சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய 10 பழங்கள்.
பழங்கள்
நம் அன்றாட உணவுகளில் பழங்களுக்குஅதிக முக்கியத்துவம் உண்டு. ஆனால் சர்க்கரை நோயாளிகளை பொருத்தவரைக்கும் பழங்கள் பலவும் இனிப்பு சுவை கொண்டது என்பதினால் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது உண்டு. இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம் பழங்கள் மூலமாகத்தான் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்ஸ் மினரல்ஸ் ஆன்டிஆக்சிடென்ட் டைட்டரி பைபர் போன்ற சத்துக்கள் மிக எளிதாக வந்து கிடைக்கும்.
பழங்களில ஒரு சில பழங்கள் குறைந்த இனிப்பு சுவை கொண்டதாகவும் அதிக நார்ச்சத்து உடையதாக இருக்கும் அந்த வகையான பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த பத்து சிறந்த பழங்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நார்ச்சத்து நிறைந்த பழங்களில் மிக முக்கியமானபழம் கொய்யாப்பழம். 100 கிராம் கொய்யாப்பழத்தில் 5.4 கிராம் நார்சத்து இருக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவுகள் வேகமாக ஏறுவதை தடுக்கும் இதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்க உதவி செய்யக்கூடியது கொய்யாப்பழம்.
இது மட்டும் இல்லாமல் 228.3 மில்லி கிராம் விட்டமின் சி சத்து இருக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு இன்ஃப்ளமேஷன் உண்டாவதையும் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கொய்யாப்பழத்த எடுத்துக்கலாம்.
இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
பப்பாயா
பப்பாளி பழம் பப்பாளியின் கலோரிகள் மிகவும் குறைவு 100 கிராம் பப்பாளியில் 23.9 கலோரிகள் தான் மற்ற பழங்களை விடவும் சற்று கூடுதலான அளவு பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பப்பாளி பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பைபர் விட்டமின் சி ஏ இ போன்ற வைட்டமின் சத்துக்களும் காப்பர் மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற மினரல் சத்துக்களும் லைக்கோபின் போன்ற நிறம் சத்துகளும் கூட நிறைந்து இருக்கிறது.
இது ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதோடு நாட்பட்ட சர்க்கரை நோயினால் வரக்கூடிய ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது இந்த பப்பாளி பழம்
ஆரஞ்சு
ஆரஞ்சு பழம் பொதுவாகவே சிட்ரஸ் பழங்கள் அனைத்துமே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.குறிப்பாக ஆரஞ்சு சாத்துக்குடி போன்ற பழங்களின் கலோரிகளும் குறைவு அதே சமயம் க்ளைசமிக் இன்டெக்ஸ் மதிப்பும் குறைவுதான் இது மட்டுமில்லாமல் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்க தேவையான விட்டமின் சி பைபர் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கு.ஆரஞ்சு பழத்தை ஜூஸாக சாப்பிடக்கூடாது அதன் சதைப்பகுதியோடு சேர்த்து தான் சாப்பிடணும்.
நாவல் பழம்
ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவக்கூடிய பழங்களில் மிக முக்கியமான ஒரு பலம் நாவல் பழம். நாவல் பழத்துல ஜம்போ சைன் மற்றும் ஜம்போலின் சொல்லக்கூடிய அரிய காம்பினென்ட் இருக்கிறது. இது ரத்தத்தில் மாவு சத்தின் வழியாக வரக்கூடிய சர்க்கரையை தாமதப்படுத்துவது மட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தும். நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமாக 30% வரைக்கும் இரத்த சர்க்கரை குறைக்க முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்
பேரிக்காய்
ஒரு மீடியம் சைஸ் பேரிக்காய்ல 5.5 கிராம் வரைக்கும் நார்ச்சத்து இருக்கிறது இது இரத்த சர்க்கரை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்வது மட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கிறது இந்த பேரிக்காய்.
மேலும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி இ கு ஃபோலேட் லூடெய்ன் பேணா கரோட்டின் ரெட்டியார் மற்றும் சோவின் போன்ற சத்துக்கள் நாள்பட்ட சர்க்கரை விளைவாக வரக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் குறிப்பாக சர்க்கரை நோயினால் வரக்கூடிய கண் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடியது இந்த பேரிக்காய்.
ஆப்பிள்
ஆப்பிள் பழம் உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் ஆப்பிள் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு பழம் ஆப்பிள்.ஆப்பிள் பழத்தில் சாலிபுல் மற்றும் இன்சாலிப்பு ஃபைபர் என்று சொல்லக்கூடிய இரண்டு வகையான நார்ச்சத்துகள் இருக்கிறது. 100 கிராம் ஆப்பிளில் 2.4 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
குறிப்பாக ஆப்பிளுடைய தோலில் பெட்டில் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மட்டுமில்லாமல் கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் பழம் சாப்பிடும்போது அதன் தோலையும் சேர்த்துதான் சாப்பிடணும்.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
ஸ்ட்ராபெரி
பழங்களில ஸ்ட்ராபெரி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஸ்ட்ராபெரியுனுடைய கலோரிகளும் லைசெமிக் இன்டக்சும் குறைவு இது மட்டும் இல்லாமல் நல்லளவிலான நார்ச்சத்தும் நிறைந்திருக்கு இது ரத்த சரக்கரையை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும்.
மேலும் ஸ்ட்ராபெரில விட்டமின் சி கரட்டினன்ஸ் போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்களும் ஆந்தோசைனின் போன்ற பினாலிக் காம்பௌண்ட்களும் அதிகம் இருக்கிறது. பீட்டா செல்கள் சேதமடைவதை தடுப்பதோடு இன்சுலின் உற்பத்திக்கும் உதவி செய்யும்.
வாட்டர் ஆப்பிள்
இந்த பழத்துக்கு நீர் ஆப்பிள் ரோஸ் ஆப்பிள் வாட்டர் ஜம்பு என பல பெயர்கள் இருக்கிறது. பல ஆய்வுகளில் நிரூபித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக ஜம்போ சைனின் என்னும் பயோ ஆக்டிவ் காம்போனென்ட் இந்த வாட்டர் ஆப்பிளில் இருக்கிறது..
இது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய ஸ்டார் சுகராக மாறும் வேகத்தை குறைக்கும் இதன் மூலமாக இரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தக் கூடியது. .வாட்டர் ஆப்பிள்.
மாதுளம் பழம்
மாதுளம் பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி விட்டமின் ஈ விட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவி செய்வது மட்டும் இல்லாமல் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமலும் தடுக்க கூடியது மாதுளை. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பாணி பிளான்ட்ஸ் போன்ற சத்துக்களால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மட்டுமில்லாமல் இன்ஃப்ளமேசன் உண்டாகும். இதன் மூலமாக சர்க்கரை நோயால் வரக்கூடிய பல்வேறு பாதிப்புகள் நம்மை பாதுகாக்க கூடியது இந்த மாதுளை.
முலாம்பழம்
அதிகப்படியான நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் மற்றும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டும் கொண்ட பழங்களில் மிக முக்கியமான ஒரு பழம் முலாம்பழம் இரத்த சர்க்கரை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்வது மட்டுமில்லாமல் டயபெட்டிக் நெப்ரோபதி என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயினால் வரக்கூடிய சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கக்கூடியது முலாம்பழம்.
இதுவரைக்கும் பார்த்த இந்த 10 பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் போது ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ளனும்.
இதையும் படிக்கலாமே ; ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்
ஓன்று : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களாவே இருந்தாலும் கூட அளவாக தான் பழங்களை சாப்பிட வேண்டும்.
இரண்டு : சாப்பிடக்கூடிய நேரம் உணவு சாப்பிடும்போது பழங்களை சேர்த்தோ அல்லது உணவு சாப்பிட்ட உடனோ பழங்கள் சாப்பிடக்கூடாது ஒரு உணவு வேலைக்கு மறு உணவு வேலைக்கும் இடையே தான் பழங்கள் எடுத்துக்கணும்.
மூன்று :பழங்களை தேர்வு செய்யக்கூடிய விதம் பழங்களை தேர்வு செய்யும் போது நன்கு கனிந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் தேர்வு செய்யக்கூடாது பழுக்கும் தருவாயில் இருக்கக்கூடிய பழங்களை தான்தேர்வு செய்ய வேண்டும்.
நான்கு : பழங்களை ஜூஸாக சாப்பிடக்கூடாது இந்த முழு பழமாக அதன் பல்போடு சேர்த்துதான் பழங்களை சாப்பிடணும்.
ஐந்து : இனிப்பு சுவை அதிகம் கொண்ட பழங்களை வந்து தவிர்க்கணும் உதாரணமாக மா பலா வாழை சப்போட்டா போன்ற பழங்களை சர்க்கரை நோயாளிகள் கூடுமானவரைக்கும் தவிர்க்கணும்.