சிவப்பு அவலின் மருத்துவ பயன்கள்

(Top 7 Health Benefits of Red Rice Flakes in Tamil)

1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நம் அனைவர் வீடுகளிலும் முக்கிய இடம்பெற்று இருந்த ஒரு ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் என்றால் இந்தஅவல்தான் அரிசிநெல்லை ஊறவைத்து இடித்து தட்டையாக்கி பெறப்படுவதுதான் அரிசி அவல். அரிசி அவலில் போகா, பிளாட்டர் ரைஸ், ரைஸ் ப்ளக் என பல பெயர்களில் அழைப்பார்கள். பொதுவாக அவல் வெள்ளை அவல் சிவப்புஅவல் என இரண்டு வகையான அவல் இருக்கிறது. இதில் வெள்ளை நிற அவலை விடவும் சிவப்பு அவலில் தான் சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகம்.

சிவப்பு அரிசியிலிருந்து பெறக்கூடிய சிவப்பு அவலில்  அதிகப்படியான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் விட்டமின் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும்  அதிகப்படியான நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த சிகப்பு அவலை சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக்கூடிய ஏழு சிறந்த நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செரிமானம் சார்ந்த தொந்தரவுகளான வயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு காலை உணவு சிகப்பு அவல். அவல் மிக எளிமையாக ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதினால் செரிமானம் தொடர்பான எந்த ஒரு தொந்தரவையும் ஏற்படுத்தாது. இதற்கு காரணம் அவலில் இருக்கக்கூடிய ரெசிஸ்டன்ஸ் சார்ஜ் என்னும் ஒரு வகை நார்ச்சத்துதான் காரணம். இது குடல் இயக்கத்தை சீராக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அவல் ஏற்கனவே பல மணி நேரம் ஊறவைத்து பெர்மண்டேஷன் செய்து தயாரிக்கப்படுவதனால்  குட் மைக்ரோ பாக்டரியல் என்று சொல்லக்கூடிய புரோபயாடிக்ஸ் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இது பாய்ச்சலில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து குடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத டாக்ஸின்னை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.

இரண்டு:அனிமியாவை குணமாக்கும்.

அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு குறைவாக இருப்பது. சிவப்பு அவலில் இரும்புச் சத்து அளவு அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சிவப்பு அவலில் 6.1 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கிறது.  ரத்தசோகை பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் சிவப்பு அவலை சிறிது எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புதிய ரத்த சிவப்பணுக்களை உருவாக்கும். ஆர் பி சி எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலமாக அனிமியாவையும் எளிதில் குணமாக்கக்கூடியது இந்த சிகப்பு அவல்.

மூன்று: கெட்ட கொழுப்பை குறைக்கும்

சிவப்பு அவலில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. 100 கிராம் சிவப்பு ஆவலில் 3.3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. பேட் மெட்டபாலிசத்தை சீராக்குவதோடு ரத்தத்தில் இருக்கக்கூடிய எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கும். இதன் மூலமாக ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடியது இந்த சிவப்பு அவல். மேலும் இது உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கக்கூடியது சிகப்பு அவல்.

நான்கு: புற்றுநோய் வராமல் தடுக்கும்

சிகப்பு அவலுடைய சிவப்பு நிறத்தில்  இருக்கக்கூடிய ஆண்டோசைனின் எனும் நிறமி சத்து இருக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட். இது உடலில் இருக்கக்கூடிய செல் கழிவுகளை வெளியேற்றி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும். இதன் மூலம் கேன்சர் உருவாவதற்கான காரணிகளையும் அழிக்க வல்லது சிகப்பு அவல். மேலும் கேன்சர் பைட்டிங் நியூட்ரிசன் என்று சொல்லக்கூடிய ஷெலினின் சத்து நல்ல அளவில் இருக்கிறது. இது கேன்சர் செல்களை அழிப்பதோடு ப்ரீஸ்ட்கேன்சர் போன்ற கேன்சர் வராமல் தடுக்கும் ஆற்றல் சிவப்பு அவலுக்கு உண்டு.

ஐந்து: சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

இதையும் படிக்கலாமே:

சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட ஒரு சிறந்த உணவு சிகப்பு அவல். வெள்ளை அரிசியை விடவும் அவலில் அரிசியின் மூலமாக கிடைக்கக்கூடிய எல்லா சத்துக்களும் எந்த சேதாரம் இல்லாமல் எளிதாக  கிடைக்கும். சிவப்பு அவலில்  ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தேவையான காயத்திரி பைபர் மற்றும் பி காம்ப்ளக்ஸ் விட்டமின் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் வேகமாக ஏறுவதை தடுத்து சீராக வைத்திருக்கும்.

ஆறு:ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

உடலில் ஹார்ட் பீட் என்னும் இதயத்துடிப்பு சீராக இருப்பதற்கும் ரத்தநாளங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து மிகவும் தேவை. சிகப்பு அரிசி அவலில் இந்த இரண்டு சத்துக்களும் நிறைய இருக்கிறது. 100 கிராம் சிவப்பு அவலில் ஒரு நாளைக்கு தேவையான மெக்னீசியம் சத்தில் 13% சக்தி நிறைந்திருக்கிறது. டென்ஷன் சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்த பிரச்சனையினால் அவதிப்படுகிறவர்கள் காலையில் முதல் உணவாக இந்த சிவப்பு அவலை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

ஏழு: வளரும் குழந்தைகளுக்கு நல்லது

சிவப்பு அவலில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின், கார்போஹைட்ரேட், பேட்ஸ் விட்டமின் மினரல் போன்ற அடிப்படை சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. குறிப்பாக 100 கிராம் சிவப்பு அவலில் 76.9 கிராம் இயற்கையான கார்போஹைட்ரேட் இருக்கிறது. இது உடலுக்கு உடனடியாக நல்ல எனர்ஜியை கொடுப்பதற்கும் உடல் வளர்ச்சிக்கும்  உதவியாக இருக்கும்.

மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான பி வீட்டமின்ஸ் சிவப்பு அவலில் நிறைந்து இருக்கிறது. இது குழந்தைகளின் ஞாபக சக்தியை  அதிகரிக்கும். பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சிப்ஸ் போன்ற துரித உணவுகளுக்கு மாற்றாக இந்த சிவப்பு அவலில் செய்த அவல். லட்டு அவல். கொழுக்கட்டை இனிப்பு அவல். என பல்வேறு ரெசிப்பிஸ் செய்து குழந்தைகளுக்கு  கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *