குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!

 

குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா? நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!


இன்றைக்கு நம்முடைய குலதெய்வத்தின் பெருமையை பற்றி தெரிந்து கொள்வோம்.



குலதெய்வம் என்றால் என்ன? 

ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்பது அவர்களுடைய முன்னோர்கள்,  அவர்களுடைய வம்சாவளி தான், அவர்களுடைய டி என் ஏ தான். நாம் அனைவருமே நம்முடைய குலதெய்வத்தை வணங்காமல் நம்முடைய இஷ்ட தெய்வத்தை வணங்கினால் என்னதான் நாம் விழுந்து விழுந்து பூஜை செய்தாலும் வணங்கினாலும் அதனைடைய பலன்  முழுமையாக நமக்கு கிடைக்காது. முதலில் நம்முடைய குலதெய்வம் தான் நமக்கு. பிறகு தான் நம்முடைய இஷ்ட தெய்வங்கள் அனைத்தும்.


முதலில் குலதெய்வத்தை வணங்கிய பின் தான் நாம் மற்ற தெய்வங்களை  வணங்கி வேண்டும். ஏன் என்றால்  நாம் ஒரு வேண்டுதல் வைத்து நம்முடைய இஷ்ட தெய்வத்தை  நினைத்து நினைத்து பூஜை செய்து கொண்டிருப்போம் ஆனால் அது   நடக்கவே நடக்காது. எதனால் நடக்கவில்லை என்று யோசித்து காரணத்தை ஆராய்ந்தால் அந்த காரணம் நமது குலதெய்வத்தை நாம் சரியாக வணங்காமல் இருப்பது தான். 


 நம்முடைய குலதெய்வத்தை வணங்கிய பின் நாம் நம்முடைய இஷ்ட தெய்வங்களை வணங்கினால் பூஜை செய்து கோரிக்கை வைத்தால் நமது குல தெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் அந்த காரியம் இனிதே நடைபெறும். நமது குல தெய்வம் என்பது நமது முன்னோர்கள் அவர்களுடைய அனுமதி இல்லாமல் நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாது. அதனால் குல தெய்வத்தை வணங்கிய பின் மற்ற இஷ்ட தெய்வங்களிடம் கோரிக்கை வைத்து பூஜை செய்தால் சிறப்பாக அது நிறைவேறும்.


 ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அப்படியும் முடியலையென்றால் வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் நம்முடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்கி வர வேண்டும்.


இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்



இன்றைக்கும் அனேக குடும்பத்தினர்கள் தமது உறவினர்களுடனும் பங்காளிகளுடனும் ஒன்றாக சேர்ந்து மிகவும் சிறப்பாக குல தெய்வத்தை வணங்குவார்கள். அதையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கும்.

சிலர் நல்ல வசதி படைத்து செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருவார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சிறிய மனசஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். தடங்கல்கள் ஏற்படும் மனதில் நிம்மதி இருக்காது உடல் நலக்குறைவு ஏற்படும் ஏதாவது ஒரு வகையில் நல்ல காரியங்கள் தடைப்பட்டு கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் அவர்கள் அவர்களுடைய குலதெய்வத்தை சரியாக வணங்காமல் இருப்பது தான்.

குலதெய்வ வழிபாடு என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு ஆகும். குலதெய்வ வழிபாடு ஒவ்வொருவரும் கட்டாயம் செய்தாக வேண்டும். அப்படி அங்கு சென்று வழிபட முடியவில்லை என்றால் நமது வீட்டிலேயே நமது குலதெய்வத்தை எப்படி வழிபடுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

குலதெய்வ கோவிலுக்கு போக முடியாமல் இருப்பவர்கள் வீட்டிலேயே எப்படி குலதெய்வத்தை வழிபடலாம்.குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து கும்பிடலாம் ஒரு சில குல தெய்வங்கள் ஆக்ரோஷமாக இருக்கும் அதனால் அந்த படத்தை சிலர் வீட்டில் வைத்திருக்க கூடாது என்று சொல்வார்கள். 


என்னதான் ரொம்ப உக்கிரமாக இருந்தாலும் அது நம்முடைய முன்னோர்கள்.  நம்முடைய குடும்ப உறுப்பினரை பார்த்து நாம் ஏன் பயப்பட வேண்டும். அதற்கான அவசியமே இல்லை.  நம்முடைய  குலதெய்வத்தை  பொதுவாக அமாவாசை பௌர்ணமி அல்லது ஞாயிற்றுக்கிழமை மாதிரி கிழமைகளில் வந்து வழிபாடு செய்வது மிகவும் நல்ல விஷயம். 

ஒரு சிலர் அவர்களுடைய குலதெய்வம் என்ன என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்களுடைய ஜாதகத்தின் மூலமாகவோ அல்லது நாடி ஜோதிடத்தில் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய தெய்வம் நமக்கு நல்லது செய்ய தயாராக இருக்கும். ஏன் என்றால் நாம் அவர்களுடைய வழி வழியாக வந்தவர்கள். அவர்களுடைய வம்சாவளி  நம்முடைய குலத்தை சார்ந்தவர்கள் நல்லா இருக்கணும் என்று நம் குலதெய்வம் நினைக்கும்.

நமக்கு ஏதாவது கெட்டது நடக்க போகிறது என்றால் அந்த சமயத்தில் நம்முடைய குலதெய்வம் நமக்கு தெரிவிப்பதற்க்காக ஏதாவது ஒரு வகையில் யார் மூலமாகவோ அல்லது ஏதோ ஒரு சமிக்ஞை மூலமாகவோ  நமக்கு வெளிப்படுத்துவார்கள். அந்த நேரம் குலதெய்வம் அது நமது கண்ணுக்கு தெரியாது. அது என்ன என்று கூட நமக்கு யோசிக்க முடியாது.ஆனால் அந்த நிகழ்வில் இருந்து தப்பிப்பதற்கு நம் குலதெய்வமே நமக்கு உதவியாக இருந்து இருக்கும். 


நாம் என்னதான் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் வழிபட்டாலும் நாம குலதெய்வத்தோட எல்லைக்கு கண்டிப்பாக போக வேண்டும். நாம் அந்த மண்ணை மிதிக்க வேண்டும்.  நம்முடைய குலதெய்வத்தினுடைய மண்ணை மிதித்து  குலதெய்வம் மனதார வேண்டினால் போதும். பிறகு குலதெய்வமே நம்மை காக்கும்.

அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வர முடியாதவர்கள் அந்த கோவிலின் மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை காட்டன் துணியில் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் ஆன ஒரு துணியில் வைத்து எடுத்து வந்து நம் வீட்டில் பூஜை அறையில் பத்திரமாக அதை வைக்க வேண்டும்.

தினமும் காலையில் எழுந்த உடனே அந்த மண்ணில் இருந்து சிறிதளவு எடுத்து நம் வலது உள்ளங்கையில் வைத்து கண்ணை மூடிக்கொண்டு மனதார குலதெய்வத்தை நினைத்து மனம்  உருக நமக்கு என்ன வேண்டுதலோ அல்லது என்ன காரியம் நிறைவேற வேண்டுமோ அதை  நினைத்து குலதெய்வத்திடம் ஒன்பது முறை சொல்லி இதை எனக்கு நீ நல்லபடியாக நடத்தி கொடு என்று  வேண்டிக் கொள்ள வேண்டும். இதே போல் 48 நாட்கள்  வேண்டுதல் செய்து பாருங்கள். நினைத்தது கண்டிப்பாக நடக்கும்.


48 நாள் வேண்டி கொண்டு இருக்கும் பொழுது வீட்டில்  வேறு  தீய சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல் அல்லது வேறு ஏதேனும் ஒரு தீமை நமக்கு நடப்பது போட இருந்தாலும் அதுவும் நம்மை விட்டு போய் விடும். பெண்களாக இருந்தால் 48 நாள் நம்மால் செய்ய முடியாது மாதவிடாய் காலத்தில் நாம் என்ன செய்வது  என்றால் ஒரு ஐந்து நாட்கள் மட்டும்  செய்ய வேண்டாம்.


அதற்கு அடுத்து ஆறாம் நாளிலிருந்து தொடரலாம் ஆனால் 48 நாட்கள் வணங்க வேண்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குலதெய்வம் நடத்தி கொடுக்கும் ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. நீங்கங நினைத்தது கண்டிப்பாக நடக்கும் நடத்தி கொடுக்க வேண்டியது உங்களுடைய தெய்வத்தின் பொறுப்பு.


இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

நம்முடைய குவ தெய்வத்திடம்  நாம் கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை.  நம்முடைய குடும்ப உறுப்பினர் தான் நம்ம உரிமையோடு கேட்கலாம். இது  உன் பொறுப்பு இதை  நீ செய்து முடிக்கிற நீ செய்தே ஆக வேண்டும் என்று நாம் உரிமையோடு பேசலாம்.  பௌர்ணமி அன்றைக்கு நீங்கள் வேண்டுதலை ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. பௌர்ணமி அன்றைக்கு  குலதெய்வத்தை வணங்குவது மிகவும் விசேஷம். 


குலதெய்வத்தை நம்பி கெட்டார் யாருமே இல்லை. நம்மை வாழ வைப்பது மட்டுமே அவங்ர்களுடைய நோக்கம். நாம் அவர்களை நம்ப வேண்டும். அவங்களை நினைத்து கும்பிடுகிறோம் என்று நினைத்தாலே மிகவும் சந்தோஷமாக கேட்பதெல்லாம் அள்ளிக் கொடுப்பார்கள். அனைவரும் அவரவர்களுடைய குலதெய்வத்தை வேண்டி சீரும் சிறப்புமாக வாழ வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *