கோடான கோடி கடனும் 16 நாட்களில் அடையும் இந்த ஒரு பொருளை உங்கள் தலையை சுற்றி போடுங்கள்

 

கோடான கோடி கடனும் 16 நாட்களில் அடையும் இந்த ஒரு பொருளை உங்கள் தலையை சுற்றி போடுங்கள்.



கோடான கோடி கடனும் 16 நாட்களில் அடையும். இந்த ஒரு பொருளை தலையை சுற்றி போடுங்கள். அது என்ன பொருள் எந்த நேரத்தில் தலையை சுற்றி போட வேண்டும் என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.


நிறைய பேர் கடன் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். அந்த கடனை  என்ன முயற்சி செய்தாலும் அடைக்கவே முடியவில்லை குறையவே மாட்டேங்குது என்று சொல்லி கவலைபடுபவர்களுக்காக. 


உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதை எப்படி அடைப்பது அதற்கு என்ன செய்யலாம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.


இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.


நம்ம அதற்கான முயற்சியும் கூட செய்யப் போறோம் நீங்க உங்களுடைய வேலையும் கரெக்ட்டா செய்யுங்க அதே சமயத்துல இந்த ஒரு சின்ன விஷயத்தை நீங்க செஞ்சு பார்க்கும் பொழுது உங்களுக்கு 


எப்படிப்பட்ட கடன் எவ்வளவு கடன் இருந்தாலும் கண்டிப்பாக அடைந்துவிடும். நமக்கு வருமானம் வருவதற்கு தடையாக இருக்கலாம். வருமானம் வந்த பணம் வேற வழியில் செலவாகி கடன் அடைக்க முடியாத தடைகள் இருக்கலாம். அதே மாதிரி வருமானத்துக்கு நிறைய தடைகள் இருக்கும்.  இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் தீரவேண்டும் என்றால் இந்த ஒரே ஒரு பொருள் போதுமானது. 


கொள்ளு:



இந்த ஒரு பொருளை பயன்படுத்தி எப்படி பரிகாரம் செய்து உங்களுடைய கடன்களை எப்படி அடைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். மிகவும் சுலபமான வழி.நாம் எவ்வளவோ முயற்சிகள் செய்திருப்போம். ஆனால் அது எல்லாம் கை மேல் பலன் கொடுத்திருக்காது. இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

கொள்ளு  கேதுவுக்குரிய ஒரு தானியம். நவகிரகங்களில் ஒன்பது கிரகங்களுக்குமே ஒவ்வொரு தானியம் வைப்போம். அதாவது நவதானியங்கள் ஏன்று‌ சொல்வோம். இந்த நவ தானியங்களில் ஒவ்வொரு தானியத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அதை பொறுத்து நாம் அந்த தானியங்களும் தானம் செய்வோம். அந்த வகையில்  கொள்ளு இதற்கான சிறப்பு அம்சங்கள் உங்களுடைய வறுமையை நீக்கும். 

உங்களுக்கு பண பிரச்சினை இருக்கிறது கடன் பிரச்சினை இருக்கிறது கையில் பணம் தங்க வேண்டும் காசு சேர வேண்டும்  வறுமை நீங்க வேண்டும் என்றால்  கொள்ளு பயன்படுத்தவேண்டும். இந்த கொள்ளு எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் தானம் செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு வறுமை நீங்கி பணம் பெருகும் என்று பெரியவர்கள் அந்த காலத்தில் இருந்து சொல்லி வைத்திருக்கிறார்கள். 


இதையும் படிக்கலாமே : குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!


அதனால்தான் நிறைய கோவில்களில்  தானியங்கள் நவகிரகங்களுக்கு வைப்பார்கள். சில கோவில்களில் அக்கினியை சுற்றி இந்த ஒன்பது தானியங்களை நவதானியங்களை நெற்றியில் போட சொல்வார்கள். எதற்காக என்றால் வறுமைகள் நீங்கும் மற்ற பிரச்சனைகளும் நீங்கும் என்பதற்க்காக இந்த ஒரு விஷயத்தை இன்னும் கடைபிடித்து வருகிறார்கள்.


அந்த வகையில் நாம் இன்றைக்கு கொள்ளு தானியத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் எந்த மாதிரி பயன்படுத்தினால் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  வறுமைக்கு மட்டும் இல்லாமல் வியாதிகள் இருக்கிறது என்றாலும்  இது அந்த வியாதியிலிருந்து உங்களை நீக்கிவிடும். அவ்வளவு சக்தி இந்த கொள்ளு தானியத்திற்கு இருக்கிறது.

இந்த கொள்ளு தானியம் நிறைய கடைகளில் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட்டில்  கொள்ளு தனியாக பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். அங்கு சென்று உங்களுக்கு தேவையான அளவு கொள்ளு தானியத்தை வாங்கிக் கொள்ளலாம். கொள்ளு குதிரைகள் சாப்பிடும், எல்லா குதிரைகளும் சாப்பிடாது, நாட்டு குதிரைகள் மட்டும் தான் சாப்பிடும். அது எந்த குதிரை எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த குதிரை வளர்ப்பவரிடம் நீங்கள் கொள்ளு தானம் செய்யலாம். 

இதையும் படிக்கலாமே : வழிபாடும் பரிகாரமும் – எதிரிகள் தொல்லையா? கோர்ட் கேஸ் பிரச்சனையா?

இதனால் உங்களுக்கு கடன் பிரச்சினைகள் குறையும். பண பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். மேலும் இதை வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்றால் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு சுத்தபத்தமாக ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்த வேண்டுதலை தொடர்ந்து 16 நாட்கள் செய்ய வேண்டும் 16 நாட்கள் செய்ய வேண்டுமா என்று கேட்டால் 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் ஒரு நாள் தவறவிட்டாலும் திரும்ப முதலிலிருந்து 16 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். சூரிய உதயம் ஆகும் பொழுது இந்த வேண்டுதலை நீங்கள் செய்ய வேண்டும். ஒரு வேலை காலதாமதம் ஆனால் பரவாயில்லை காலை 9 மணிக்குள் நீங்கள் இதை கண்டிப்பாக செய்து விட வேண்டும். அதேபோல் மாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள்ளும் இதை செய்யலாம்.


இந்த வேண்டுதலை எப்படி செய்வது



மிகவும் சுலபம் இந்த வேண்டுதல் செய்வதற்கு முன் குளித்து விட வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் ஒரு கைப்பிடி அளவு கொள்ளை எடுத்துக் கொண்டு சூரியன் உதிக்கும் திசையை நோக்கி சூரிய பகவானை பார்த்து இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் இந்த வேண்டுதலை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


தொடர்ந்து செய்யும் பொழுது ஒரு வேலை சூரியன் உதிக்கும் நேரத்தை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் என்றால் 9 மணிக்குள் கண்டிப்பாக செய்துவிட வேண்டும். அந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றால் மாலையில் நான்ட மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளும் செய்து விட வேண்டும். மிகச் சிறப்பான நேரம் அதிகாலை சூரிய உதயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளு ஒரு கைப்பிடி வைத்துக்கொண்டு மனதாற வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுடைய கடன் பிரச்சினை தீரும். எவ்வளவு கடன்கள் இருக்கிறதோ அதை நீங்கள் சொல்லி கூட வேண்டிக்கொள்ளளாம். ஒரு லட்சம் கடன் இருக்கிறது அலங ஒரு கோடி கடன் இருக்கிறது எவ்வளவு கடன் இருந்தாலும்  நீங்கள் மனதார சொல்லிவிட்டு இந்த ஒரு கைப்பிடி கொள்ளு தானியத்தை உங்களுடைய தலையை சுற்றி 27 முறை வலது பக்கமாக சுற்ற வேண்டும். அதாவது  கடிகாரம் சுற்றுவது போல்  நீங்கள் 27 முறை உங்களுடைய தலையை சுற்றிக் கொள்ளுங்கள். 


கொள்ளு கையில் வைத்து சுற்றும் பொழுது மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். 27 முறை சரியாக என்னால் சுற்ற முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு மட்டும் திருஷ்டி கழிப்பதற்கு சுற்றுவது போல் மூன்று முறை இடதுபுறமாகவும் மூன்று முறை வலது புறமாகவும் சுற்றுலாம். சுற்றி முடித்தவுடன் கையில் இருக்கும் அந்த கொள்ளு தானியத்தை பறவைகளுக்கு இறையாக கொடுக்கலாம்.


பறவைகள் அந்த தானியத்தை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பறவைகள் உங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால் மரங்கள் இருக்கும் இடங்களுக்கு பறவைகள் நிச்சயமாக வரும். அந்த இடங்களில் நீங்கள் அதை போட்டு உண்ண விடலாம். தினமும் நமது வீட்டின் மொட்டை மாடியில் சிறிதளவு தானியமும் தண்ணீரும் வைத்தால் வாடிக்கையாக சில பறவைகள் வந்து அதை உண்ணும். தண்ணீர் குடித்துச் செல்லும் இது வாடிக்க வைத்திருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

கோவில்களிலும் நீங்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம் ஐயரிடம் கொடுத்து அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள சொல்லலாம். அவர்கள் தினமும் சுண்டல் செய்து கொடுப்பது போல் இந்த கொள்ளூ தனியத்தையும் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள் இதன் மூலம் நீங்கள் நன்மை அடையலாம். உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் வரை நீங்கள் தொடர்ந்து இதுபோல சில தானியங்களை தானமாக கொடுப்பதை வளக்கமாக வைத்துக் கொள்ளலாம்.

ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம் பெண்கள் அந்த நாட்களில் செய்ய முடியாது என்ற கவலை வேண்டாம் அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து செய்யலாம். தொடர்ந்து செய்ய வேண்டும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இதை செய்து கொண்டு வரலாம். நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் விலகி நீங்கள் சந்தோசமாக வாழும் நாள் வெகு தொலைவில் இருக்காது நீங்கள் செய்யும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நல்ல ஒரு நாளாக இருக்கும்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *