செய்யக்கூடாத இந்த பாவங்களை எல்லாம் ஒருபோதும் செய்து விடாதே!! ஆன்மீக ரகசியங்கள்! Tamil Spiritual Stories.
அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எதை செய்ய வேண்டும் எதையெல்லாம் செய்யவே கூடாது அப்படி செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறி மனிதனை நல்வழிப்படுத்தி எந்த பாவங்களும் செய்யாமல் இறைவனை அடையும் வழியை ஏற்படுத்தித் தரும். நமது சாஸ்திரங்கள் கூறும் ரகசியங்கள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
- ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சன்னியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.
- இது மிகப்பெரும் புண்ணியமாகும்.
- இருட்டில் சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரிய பகவானை மனதார தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
- சகோதரன் அல்லது சகோதரி வறுமையுடன் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
- சாப்பிட்டவுடன் திருமணம் ஆன குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும்.
- வெற்றிலை நுனியில் பாவமும் முனையில் நோயும் நரம்பில் புத்தி குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட்டு போட வேண்டும்.
- சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனையோ வெறும் பாக்கை மட்டுமோ போடக்கூடாது.
- வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
- மனைவி கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர கணவன் மனைவிக்கும், மகன் தாய்க்கும், பெண் தந்தைக்கும் மடித்து தரக் கூடாது.
- தலையையோ உடம்பையோ வலது கையினால் மட்டுமே சொரிய வேண்டும் இரண்டு கைகளாலும் சொரிய கூடாது இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது வலது உள்ளங்கையில் என்னை ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
- குரு ஜோதிடர் வைத்தியர் சகோதரி வீடு கோவில் இங்கே எல்லாம் செல்லும்போது வெறும் கையுடன் செல்லக்கூடாது.
- தலை வாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, பாய் விரித்தோ, தரையிலோ படுக்க கூடாது.
- மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டன் சில்லி இவற்றின் மீது நிற்கக்கூடாது.
- வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
- பேசும்போது ஏதாவது துரும்பை கிள்ளி போடக்கூடாது.
- வடக்கிலும் கோண திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
- ஈர காலுடன் படுக்கக் கூடாது.
- ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்து கழுவ கூடாது.
- தீ உள்ள பொருட்களை தரைமேல் போட்டு காலால் தேய்க்க கூடாது. இதனால் பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு பூமி மனை கிடைக்காமல் போய்விடும்.
- பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளவே கூடாது.
- பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிரசித்தமே இல்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.
- ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரீம் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
- அங்க ஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வி இல்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்தி காட்டி பேசக்கூடாது.
- பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்க கூடாது.
- குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ளக்கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது.
- துணி இல்லாமல் குளிக்க கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
- கன்றுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது.
- மழை பெய்யும் போது ஓடக்கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
- திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுப காரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. நெருப்பை வாயால் ஊதக்கூடாது. சாப்பிடும்போது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.
- கோவணம் இன்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.
- பசு, தேர், நெய்குளம், அரசமரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறிப்பிட்டால் வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது.
- தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
- பகலில் உறங்குவது உடலுறவு கொள்வது கூடாது.
- பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமல் இருப்பது பாவமாகும்.
- பசுமாட்டை கோமாதாவாக எண்ணி சகல தேவர்களையும் திருப்தி பட வைப்பதற்கு அம் மாட்டுக்கு பொன் தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியமாகும்.
- அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, ஆசிரியர், மாணவர் கணவர் மனைவி, குழந்தை, தாய், பசு, கன்று இவர்களுக்கு இடையில் செல்லக்கூடாது.
- இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது.
- இடது கையால் சாப்பாடு போட்டுக்கொள்ள கூடாது.
- இடது கையால் படுக்கையை விரிக்கக் கூடாது.
- தலையையோ உடம்பையோ வலது கையினால் மட்டுமே சொரிய வேண்டும்.
- இரண்டு கைகளாலும் சொரிய கூடாது.
- பிணப்புகை, இளவெயில், தீப நிழல் இவை நம் மீது படக்கூடாது.
- வீட்டுக்குள் நுழையும் போது தலைவாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்.
- நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.