சாமை அரிசியின் நன்மைகள்

Top 7 Health Benefits of Little Millet(Samai)

சிறு தானியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சாமை அரிசி. இது மற்ற சிறுதானியங்களை விடவும் பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியதாக இருக்கிறதினால் இதை ஆங்கிலத்தில் லிட்டில் மிலட் எனவும் அழைக்கிறார்கள். சாமை அரிசி சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழந்தமிழர்களும் நம் முன்னோர்களும் அதிகம் சாப்பிட்ட ஒரு சிறுதானியம்.

இது மட்டுமில்லாமல் சாமை அரிசி இந்தியாவில் உருவான ஒரு சிறுதானியம் என்பதினால் இது இந்தியன் மில்லட் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சாமை அரிசியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்றால் புரதச்சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தாது உப்புகளான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனிசு என ஏராளமான சத்துக்கள் நிறைந்தது இந்தச் சாமை அரிசி.

 சோ இன்றைக்கு  சிறுதானிய உணவுகளில் ஒன்றான சாமை அரிசி சாப்பிடும்போது நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒன்று: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்

 சாமை அரிசியில் அதிக அளவிலான நார்ச்சத்தும் மிகக் குறைவான அளவு மாவுச்சத்தும் நிறைந்த ஒரு சிறுதானியம். சோ இது ஒரு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மட்டுமில்லாமல் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு சிறுதானியமும் கூட. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக ஏறுவது தடுக்கப்படுவதோடு சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கவும் மிகவும் உதவக்கூடிய ஒரு சிறுதானியம் சாமை.சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருந்தாலும் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுப்பதாக இருந்தாலும்சாமை அரிசியை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஒருவேளை உணவாகச் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

இரண்டு: இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்


இதையும் படிக்கலாமே: கேன்சர் வராமல் தடுக்கும் 10 வகையான உணவுகள்

இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய காரணிகள் என்னவென்றால் ரத்தத்தில் எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைட் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதும் இரத்த சர்க்கரையின் அளவுகள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதுதான் காரணம். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஆற்றல் இந்தச் சாமை அரிசிக்கு உண்டு. சாமை அரிசியில் இருக்கக்கூடிய நியாசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டான பிளவனாய்ட், டானின்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் போன்ற சத்துகள் ரத்தத்தில் இதயத்தைப் பாதிக்கக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைத்து ஹெச்டிஎல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் மூலமாக இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது சாமை அரிசி.

மூன்று: உடல் எடையைக் குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க மிகச்சிறந்த ஒரு சிறுதானியம் சாமை அரிசி. சாமை அரிசியில் அதிக அளவிலான பாஸ்பரஸ் சத்து நிறைந்திருக்கிறது. 100 கிராம் சாமை அரிசியில் 220 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து இருக்கிறது. பாஸ்பரஸ் சத்து உடல் எடையைக் குறைக்கவும் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உடலுக்கு நல்ல எனர்ஜியை கொடுக்கவும் மிக உதவி செய்யும்.  இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து உடலில் தேவை இல்லாமல் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பைக் கறைக்கும். குறிப்பாக அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உண்டு. சோ உடல் எடையைக் குறைக்க தினசரி ஒருவேளை உணவாகச் சாமை அரிசியை பயன்படுத்தி வந்தால் உடல் எடை  குறையும்.

நான்கு: ரத்தசோகையை தடுக்கும்

அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதுதான். இரும்புச்சத்து சாமை அரிசியில் அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சாமை அரிசியில் 9.3 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும். இதன் மூலமாக ரத்தசோகை குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். சிறுதானிய உணவுகளில் இந்தச் சாமை அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ரத்த சோகை பிரச்சினை வராமல் பாதுகாக்கலாம்.

ஐந்து: எலும்புகளை வலுவாக்கும்


இதையும் படிக்கலாமே: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சாப்பிடவேண்டிய 10 வகையான உணவுகள்

அடிக்கடி மூட்டு வலி, முதுகு வலியென எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது சாமை. சாமை அரிசியில்  எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் சாமையில் 17 மில்லி கிராம் கால்சியமும் 220மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்தும் இருக்கிறது. இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை வலுவாக்கும். இதன் மூலமாக எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கூடியது சாமை.

ஆறு: குளூட்டன் ஒவ்வாமையை தடுக்கும்

பொதுவாகச் சிறுதானியங்கள் அனைத்துமே குளூட்டன் பிரீ வகையைச் சார்ந்தது தான். ஒரு சிலருக்கு க்ளூட்டன் சார்ந்த உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும அரிப்பு, எரிச்சல் அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு தொந்தரவு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு சிறுதானியம் சாமை. சாமை முற்றிலும் ஒரு குலுட்டன் பிரீ உணவு என்பதினால் க்ளூட்டன் அலர்ஜி இருக்கிறவர்கள் இந்த க்ளூட்டன் அடங்கிய உணவுகளான கோதுமை மைதா போன்றவற்ற தவிர்த்து விட்டு இதற்கு மாற்றாகச் சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஏழு: வாழ்வியல் நோய்களைத் தடுக்கும்


இதையும் படிக்கலாமே: கிட்னியை பாதுகாக்கும் 7  வகையான உணவுகள்

சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, உடல் பருமன் எனத் தவறான வாழ்க்கை முறை காரணமாக வரக்கூடிய நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல்  சாமை அரிசிக்கு உண்டு. சாமை அரிசியில் இருக்கக்கூடிய பினாலிக் காம்பௌன்ட்ஸ், பாலிபினாள், டானின் போன்ற உடல் உள்ளுறுப்புகளில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுக்கும். இதன் மூலமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு விதமான லைஃப் ஸ்டைல் டிசீஸ் வராமலும் பாதுகாக்க கூடியது சாமை அரிசி. சோ இது போன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க காலையில் சிறுதானிய உணவுகளில் ஒன்றான சாமை அரிசியை உணவில் சேர்த்து நலமுடன் வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *