.

அடுத்தது பூச்சிகள் இருக்கான்னு பார்க்கணும் மரத்துக்குக் கீழே இருக்கின்ற தலைகளோட ரயில் பூச்சி மரவட்டை போன்றவையெல்லாம் இருக்கும். இது எல்லாத்தையும் எடுத்துவிட்டு தான் நாம் இலைகளைக் கம்போஸ்ட் பண்ண வேண்டும்.  ஒரு பக்கெட்டில் கொஞ்சம் தோட்ட மண் எடுத்துக்கணும். தயாரிக்கின்ற கண்டெய்னரில் நாம் வைத்து இருக்கின்ற  இலைகளை ஒரு லேயர் போடணும். பிறகு இலைகள்மேல் ஒரு லேயர் தோட்டம் மண் போடணும். இதே போல ஒரு லேயர் காய்ந்த இலைகள் ஒரு லேயர் தோட்டமண் என்று கண்டெய்னரில் முக்கால் பாகம் போட்டு நிரப்ப வேண்டும்.

பிறகு கொஞ்சம் லேசாகத் தண்ணீர் தெளித்து கண்டெய்னரை ஒரு மூடி போட்டு மூடி வைக்கலாம். கண்டெய்னர் வச்சிருக்கிற இடத்தைச் சுற்றி எரும்பு மருந்து போட்டு வைக்கணும். ஏனென்றால் இந்த இலைகளை மண்ணோட நாம் தண்ணீர் தெளித்து மூடி வைக்கிறதுனால் எறும்புகள் இந்தக் குளிர்ந்த இடத்துக்கு வந்து குடியேறிவிடும். அதிலை கருப்பு எறும்பு இருந்தாங பரவாயில்லை கடிக்காது. இந்தச் சிகப்பு எறும்புகள் இருந்தால் நாம கிட்டயே நெருங்க முடியாது. இந்த எறும்பு போடுற சாம்பலோட கலந்தே நாம் பயன்படுத்தலாம்.  பத்து நாட்களுக்குப் பிறகு திறந்து பார்த்தால்

நாம் நிரப்பி வைத்திருக்கும் இலைகள் சருகுகள் நாலு இன்ச் அளவுக்குக் கீழே இறங்கி இருக்கும். இதிலிருந்து நம்முடைய கம்போஸ்ட் நன்றாகப் பிராசஸ் ஆகுது ங தெரிஞ்சுக்கலாம். இந்த ப்ராசசை இன்னும் விரைவுப்படுத்த இதனுடன் நன்றாகப் புளித்த தயிரை சேர்க்கலாம். இப்பொழுது கம்போஸ்டை அடிப்பாகம் வரை கிளறி அதனுடன் நன்றாகப் புளித்த தயிரை சேர்க்கும்போது நுண்ணுயிர்கள் பல மடங்கு பெருகி தரமான உரம் கிடைக்கும். இதனுடன் டீ தூள் மற்றும் முட்டை ஓடு இருந்தாலும் சேர்க்கலாம். இதெல்லாம் நன்றாகக் கம்போஸ்ட் ஆகி 50 லிருந்து 60 நாட்களில் நமக்குத் தரமான உரம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கறவை மாடுகளுக்கு ஏற்படும் காய்ச்சல் நோய்

இப்பொழுது தயாராகி இருக்கும் உரத்தைக் கீழே கொட்டி அதிலிருக்கும் கற்கள் மற்றும் குச்சிகளை எடுத்து விட்டு சல்லடையில் போட்டு நன்றாகச் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

நமக்கு எந்தவித அலைச்சலும் இல்லாமல் பைசா செலவும் இல்லாமல் நம்முடைய வீட்டிலேயே தயாரித்த தரமான கம்போஸ்ட் உரம் கிடைத்திருக்கிறது. இதை 15 நாளைக்கு ஒரு முறை செடிகளுக்குக் கொடுக்கலாம். ஒரு வருஷம் வைத்திருந்து இதைப் பயன்படுத்தலாம். இந்த உரத்தை நாற்றுகளுக்கு பயன்படுத்தக் கூடாது. செடிகள் ஒரு நாலு இன்ச் 5 இன்ச் வளர்ந்த பிறகு பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *