சாமி கும்பிடும் போது பூ விழுந்தால் என்ன பலன்?

சாமி கும்பிடும் போது பூ விழுந்தால் என்ன பலன்? இடது பக்கம் விழுந்தால் என்ன? பலன் வலது பக்கம் விழுந்ததுன்னா என்ன பலன்? அது மட்டும் இல்லாமல் கோவிலில் நாம் சாமி கும்பிடும் போது அர்ச்சகர் நம்முடைய கையில் பூவை கொடுப்பார். அந்த பூவை சில பேர் தலையில் வச்சுக்குவோம். சில பூக்களை தலையில் வைக்க மாட்டோம். அரளி பூ மற்றும் சில பூக்கள் தலையில் வைப்பதில்லை. அப்படிப்பட்ட பூக்களை  என்ன செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரசாதங்களை எல்லாம் நிர்மல்யம் அப்படின்னு சொல்லுவார்கள். இதோட அர்த்தம் என்ன  என்றால் தூய்மையானது அழுக்கற்றது அப்படின்னு அர்த்தம். அதிலே  இறைவனோட அருள் சக்தி நிறைந்து இருக்கும். கோவிலில் கொடுக்கக்கூடிய பூக்கள் பிரசாதங்கள் எல்லாமே அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதை முதலில் நாம் உணர வேண்டும். முதலில் பக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டு நெற்றிலும் ஒற்றிக்கொண்டு அதுக்கப்புறம் இருதயத்தில் வைத்து இறைவன் அருள் நமக்கு கிடைத்துவிட்டதாக எண்ணுதல் வேண்டும். இறைவா. இது கிடைத்ததற்கு நன்றி அப்படின்னு நாம் நினைக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த பூக்களை கோவிலிலேயே நாம் வைக்கக்கூடிய மல்லிகை பூக்கள் போன்ற தலையில் வைக்கக்கூடிய பூக்களாக இருந்தால் தலையில் வைத்துக்கொள்ளலாம்.  அல்லது அரளி பூ தாமரைப்பூ மாதிரி இருக்கும்  சில பூக்கள் எல்லாம் தலையில் வைக்க முடியாது.

அவற்றையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை அறையில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் ஒரு தாம்பாலத்தில் வைக்கவேண்டும். சில்வர் அல்லது பித்தளை தாம்பாலமோ எதுவாக இருந்தாலும் வைக்கலாம். அந்த பூ அடுத்த நாள்  வாடி இருக்கும். அதை நீர் நிலைகள் அல்லது கால் படாத இடத்தில், மரங்களுக்கு கீழே அதிலே நாம் போடவேண்டும். வீட்டில் செடி வளர்த்தால் அதிலே கூட போடலாம்.

சாமி கும்பிடும் போது பூ விழுந்தால் என்ன பலன்?| adhikan.co.in

ஆனால் கால் படக்கூடிய இடங்களில் இந்த பூக்களை போடக்கூடாது. குப்பைத் தொட்டியிலையும் நாம் போடக்கூடாது. கோவிலில் இருந்து கொண்டு வந்த பூவை சாமி படங்களுக்கும் திரும்ப நாம் வைக்கக்கூடாது.

நாம் அன்றாடம் பூஜை செய்யும் போது சில தவறுகளை செய்யறதன் மூலம் நம்முடைய வேண்டுதல் பலிக்காமல் போய்விடுகிறது. நினத்தது எதுவுமே நடக்காமல் போய்விடுகிறது. அது என்ன தவறு அப்படிங்கறது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வீடாக இருந்தாலும் அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சாமி படங்களை வைத்திருப்போம். அந்த சாமி படங்களுக்கு விசேஷ நாட்கள்லேயும் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் மறக்காமல் பூ வைத்து வணங்குவோம்.

அது ரொம்ப நல்லது அந்த பூ நறுமணம் மிக்கதாக இருந்தது அப்படின்னா அது ரொம்பவும் நல்லது. இந்த பூவானது வாடி போய் இருந்தால் நாம் அதை எடுக்காமல் இருக்கக் கூடாது. அடுத்த நாள் அது வாடி இருந்தது என்றால் அதை எடுத்து விட்டு புதிதாக வைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த வாடி இருக்கும் பூவை எடுக்காமல் இருந்தோம் என்றால் எதிர்மறை ஆற்றலை அது  உள்ளிருக்கும். எப்பவுமே சாமிக்கு  இப்படி காய்ந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு  இருக்கக் கூடாது.

 ஆன்மீகப் பெரியோர்கள் சொல்லியிருப்பது தினமும் வெள்ளி செவ்வாய் மட்டும் அல்லாமல் எல்லா நாட்களும் காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும். இரு வேலை ஏற்ற முடியவில்லை என்றால் மாலையில் ஒரு வேலையாவது   விளக்கேற்றி சாமி கும்பிடவேண்டும். இப்படி விளக்கு ஏற்றி நாம் பூஜை செய்யும் போது தொழில் செய்யும் இடமாக இருந்தது என்றால் இரவு  கடைய மூடும் பொழுது கற்பூரமேற்றி திருஷ்டி கழித்து விட்டு அதன்பிறகு தான் கடையை மூடனும். அதுதான்  நல்லது.

அப்பொழுது தான் தொழில் முன்னேற்றத்தை தடுக்க கூடியதாக ஏதாவது திருஷ்டி இருந்தது என்றால்  அதெல்லாம் போய்விடும் என்று சொல்லுவார்கள். பூஜை அறையில் நாம் பூஜை செய்யும் போது அங்கே தீர்த்த பாத்திரம் கண்டிப்பாக இருக்கணும். அதிலே இருக்கக்கூடிய தீர்த்தம் தினமும் சுத்தமான தண்ணீரை கொண்டு மாற்றி வைக்கணும்.

பூஜை எதுவும் செய்யவில்லை என்றாலும் தண்ணீர் வைக்காமல் இருக்கவே கூடாது. அந்த தண்ணீரை  அடுத்த நாள் அந்த தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிவிட்டு குடித்துவிட்டாலாம்.

நாம் கோவிலுக்கு போனால் அங்கே தீர்த்தம் கிடைத்தால் அதை கண்களில் ஒட்டிக்கொண்டு நாம் குடிப்பது போல்  இந்த தீர்த்தத்தையும் நாம் அடுத்த நாள் குடித்துவிடலாம். இந்த தீர்த்தத்தில்  நீங்கள் பச்சை கற்பூரம் ஏலக்காய் சிறிது கிராம்பு போட்டு நுணுக்கி அந்த வாசனை மிக்க அந்த பொருளை போட்டீர்கள் என்றால் வீட்டில் நமக்கு  லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாமி கும்பிடும்போது பூ விழுந்தால் என்ன பலன்

ஒரு வேண்டுதல் ஒன்று வைக்கிறோம். ஒரு பிராத்தனையோட கோவிலுக்கு போகிறோம் அல்லது வீட்டிலேயே சாமி கும்பிடுகிறோம். அப்படி கும்பிடும்போது படத்தில் இருந்தோ சிலையில் இருந்தோ ஒரு பூ கீழே விழுகிறது அது வலது பக்கம் விழுகிறது என்றால் உங்களுடைய வேண்டுதல் பிரார்த்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று அர்த்தம்.

இடது பக்கம் விழுந்தது என்றால் நீங்கள் செய்யும் செயலில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய வேண்டுதல்  நிறைவேறும். ஆனால் கொஞ்சம் கால தாமதமாகும் அப்படிங்கிறதாக அர்த்தம். 

இதுவே சாமியோட சிலைக்கு பின்னால் விழுந்தால் என்ன பலன்.

சாமியோட சிலையில் இருந்து பூ விழுந்தாலே அது ஒரு அதிர்ஷ்டம் தான் ஆசீர்வாதம் தான்.

ராம் சரித்திரத்தில் மாதா சீதா ராமரை முதன்முதலாக பார்த்த பிறகு தன்னுடைய இதயத்தின் ஆசை நிறைவேற வேண்டும் அப்படிங்கிற பிரார்த்தனையுடன் நேராக மாதா கௌரியோட கோயிலுக்கு போறாங்க. அப்பொழுது மாதா கௌரியின் சிலை மீது இருந்த மலர்கள் கீழே விழுந்து  மாதா சீதாவை ஆசீர்வாதம் பண்ணுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பூ விழுந்தது என்றால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *