கருஞ்சீரகம் யார் யாரெல்லாம்
சாப்பிடக்கூடாது – கருஞ்சீரகத்தின்
பக்க விளைவுகள் என்ன?
Who should not eat black cumin – What are the side
effects of black cumin?
கருஞ்சீரகத்தினுடைய பக்க விளைவுகளை மட்டும் தெரிந்து கொள்வோம். ஏற்கனவே கருஞ்சீரகம் எடுத்துட்டு இருந்தாலும், இனிமேல் கருஞ்சீரகம் பயன்படுத்தலாமா என்ற யோசனை இருந்தாலும் இதை படித்து தெரிந்து கொண்டு தொடருங்கள்.
பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஆனால் 97% கருஞ்சீரகத்தால் நன்மை என்றாலும் இரண்டு மூன்று சதவீதம் தீமையும் இருக்கிறது. கருஞ்சீரகத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் பல வியாதிகளுடன் சாப்பிட்டாலும் கருஞ்சீரகம் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அதனுடைய பக்க விளைவுகள் என்ன?
ஒன்று
கருஞ்சீரகத்தை வியாதியின் கூர்மையை பொறுத்து ஒரு மண்டலமோ அல்லது இரண்டு மண்டலமோ அல்லது ஒரு சில நாட்களுக்கு மட்டுமோ எடுத்துகலாம். மாறாக மாத கணக்கில், வருட கணக்கில் அல்லது ஆயுல் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி மாதக் கணக்கில் வருட கணக்கில் தொடர்ந்து கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் சிறுநீரகப் பிரச்சனை மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று அமெரிக்காவில் இருக்கக்கூடிய எம் எஸ் கே சி சி என்ற(Memorial Sloan Kettering Cancer Center (US)) என்ற ஆய்வு நிறுவனம் தன்னுடைய ஆய்வு முடிவுகளில் தெரிவித்திருக்கிறார்கள்.
கருஞ்சீரகத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டாலே உங்களுக்கு பூரண குணம் தெரிய தொடங்கும் அலோபதி மாத்திரை போல ஆயுல் முழுவதும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க
இரண்டு
கர்ப்பிணி பெண்கள் எந்த காரணத்தை கொண்டும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட எம் எஸ் கே ஆய்வு நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருஞ்சீரகத்தை உட்கொண்டால் வயிற்றில் இருக்கக்கூடிய கருவிற்கும் கர்ப்ப பைக்கும் பாதிப்பு உண்டாகும். அதனால் குழந்தை பேருக்காக காத்திருக்கிறவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டாம். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களும் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது.
மூன்று
பொதுவாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கருஞ்சீரகம் கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. அளவு குறைவாக ஒரு சில நாட்கள் உட்கொண்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து உட்கொண்டால் பச்சிளம் குழந்தையை பாதிக்கும் தன்மை இந்த கருஞ்சீரகத்திற்கு உண்டு.
நான்கு
குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure) உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளக்கூடாது. ஏன் என்றால் கருஞ்சீரகத்தின் முக்கியமான பண்புள்ள ஒன்று உயர் ரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க கூடியது அதனால் குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவசியம் கருஞ்சீரகம் உட்கொள்ள வேண்டும் என்றால் ஒரு கால் ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு சில நாட்களுக்கு உட்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே ; சிறுநீரக கல் கரைய உணவுகள்
ஐந்து
குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறவர்கள் கருஞ்சீரகத்தை தவிர்ப்பது போல் குறைந்த அளவு சர்க்கரை (low level sugar) உள்ளவர்க ளும் கருஞ்சீரகத்தை குறைவாக தான் உட்கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கிறவர்கள் ஒரு மண்டலம் கருஞ்சீரகத்தை சாப்பிட்டாலே சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும். அதனால் லோ சுகர் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
ஆறு
ஒரு சிலருக்கு மூக்கின் வழியாக இரத்தம் வருவதை பார்த்திருப்பீர்கள் இவர்களைப் போன்றவர்கள் கருஞ்சீரகத்தை மிக குறைவாக தான் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருப்பதும் ரொம்ப நல்லது. கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் ரத்தம் உரை நிலை குறையும் இதனால ரத்த ஓட்டம் அதிகரிக்கும் கருஞ்சீரகத்தை அதிகமாக சாப்பிடும்பொழுது மூக்கின் வழியாக வலியக்கூடிய ரத்தம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை தவிர்ப்பதே நல்லது.
ஏழு
சைட்டோ கிராம் பி45 அல்லது அதற்கு நிகரான மருந்துகள் சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டு கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது என்று எம் எஸ் கே ஆய்வு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமெரிக்கன் ஜெனரல் ஆஃப் சைனீஸ் மெடிசின் ஆய்வு அறிக்கையின்படி கருஞ்சீரகம் நன்மைகளையே அதிகம் கொடுக்கக் கூடியது. ஒரு சிலர் மட்டுமே ஒரு சில நேரங்களில் இந்த கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டி இருக்கிறது. கருஞ்சீரகத்தை சித்த மருத்துவத்தின் படி சரியான அளவில் சரியான கால அளவில் உட்கொள்ளும்போது நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.