கல்லீரலை சுத்தப்படுத்தும் 7 வகை உணவுகள்.

 

கல்லீரலை சுத்தப்படுத்தும் 7 வகை உணவுகள்.

(Best Liver Detox Foods in Tamil, Liver Cleansing Foods)



நம் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். கல்லீரல் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு தேவையான பைல் என்னும் முக்கியமான நொதியை சுரக்கிறது. நம் உடலுக்கு தேவையான புரதம் கொழுப்பு போன்ற சத்துக்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இருக்கிறது கல்லீரல்.


நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை சேகரித்து வைப்பது, ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது, இரத்தம் உறைதல் மற்றும் காயங்களை ஆற்றுவது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது. கல்லீரல் இவ்வளவு முக்கியமான ஒரு உறுப்பு. இந்த கல்லீரல் மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக கல்லீரலுக்கு அதிக கழிவுகள் வந்து சேர்ந்துகொள்கிறது. இதனால் கல்லீரல்  மிக எளிதாக  பாதிக்கப்படுகிறது.


 கல்லீரல் வீக்கம்,கல்லீரல் கட்டிகள், கொழுப்புகள் படிவது, கல்லீரலில் கிருமி தாக்கும் என கல்லீரல் புற்றுநோய் வரை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கு நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகளில் கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகளை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே போதுமானது. 


மிக எளிமையான முறையில் கல்லீரலை  ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். கல்லீரலை சுத்தப்படுத்தவும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


 

ஒன்று : மஞ்சள் 


மஞ்சள்

மஞ்சள் மிகவும் ஆரோக்கியமான உணவு என்று நம் அனைவருக்கும்  தெரியும். மஞ்சள் கல்லீரலில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுக்கும். அதனால் கல்லீரலில் செல்கள்  சேதம் அடைவது  தடுக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாம லிவர்ல இருந்து உற்பத்தியாக கூடிய என்ஸைம்சை  தூண்டி கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகளை இயற்கையான முறையில்  வெளியேற்றுவதற்கு உதவி செய்யும். 


தையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்


மஞ்சள் இரண்டு விதத்தில் நாம் உட்கொள்ளலாம். காலை வெறும் வயிற்றில் ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து  சாப்பிடலாம் அல்லது இரவு தூங்குவதற்கு முன்னால் மஞ்சள் கலந்த பாலாகவும் குடிக்கலாம். இது மட்டும் இல்லாமல் சமைக்கும் உணவுகளில் மஞ்சளை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் கல்லீரலை  இயற்கையான முறையில்  சுத்தப்படுத்த முடியும்.


இரண்டு : கிரீன் டீ 


கிரீன் டீ

தினசரி நாம் குடிக்கும் டீ காபியை விட மிகவும் நல்லது கிரீன் டீ. கேட்டசீன்னு சொல்லக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட் அதிக அளவில் இருக்கிறது. இது கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகளை  வெளியேற்றி கல்லீரல் சிறப்பாக வேலை செய்ய உதவி செய்கிறது. தினசரி ஒரு கப் கிரீன் டீ குடிப்பதனால்  கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.


மூன்று : சிட்ரஸ் பழங்கள் 



சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் விட்டமின் சியில்  சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட் இருக்கிறது. மேலும் லிமோனென்  என்று சொல்லக்கூடிய ஆன்ட்டி இன்பிளமேட்டரி ப்ராப்பர்ட்டியும் அதிக அளவில் இருக்கிறது இது ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு கல்லீரல் சுத்தம் செய்வதற்கும் உதவி செய்கிறது. மேலும் கல்லீரலில்  கொழுப்புகள் படிவதையும் தடுக்கக்கூடியது இந்த சிட்ரஸ் பழங்கள். சிட்ரஸ் பழங்களையும் அடிக்கடி உணவு சேர்த்துக்கொள்வது நல்லது.


நான்கு : பூண்டு


 

பூண்டு 



பூண்டில் சல்பர் சத்து  நிறைய இருக்கிறது. இதில் ஆக்டிவேட் பண்ணி கல்லீரலில் இருக்கக்கூடிய டாக்சினை வெளியேற்றும் மற்றும் இதில் இருக்கக்கூடிய அள்ளிசின் செலினியம் போன்ற சத்துக்கள்  கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களை பாதுகாப்பதோடு வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கும். தினசரி இரண்டு பல் பூண்டினை மென்று சாப்பிட்டாலே கல்லீரலை சுத்தப்படுத்த முடியும்.


ஐந்து : பச்சை இலை காய்கறிகள்


பச்சை இலை காய்கறிகள்


பச்சை இலை காய்கறிகளான கீரைகளில் நைட்ரஜன் சத்து அதிக அளவில் இருக்கிறது. இது இயற்கையாகவே கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுக்களை  வெளியேற்றும் பண்புகளை  கொண்டது. பேட்டிலிவர் என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோயையும் ரிவர்ஸ் பண்ணக்கூடிய ஆற்றல் இந்த பச்சைகளை காய்கறிகளுக்கு உண்டு என்று  ஆராய்ச்சியில் சொல்லி இருக்கிறார்கள். தினசரி உணவில்  கீரைகளை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாகவும் கல்லீரலை சுத்தப்படுத்த முடியும் 


ஆறு : கொட்டை வகைகள் 


கொட்டை வகைகள் 


பாதாம் மற்றும் வால்நட்டில் ஒமேகா த்ரீ என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது. இது கல்லீரலில்  டிரான்ஸ்போர்ட் என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்புகள் படிவது  தடுத்து கல்லீரலை பாதுகாக்கும். அது  பாதாம் மற்றும் வால்நட்டில்  இருக்கக்கூடிய அமீனா அமிலங்கள் கல்லீரலில் இருக்கக்கூடிய டாக்ஸிங்களையும் வெளியேற்ற உதவி செய்யும். தினசரி ஒரு பத்து பாதாம் அல்லது வால்நட்டை சாப்பிடுவதால்  கல்லீரலை சுத்தம் செய்ய முடியும்.


ஏழு : மில்க் திஸ்டில்



விதை வகையை சார்ந்த ஒரு இயற்கை மருந்து. சில்மரின் சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சன் மற்றும் ஆன்ட்டி இன்பிளமேட்டரி ப்ராப்பர்ட்டி அதிக அளவில் இருக்கிறது. கல்லீரலை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் கல்லீரல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் மிக விரைவில்  குணமாவதற்கு உதவி செய்யும்.


இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்


இந்த மூலிகை அதிகமாக கிடைப்பதில்லை என்பதினால் இது கேப்சூல் ஃபார்மில் தான் கிடைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்  

தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இந்த மில்க் திஸ்டிலை சாப்பிடலாம். கல்லீரல் ஆரோக்கியத்தை மிக விரைவில் மேம்படுத்தக்கூடியது இந்த மில்க் திஸ்டில்.


கல்லீரலில் கழிவுகளை அதாவது டாக்ஸினோடையும் அதிகப்படுத்தக்கூடிய ஒரு சில விஷயங்களை  தவிர்க்க வேண்டும். 





ஆல்கஹால் மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி அடிக்கடி  குடிப்பது காரமான உணவுகளை  சாப்பிடுவது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது தினசரி மருந்து மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வது, பொறித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது போன்ற காரணங்களினால் தான் கல்லீரல்  அதிக அளவில் டாக்ஸின் உண்டாகிறது. தினசரி  இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பதினால்  கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.


கல்லீரலை இயற்கையான முறையில் சுத்தப்படுத்தவும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் என்ன மாதிரியான உணவுகள்  சாப்பிடலாம் என்று தெரிந்து கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *