கை கால்களில் சுருக்கம் உடனடியாக நீங்க…
(Get soft and Wrinkle Free Hands and Feet overnight)
அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஒரு சிலருக்கு கை கால்களில் உள்ள தோல்கள் திடீரென்று சுருங்கி வயதானவர்கள் தோற்றம் போல் கட்சி அளிக்கும். தோல்கள் சுருங்கி போகாமல் தடுப்பது எப்படி சுருங்கி போன தோல்களை எப்படி நாம் சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை : 3 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் : 3 ஸ்பூன்
லெமன் ஜூஸ் : 2 ஸ்பூன்
—————————————————————–
ஒரு பவுலில் சர்க்கரை, ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய், லெமன் ஜூஸ் மூன்றையும் நன்றாக கலந்து சுருங்கி இருக்கும் தோலின் மேல் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.அதிகமான சுருக்கம் இருக்கும் இடங்களில் கொஞ்சம் கூடுதலாக தடவி மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும் பொழுது ஒரே முறையாக மேலிருந்து கீழாக நான்கு நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து முடித்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ஈரப்பதத்திற்கு
தயிர். : 4 ஸ்பூன்
தேன். : 1 ஸ்பூன்
கிளிசரின். : 1 ஸ்பூன்
—————————————————-
இதையும் படிக்கலாமே ;ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
இந்த மூன்று பொருட்களையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள ஈரப்பதத்தை உண்டாக்கும் அந்த கிரீமை எடுத்து தடவி நன்றாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். நாம் தெரியும் பயன்படுத்திய பொருட்களில் ஒன்று தயிர். இந்த தயிரில் லாக்டிக் ஆசிட் இருக்கிறது. லாக்டிக் ஆசிட் தோலை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தேனில் இருக்கின்ற ஆன்ட்டிஆக்சிடென்ட் பாதிக்கப்பட்டிருக்கும் தோலை சரி செய்யும். கிளிசரின் தோலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.
செய்து வைத்திருக்கும் கிரீமை தடவி நன்றாக மசாஜ் செய்து ஐந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடவும் இதை போன்று மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு செய்து வந்தால் தோலில் இருக்கும் சுருக்கம் மறைந்து மென்மையாகவும் பளிச்சென்றும் காணப்படும்.