அதிகன் தமிழின் அன்பான வணக்கம்
நம் மூதாதையர்கள் கிராமம் சார்ந்த விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மை ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் போக்கை வைத்து நேரத்தை கணிப்பதும் சகுனங்கள் நிமிர்த்தங்கள் கனவுகள் ஆகியவற்றின் பலன்களை பார்ப்பதும் அன்றைய கால வழியில் இருந்து வந்துள்ளது. இவற்றை தங்களின் வழிகாட்டியாகவும் நம் மரபு சார்ந்த விஷயமாகவும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்.
நீண்ட நெடுங்காலமாக பாம்பை வழிபாட்டுக்கு உரியதாக கருதி வழிபட்டு வந்தார்கள். இதை ஒட்டியே பெண்கள் அம்மன் ஆலயங்களில் நாக வழிபாடு செய்வதும் புற்றுக்கு பால் வாற்பது போன்ற வழிபாடுகளை செய்து தொன்று தொட்டு கடைபிடித்தும் வந்தார்கள். இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள் நம்பிக்கைகள் ஆகியவை மக்களிடம் இன்றளவும் இருந்து வருகிறது.
கனவுகளே வாழ்க்கை இல்லை என்றும் கனவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் சொல்வார்கள். பிறந்து சில நாட்களான பச்சிளம் குழந்தைகள் கூட கடவுள் காண்பது உண்டு. அவர்கள் தூக்கத்தில் புன்னகைப்பதையும் மகிழ்ச்சியோடு விழித்துக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தில் கனவுகள் வருவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் காணும் கனவுகளுக்கு பலன்கள் உண்டு எனும் நம்பிக்கையும் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.
| இதையும் படிக்கலாமே |
|---|
| எந்த கனவு நல்ல கனவு? எந்த கனவு கெட்ட கனவு? |
ஒரு ஜாதகருக்கு ராகு திசை அல்லது ராகு புத்தி நடைபெற்றால் அவரது கனவில் பாம்புகள் வரும். இதனால் ராகு கேதுக்கு உறிய பரிகாரங்களை முறையாக முழுமையாகவும் உடனடியாகவும் செய்வது நல்லது. ஏழரை சனி நடைபெற்றால் பாம்பு கனவில் வரும் என்பதெல்லாம் அனைவருக்கும் பொருந்தாது. ஏழரை சனி நடந்தால் மனம் அவஸ்தைப்படும் அதனால் நல்ல தூக்கம் இருக்காது. பாம்பு கனவில் வருகிறது என்றால் ஒன்று இது நாள் வரை குலதெய்வ வழிபாடு செய்ய தவறியிருந்தாலோ அல்லது இடையில் நிறுத்தி இருந்தால் குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து இப்படி அடிக்கடி உங்களுக்கு உணர்த்தும். அந்த பிராத்தனையை நீங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் சைவர்கள் சிவன் கோயிலுக்கு சென்றும். வைணவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்து விட்டு வந்தால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் பாம்பு நம்முடைய கனவில் எப்படி வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நம்மில் அனைவருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது பாம்பு கனவில் வருவதை நாம் பார்த்திருப்போம். பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் வந்து தொல்லையும் கொடுக்கும். பலருக்கும் பாம்பு என்றால் குலையே நடுங்கும். எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் அது எப்போது வேண்டுமானாலும் தாக்கும். அதனால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்புகள் பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த போதிலும் கனவில் வரும்பாம்புகள் பொதுவாக சிக்கலாக ஒன்றாகவே இருக்கும்.
அந்த வகையில் பாம்பு கனவில் வந்த காரணத்தை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே பாம்பை கனவில் காண்பது உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக பொருள் இழப்போ அல்லது உங்கள் நண்பரிடம் மனக்கஷ்டம் ஏற்படலாம்.
வீட்டில் பாம்பு வளர்ப்பது போல் கனவு கண்டால் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
உங்கள் தலையில் பாம்பு அமர்ந்து இருப்பது போல கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும். மாற்றத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் நீங்கள் முன்னேறுங்கள்.
பாம்பு உங்களுக்கு முத்தமிடுவதைப் போல கனவு கண்டால் எதிரிகளால் சில மாற்றமான சூழல் உண்டாகும்.
| இதையும் படிக்கலாமே |
|---|
| கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் |
பாம்பு கனவில் விஷத்தை கொட்டிக் கொண்டிருப்பது போல கனவு கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
பாம்பு பால் குடிப்பதை போல கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதை உணர்த்துகிறது.
பாம்பு சீறுவதை போல கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கிறது.
பல பாம்புகள் உங்களை சூழ்ந்து கொண்டது போல கனவு கண்டால் சில தடைகளால் கால தாமதம் நேரிடலாம் என்பதை குறிக்கிறது.
மலைப்பாம்பு உங்கள் உடலை சுற்றி விழுங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த பெரிய ஆபத்து விலகி விட்டது என்று பொருள்.
பாம்பு மேலிருந்து கீழே விழுவது போல கனவு கண்டால் பணம் விரையம் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
மலைப்பாம்பை கனவில் கண்டால் தொல்லைகள் மற்றும் பிணிகள் நம்மை பிடித்து இருக்கும் தரித்திரங்கள் அனைத்தும் நீங்கும் என்பதை குறிக்கிறது.
பாம்பு இறந்து கிடப்பதை போல கனவு கண்டால் துக்க செய்தி உங்களை நாடி வரும் என்பதை குறிக்கிறது
| இதையும் படிக்கலாமே |
|---|
| இறந்தவர்கள் கனவில் வந்தால் |
பாம்பு உங்களை கண்டு பயந்து ஓடுவதை போல கனவு கண்டால் தங்களுக்கு வரவிருந்த ஆபத்து விலகி விட்டதாக அர்த்தம்.
பாம்பு உங்கள் முன் படம் எடுத்து ஆடுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் திடீரென பாம்பு உங்களை விரட்டி வந்து கடிப்பதை போல கனவு கண்டால் கஷ்டங்கள் உங்களை விட்டு அகலும்.
நெடுங்காலமாக தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு அது உடனடியாக தீரும். தன லாபம் உண்டாகும் துன்பங்கள் விலகும் எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்
திருமணம் ஆகாதவர்களுக்கு பாம்பு கடித்து ரத்தம் வருவது போல கனவு கண்டால் மிக விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.
நீங்கள் பாம்பு புற்றை கனவில் கண்டால் புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கிறது.
ஒற்றை நல்ல பாம்பை நீங்கள் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லைகள் உண்டாகும்.
பாம்பு கனவில் வந்து தரையில் கொத்தினால் ஒருவரை பிடித்திருந்த தோஷமும் திருஷ்டியாகவே வெளியேறி ஐஸ்வர்யம் சேரும் என்பதை குறிக்கிறது.
பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டு மீண்டும் வெளியில் போவதைப் போல கனவு வந்தால் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பாம்பு உங்கள் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல கனவு கண்டால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.
| இதையும் படிக்கலாமே |
|---|
| 50 கனவுகளின் பலன்கள் |
| இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள் |
தனியாக ஊர்ந்து செல்லும் பாம்பை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு விரோதிகளால் தொல்லைகள் உண்டாகும் அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
இரட்டை பாம்புகளை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.
பாம்பை நீங்கள் கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் உங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும் என்பதை குறிக்கிறது.
பாம்பு உங்களை துரத்திக் கொண்டு வருவதை போல கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சற்று கவனத்தோடு நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
உங்கள் காலை சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போலவும் காலை சுற்றுவது போலும் கனவு கண்டால் உங்களை சனி பிடிக்க போகிறது என்று அர்த்தம்.
கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்
அதே சமயம் உங்களை பாம்பு கடித்து ரத்தம் வருவது போல கனவு கண்டால் உங்களை பிடித்த சனி நீங்கி விட்டது என்று அர்த்தம்.
உங்களுடைய கழுத்தில் பாம்பு மாலையாக விழுவது போல கனவு கண்டால் நீங்கள் விரைவில் பணக்காரராக போகிறீர்கள் என்று அர்த்தம்.
சிறிய பாம்பை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஒரு சங்கடமான விஷயத்தையோ அல்லது உங்களுக்கு நடக்க இருக்கும் ஒரு பிரச்சினையை நீங்கள் குறைவாக மதிப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த நேரங்களில் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும் எதையும் ஒன்று இரண்டு முறை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
| இதையும் படிக்கலாமே |
|---|
| எந்த கனவு நல்ல கனவு? எந்த கனவு கெட்ட கனவு? |
| கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் |
| இறந்தவர்கள் கனவில் வந்தால் |
| 50 கனவுகளின் பலன்கள் |
| இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள் |
புதிதாக திருமணமானவர்களுக்கு பாம்புகள் பின்னி பிணிவது போல கனவு கண்டால் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கப் போவதாக அர்த்தம்.
புது வாரிசு உண்டாவதற்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம் அதனால் நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை விரைவில் நல்ல காரியங்கள் நடக்கும்.
பாம்பு உங்கள் மீது ஏறி செல்வது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
நீங்கள் பாம்புகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது போல கனவு கண்டால் மாற்றமான சூழலால் சாதகமான பலன்கள் உண்டாகும் புரிதல் உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.
கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்
கருநாகப் பாம்பு உங்களை துரத்துவது போல கனவு கண்டால் அது நல்லதல்ல அதனால் செய்யும் செயல்களின் தன்மை அறிந்து நீங்கள் செயல்படுவது நல்லது.
பாம்பு தோல் உரிப்பது போல் கனவு கண்டால் உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
இரண்டு பாம்புகள் பிணைந்து இருப்பது போல கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
கோவிலில் உள்ள கிணற்றில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதை குறிக்கிறது.
பாம்புகள் உங்களை விரட்டுவதாக நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு வறுமை உண்டாகும் என்று குறிக்கிறது.
பாம்பு செடி கொடிகளில் இருப்பது போல கனவு கண்டால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. இதனால் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் உங்களுக்கு வரலாம்.
வெள்ளை நாகத்தையும் உங்கள் கனவில் கண்டால் எந்தவித புது முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.
குட்டி பாம்புகளை நீங்கள் கனவில் கண்டால் நம் எதிரிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களை புறக்கணித்தால் என்றாவது நமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் என்று அர்த்தம்.