சாம்பிராணி போடுவது எப்படி?

டிவியில் எல்லாம் சொல்லுவார்களே சளி காய்ச்சல் உடல் வலி உடல் அசதி தலைவலி கை கால் வலி அனைத்து வியாதிகளுக்கும் ஒரே நிவாரணி என்று அதே போல் வீட்டில் நிம்மதி இல்லையா சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு வருகிறதா தூக்கம் இல்லையா கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் வருகிறதா திருஷ்டி எதிர்மறை சக்திகள் வீட்டில் இருக்கிறதென்று நினைக்கிறீங்களா அனைத்திற்கும் உடனடி சர்வ நிவாரணியாக செயல்படுவது இந்த சாம்பிராணி தான். சாம்பிராணி போடுவது எப்படி?

இந்த சாம்பிராணி வெறும் வாசனைக்காக மட்டும் போடுவதில்லை எத்தனையோ பல ஆன்மீக சக்திகளை இறை சக்தியை உள்ளடக்கியதுதான் இந்த சாம்பிராணி.

இந்த சாம்பிராணியை அக்னியில் அதாவது நெருப்பில் நாம் தூவும்போது பைரவ சிவ கணங்கள் சக்தியோட கணங்களுக்கு உரியது. அதனால் இந்த வீட்டில் இந்த தூபத்தை நாம் தொடர்ந்து போட்டு வந்தால் அந்த தெய்வ கணங்கள் எல்லாம் தோன்றி நம்முடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தீய சக்திகள் எல்லாம் அழிப்பார்கள். இது ஹோமம் செய்த பலன் அதுவும் கணபதி மற்றும் நவகிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக நாம் பெறலாம்.

வீட்டில் இருக்கின்ற தடைகள் எல்லாம் விலகும். எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயம் உண்டாகும். வீடுகளில் சாம்பிராணி போடுவது போல். இது வெள்ளி செவ்வாய் விரத நாட்களில் நாம் போடுவோம். பொதுவாக எல்லா நாட்களிலேயுமே நாம் சாம்பிராணி போடுவது மிக மிக நல்லது. ஆனால் நம்மால் எல்லா நாட்களிலும் போட முடியவில்லை என்றால் கட்டாயமாக வெள்ளி செவ்வாய் விரத நாட்கள் பௌர்ணமி இந்த மாதிரி விசேஷ தினங்களில் நீங்கள் சாம்பிராணி போடுவது நல்லது. இந்த சாம்பிராணி போடும்போது நாம் செய்யக்கூடாத ஒரு தவறு செய்கிறோம்.

அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுறதுனால வீடு கடைகளில் இருக்கக்கூடிய கெட்ட காற்றை அகற்றும். அது இல்லாமல் விஷ ஜந்துக்களை கூட அந்த இடத்துக்கு அண்ட விடாமல் வெளியேற்றும். வீட்டில் எதிர்மறையாற்றல் அதிகமாக இருக்கு அப்படின்னா நம்மளுடைய மனம் அப்படியே அலைபாய்ந்து கொண்டு இருக்கும். மனம் ஒரு நிலையில் இருந்தால் தான் நாம் செய்யக்கூடிய எந்த செயல்களிலும் வெற்றி பெறலாம்.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் அப்படியே இருந்தது அப்படின்னா நம்மால் எந்த வேலையும் முழுமனதோடு செய்ய முடியாது. அப்போது நாம் செய்யக்கூடிய தொழிலாக இருந்தாலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை முழுமையாக செய்ய முடியாது. வெற்றி கிடைக்காது. சாம்பிராணி போடுறதுனால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் போய் நேர்மறை ஆற்றலை இழுத்துக் கொண்டு வரும். அப்போது வீட்டில் இறை சக்தியும் நம்முடைய குலதெய்வத்தோட ஆசியும் நமக்கு கிடைக்கும்.

சாம்பிராணி போடுவதினால் ஏற்படும் நன்மைகள்

நவகிரக தோஷங்கள் விலகும் எதிரிகளோட தொல்லையே இருக்காது. இறந்தவர்களின் சாபத்தை போக்கக்கூடியது. இந்த சாம்பிராணி தூபம் போடுவதனால் ஏற்படும் பலன் நம்மளுடைய முன்னோர்கள் எல்லாம் எதை செஞ்சாலும் அதிலே ஒரு காரணம் காரியமில்லாமல் அதை செய்யறதும் இல்லை. அதை சொல்லி வச்சிட்டு போகவும் இல்லை. சாம்பிராணியை வெறும் வாசனைக்காக நாம் போடவில்லை அதில் நிறைய பலன்கள் இருக்கிறது. பில்லி சூனியம் ஏவல் கண் திருஷ்டி இது மாதிரி எந்த ஒரு தீய சக்தியும் நம்மளை நோக்கி அணுக விடாமல் தடுக்கக்கூடியது இந்த சாம்பிராணி புகை.

இந்த சாம்பிராணியை நாம் போடும்போது நாம் சாதாரணமா தூக்கி எரிகிறோமே நிறைய பொருட்கள் அந்த காய்ந்த பொருட்களை கூட சாம்பிராணியுடன் போடும்போது அவ்வளவு நல்லது. எத்தனையோ பொருளை நாம் தெரியாமல் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். இதுல என்னென்ன பொருளை சாம்பிராணியுடன் நாம் சேர்க்கும்போது எவ்வளவு நல்லது அதனுடைய பலன் என்ன அப்படிங்கறத தெரிந்து கொள்ளலாம்.

எல்லோருடைய வீட்லயும் இதிலே சொல்லக்கூடிய பொருட்களில் ஒரு ஏழு எட்டு பொருட்களாவது இருக்கும். அதை நீங்கள் சாம்பிராணியுடன் சேர்த்து போட்டு பாருங்கள். உங்கள் வீட்டில் எவ்வளவு லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. பணவரவு உண்டாகிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

வேப்ப இலை

எல்லோருக்குமே கிடைக்கும் வேப்பமரம் பக்கத்திலே எங்கேயாவது இருந்தது அப்படின்னா உங்களுடைய வீட்டில் இல்லைனா கூட அந்த இலையை பறிச்சிட்டு வந்து அதை காய வச்சுக்கோங்க. அதை நீங்க சாம்பிராணி போடும்போது அதுல கொஞ்சம் எடுத்து போட்டிங்கனா பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

துளசி

கோவிலுக்கு போறோம் பெருமாள் கோவிலுக்கு எல்லாம் துளசி நிறைய கிடைக்கும். அந்த துளசியை கொண்டு வந்து வீட்டில் அப்படியே வைத்திருப்போம் அப்புறம் அது காய்ந்து தான் போகும். அந்த காய்ந்த துளசியை அல்லது வீட்டில் துளசி செடி இருக்குன்னா நீங்கங வெள்ளி செவ்வாயை தவிர்த்து மற்ற நாட்களில் ஏகாதசி தவிர்த்து மற்ற நாட்களை துளசியை பறித்து நீங்கள் பூஜைக்கு கும்பிடுகின்ற அந்த துளசி செடியில் இருந்து பறிக்கக் கூடாது. வேற துளசி செடியிலிருந்து இந்த துளசியைப் பறித்து அதை காய வைத்து அதை சாம்பிராணியுடன் போட்டீர்கள் அப்படின்னா நீங்கள் செய்கின்ற செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமண தடையை நீக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

மருதாணி இலை

நிறைய வீடுகளில் மருதாணி செடி இருக்கும் இந்த மருதாணி செடி இலையை பறித்து காய வைத்து அதை சாம்பிராணியுடன் போட்டீங்கன்னா மகாலட்சுமியோட அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

வேப்பம் பட்டை

வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டீங்க அப்படின்னா பில்லி சூனியம் ஏவல் மற்றும் எந்தவிதமான துஷ்ட சக்திகளும் அணுகாது அப்படின்னு சொல்லி இருக்காங்க.

ஜவ்வாது

ஜவ்வாது போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகுமாம். அது மட்டும் இல்லை வெண்குங்கிலியம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இதிலே இரண்டு வகை இருக்கும். இந்த வெண் குங்கிலியத்தை சாம்பிராணியில் சேர்த்து தூபம் போடுறதுனால துஷ்ட சக்திகள் அணுகாது. இதையும் நீங்கள் மிக முக்கியமாக சாம்பிராணியுடன் சேர்க்க வேண்டியது எல்லாம் மிக முக்கியமான ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

அருகம் புல்

சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்ன அப்படின்னா அருகம்புல். இந்த அருகம்புல் பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு மட்டும்தான் வைப்போம். மற்ற நாட்களெல்லாம் நாம் கண்டுக்கறதே இல்லை. இந்த அருகம்புல் எல்லாருக்குமே கிடைக்கும் இந்த அருகம்புல்லை கொண்டு வந்து அதை காய வைத்து அதை சாம்பிராணியில் போட்டோம் அப்படின்னா நம்முடைய எல்லா விதமான சகல தோஷங்களையும் நீக்க வல்லது அப்படின்னு சொல்லி இருக்காங்க.

நன்னாரி வேர்

நாட்டு மருந்து கடையில் போய் கேட்டீங்கன்னா நன்னாரி வேர் கிடைக்கும். இதை நீங்கள் தண்ணீரிலும் போட்டு வச்சு தண்ணிய குடிச்சீங்க அப்படின்னா உடம்புக்கு அவ்வளவு குளிர்ச்சி. இந்த நன்னாரி வேரை நீங்கள் காய வைத்து சாம்பிராணியோட போட்டீர்கள் என்றால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

கரிசலாங்கண்ணி பொடி

இதுவும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். கரிசலாங்கண்ணி கிடைக்குது. அதை காயவைத்து அதை சாம்பிராணியில் போட்டீர்கள் அப்படின்னா மகான்களோட ஆசிர்வாதம் கிடைக்கும். மகான்களோட அருள் உங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே இருக்கும்.

எதிரிகள் தொல்லை நீங்கனும் துரோகிகளை போக்கனும் அப்படின்னா சாம்பிராணியுடன் நாய் கடுக்கை போடணும். பில்லி சூனியம் ஏவல் கண் திருஷ்டி இதிலிருந்து எல்லாம் தப்பிக்கணும் அப்படின்னா வெண்கடுகை சேர்க்கணும். ஆனால் இந்த வெண்கடுக்கையும் நாய்க்கடுக்கையும் நாம் அப்படியே சேர்க்க முடியாது. தோஷ நிவர்த்தி முறைப்படி செய்து நம்மால் போட முடியாது

அதனால் மற்ற பொருட்களோட சாமிக்கு காட்டும் போது இந்த வெண்கடுகையும் நாய்க்கடுகையும் சேர்த்து காட்டாதீங்க. நீங்க தனியா அதை வைத்துக் கொண்டு வீட்டில் உங்களுக்குப் பில்லி சூனியம் கண் திருஷ்டி இதனால் ஏதாவது நமக்கு பாதிப்பு இருக்கும்னு நினைச்சீங்கன்னா இது ரெண்டையும் அந்தச் சாம்பிராணி போடும்போது அந்த பொருளைச் சேர்த்து வீடு எல்லா இடத்திலும் காட்டிட்டு தனியா ஒரு இடத்துல வையுங்கள்.

இங்க சாமிக்குக் கொண்டு வந்து அந்த வெண்கடுதையும் நாய் கடுகையும் போட்டதை நீங்கக் காட்டாதீங்க. ஆனால் வீடு ஃபுல்லா மூளை முடுக்க எல்லா இடத்துலயும் இந்த வெண்கடுகை போட்டதை காமிச்சு வெளியிலயும் காமிச்சி நிலை வாசலில் காமிச்சி தனியா ஏதாவது ஒரு மூலையில வச்சிருங்க. அதைச் செய்யறதுனால வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் கண் திருஷ்டி எல்லாம் போகும். ஆனால் சாமிக்கு மட்டும் காட்டாதீங்க இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *