சிறுநீரக கல் கரைய உணவுகள்- Foods for kidney stones in Tamil – kidney stone removing foods – Health.
சிறுநீரக கற்கள் (Kidney Stone)
சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை கிட்னி ஸ்டோன் சொல்லக்கூடிய சிறுநீரக கற்கள்.
சிறுநீரக கற்கள் பிரச்சினை இருக்கிறவர்கள் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடலாம், எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடக்கூடாது, மீண்டும் சிறுநீரக கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எப்படி சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.
ஒன்று ; தண்ணீர் (Drinking of Water)
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சினை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருக்கும் போது சிறுநீரின் பிஹெச் அளவு மாறும். சிறுநீரகங்கள் தண்ணீர் இல்லாமல் வறட்சி உண்டாகும். தேவையில்லாத கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கும். தேங்கிய கழிவுகள் உறைந்து சிறுநீரக கற்களாக மாறிவிடும். கழிவுகள் தேங்காமல் வெளியேர நிறைய தண்ணீர் தேவைப்படும். அதனால் தினமும் குறைந்தது 3.5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இந்த அளவு கோடைக்காலங்களில் மாறுபடும்.
ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ( Avoid High Oxalate Food)
ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகக்கூடிய கற்களின் வகைகளில் கால்சியம் ஆக்சைடு ஸ்டோன் என்னும் வகை கற்களால் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் ரத்தத்தில் ஆக்சலேட் அளவு அதிகமாக இருப்பதுதான். எந்தெந்த உணவுகளில் ஆக்சலேட் அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
உதாரணமாக கீரைகள் வெண்டைக்காய் கத்திரிக்காய் பீட்ரூட் போன்ற காய்கறிகளில் அதிகளவிலான ஆக்சலேட் இருக்கிறது. அதே போன்று பீன்ஸ் வகைகலான சோயா பீன்ஸ் கிரீன் பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகளிலும் கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற அனைத்து வகையான கிழங்குகளிலும் ஆக்சிலேட் அதிகமாக இருக்கிறது.
அனைத்து விதமான ஐஸ்கிரீம், அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளில் ஆக்சலேட் அதிகமாக இருக்கிறது.சிறுநீர் கற்கள் இருக்கின்றவர்கள் இந்த ஆக்சலேட் மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குறைவான ஆக்சிலேட் உணவு (Eat Low Oxalate Food)
சிறுநீர் கற்கள் பிரச்சினை இருக்கின்றவர்கள் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகளில் குறைந்த அளவு ஆக்சிலேட் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக பழங்களில் வாழைப்பழம் முலாம்பழம் பப்பாளி பழம் திராட்சை ஸ்ட்ராபெரி பைனாப்பிள் போன்ற பழங்களில் ஆக்ஸிடென்ட் குறைவாக இருக்கிறது.
இந்த வகையான பழங்களையும் முட்டைக்கோஸ் காலிபிளவர் குடைமிளகாய் பாகற்காய் வெள்ளரிக்காய் தேங்காய் நூக்கல் போன்ற காய்கறிகளில் ஆக்சலேட் மிகக் குறைந்த அளவு இருக்கிறது. இந்த வகையான ஆக்சலேட் குறைந்த காய்கறிகளை தினசரி சமைக்கும் உணவுகளில் சேர்த்து சாப்பிடுவது சிறுநீர் கற்கள் பிரச்சனை இருக்கிறவங்களுக்கு மிகவும் நல்லது.
அளவோடு அதிக கால்சியம் உணவு (Limit High Calcium Food)
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை குறைவான அளவில் எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த உணவுகளில் அதிக அளவிலான கால்சியம் இருக்கிறது என்றால் பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து உணவுகளிலும் பன்னீர் சோயா பீன்ஸ் கீரைகள் பிரக்கோலி, பாதாம் போன்ற நட்ஸ்லயும் அதிக அளவிலான கால்சியம் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
சிறுநீரக கற்கள் இருக்கின்ற பலரும் கால்சியம் அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை தவிர்ப்பார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். கால்சியம் உடலின் எலும்புகள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நரம்புகள் தசைகள் செயல்படுவதற்கும் பல வகைகளில் கால்சியம் உதவியா இருக்கிறது..
கால்சியம் உணவினை முற்றிலும் தவிர்க்கும்போது அது ஆஸ்திய ஃபோரசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனை வருவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். கிட்னி ஸ்டோன் பிரச்சினை இருக்கிறவங்க கால்சியம் உணவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. தினமும் உடலுக்கு தேவையான அளவு கால்சியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகளை தவிர்க்கவும் (Avoid Animal Protein)
அசைவவ உணவில் இருந்து வரக்கூடிய புரதச்சத்தை தவிர்க்கவேண்டும் ஏன் என்றால் உடலில் நான் வெஜ் புட் மெட்டபாலிசம் ஆகும்போது வெளியாக கூடிய ஒரு கழிவு பொருள் தான் யூரிக் ஆசிட். இந்த யூரிக் ஆசிட் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது யூரிக் ஆசிட் ஸ்டோன்ஸ் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கிட்னி ஸ்டோன்ஸ் இருப்பவர்கள் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக தால் போன்ற சைவ உணவுகளில் இருந்து வரக்கூடிய புரதத்தை எடுத்துக்கிறது மிகவும் நல்லது.
குறைவான அளவு உப்பு (Limit Salt)
சாப்பிடும் உணவுகளில் உப்பினை குறைவான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாதாரனமாக ஒரு மனிதன் தினமும் 5 கிராம் வரைக்கும் உப்பு உட்கொள்ளலாம். ஆனால் சிறுநீரக கற்கள் (Kidney Stone) இருப்பவர்கள் தினமும் 2.5 கிராம் உப்பு உட்கொண்டால் போதுமானது.
சிறுநீரில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும் போது கால்சியம் ரத்தத்தில் கலப்பது தடுக்கப்படும். ரத்தத்தில் நீர்ச்சத்து அதிகமாவதால் கழிவுகள் வெளியாவது தாமதம் ஆகும். இதனால் சிறுநீர் கற்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிறுநீரக கற்கள் பிரச்சினை இருக்கிறவங்க தினசரி சாப்பிடும் உணவில் உப்பினை குறைவா தான் சேர்த்துக்கணும்.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி
அது மட்டும் இல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாக்கெட்டு உணவுகள் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளான கருவாடு அப்பளம் வடகம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கிட்னி ஸ்டோன் பிரச்சனை இருக்கிறவங்க தினமும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைவதற்கு உதவியாக இருக்கிறது.
மீண்டும் வராமலும் தடுக்கும். உதாரணமாக இளநீர் வாழைத்தண்டு சாறு தர்பூசணி போன்ற நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் சாப்பிடலாம். காய்கறிகளில் சுரைக்காய் புடலங்காய் வெண்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழங்களில ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாமல் தடுக்கும் ஆற்றல் இந்த சிட்ரஸ் பழங்களுக்கு உண்டு என பல்வேறு ஆய்வுகளில் சொல்லி இருக்கிறார்கள். தினசரி குடிக்கக்கூடிய நீரில் 2 லிருந்து 3 லெமன் சாறு விட்டு அந்த தண்ணீரை குடிப்பதால் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பதற்கு உதவியா இருக்கும்.