கருப்பு கவுனி அரிசி
ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர்களும் மட்டுமே பயன்படுத்திய ஒரு அற்புதமான அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி. அதிக மருத்துவ குணம் வாய்ந்த அரிசி என்பதினால் இதன் பயன் அறிந்து சாமானிய மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தபோது இந்த அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சாமானிய மக்கள் இந்த அரிசியை பயன்படுத்தக் கூடாது என்ற தடைச் சட்டம் இயற்றப்பட்ட வரலாறும் இந்த அரிசிக்கு உண்டு. இதனால் இந்த அரிசியை தடை செய்யப்பட்ட அரிசி என்று அழைக்கிறார்கள்.
இந்த அரிசியில் என்னென்ன சத்துகள் இருக்கிறது என்றால் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் இ, ரிபோப்லோவின், நியாஸின், லுடீன், கால்சியம், மெக்னீசியம், மெக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் என கருப்புகவுனி அரிசியில் இல்லாத சத்துகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு உடலுக்கு தேவையான ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டது கருப்பு கவுனி அரிசி.
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
அரிசி வகைகளிலேயே மிக உயர்ந்த அரிசி என்று தெரிந்து கொள்ளக்கூடிய கருப்பு கவுனி அரிசியை நாம் சாப்பிட்டு வரும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஒன்று : கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் .
கருப்பு கவுனி அரிசியில் அந்த சைனின் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய எல் டி எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து எச் டி எல் என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.
இருதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் கருப்பு கவுனி அரிசி உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
இரண்டு : கேன்சர் வராமல் தடுக்கும்
கருப்பு கவுனி அரிசி கருப்பு நிறத்தில் இருப்பதற்கு இதில் இருக்கக்கூடிய அந்தோசைனின் என்று சொல்லக்கூடிய நிறமிச்சத்து அதிகம் இருப்பது தான் காரணம். இது ஒரு சிறந்த ஆன்ட்டி இன்பிளமிட்டரி மட்டும் இல்லாமல் ஆன்டி கேன்சர் பிராப்பர்டீஸ் அதிகம் கொண்ட அரிசி. இது உடலில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.
100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார்ச்சத்து அடங்கி இருக்கிறது. இது மற்ற அரசிகளை விட 4 மடங்கு அதிகம். நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு நார்ச்சத்து மிக அவசியமானது. செரிமானம் சார்ந்த பிரச்சினைகளான வயிறு உப்புசம் வயிறு இரைச்சல் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளினால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது.
நான்கு : கல்லீரலை சுத்தப்படுத்தும்
கருப்பு கவுனி அரிசியில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குளோபலைட்ஸ் மற்றும் அமீனா அமிலங்கள் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்தும் மற்றும் கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களையும் புதுப்பிக்கும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு மற்றும் இது உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை சீராக இயக்கி ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்யும்.
ஐந்து : சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
அரிசி வகைகளிலேயே மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டும் மிக அதிக அளவிலான நார்ச்சத்தும் கொண்ட அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி. இது ஒரு லோ கிளைசிமிக் இன்டக்ஸ் அரிசி. இது ரத்தத்தில் மெல்ல மெல்ல சர்க்கரையாக மாறும் தன்மை உடையது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது தடுக்கப்படும். சர்க்கரை நோயாளிகளும் எந்த பயமும் இல்லாமல் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வரலாம்.
இதையும் படிக்கலாமே ;பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
ஆறு : ரத்தசோகையை குணமாக்கும்
உடலில் புதிய சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான சத்து இரும்புச் சத்து. கருப்பு கவுனி அரிசியில் மிக அதிக அளவிலான இரும்புச்சத்து அடங்கி இருக்கிறது. 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 2.2 கிராம் இரும்புச்சத்து அடங்கி இருக்கிறது. அனிமியா போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்
ஏழு : உடல் எடையை குறைக்கும்
அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டுவது மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட் உடலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடையும் வேகமாக குறையும்.
எட்டு : மன அழுத்தத்தை குறைக்கும்
கருப்பு கவுனி அரிசியில் இருக்கக்கூடிய ஆந்தோஷைனின் என்ற ஆன்டிஆக்சிடென்ட் மூளையில் உற்பத்தியாக கூடிய கார்ட்டிசால் எனும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை கட்டுப்படுத்தும். இதன் மூலமாக மன அழுத்தமும் குறையும். அதிகமான அழுத்தம், மனச்சோர்வு, ஆன்சட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டுவதால் மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சியும் உண்டாக்கும்
ஒன்பது : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான புரதம் இரும்புச்சத்து என பல்லூட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்த அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி. இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். இதன் மூலமாக பல்வேறு நோயிலிருந்து நம்மை பாதுகாக்க கூடியது இந்த கருப்பு கவுனி அரிசி.
பத்து : அலர்ஜியை தடுக்கும்
தோலில் அலர்ஜி எரிச்சல் புண்கள் என அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இந்த கருப்பு கவுனி அரிசி. உடலில் உள்ள ரசாயன கழிவுகளின் மாற்றமே உடலில் பல்வேறு விதமான அலர்ஜி உண்டாவதற்கு காரணம். ரசாயன மாற்றங்களை கட்டுப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்றும் ஆற்றல் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு. மற்றும் இது ஒரு முற்றிலும் க்ளூட்டன் ஃப்ரீ உணவு . க்ளூட்டன் அலர்ஜியினால் அவதிப்படுபவர்களும் இந்த கருப்பு கவுனி அரிசியை தாராளமாக சாப்பிடலாம்.