கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன். Benefits if God Comes in Your Dreams (Gods in Dreams)
அதிகன் தமிழ்உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
கனவுகள் சொப்பனங்கள் நம் உறக்கத்தின் ஒரு பெரும் பகுதி ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மளை அறியாமலே ஒரு மாய உலகத்திற்கு அழைத்துக்கொண்டு போகும். இந்த கனவுகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டோம். ஏன்னா நம் நிஜ வாழ்க்கையில் நடக்காத நிறைய விஷயங்கள் நம்மளுடைய கனவில் நமக்கு நடக்கிற மாதிரி இருந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவோம். கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
ஆனால் இந்த கனவுகளுக்கு ஏதும் பலன் உண்டா? நாம் கண்ட கனவு பலிக்குமா? என்று யோசிக்காதவர்களே இருக்க மாட்டோம். சில கனவுகள் நாம் தூங்கி எழுந்த பிறகும் நல்லா ஞாபகம் இருக்கும். எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கவே மாட்டோம். சில கனவுகள் நம்மளை அறியாமலே மறந்திடுவோம். மற்றும் சில கனவுகள். நாம் யூகிக்க முடியாத அளவுக்கு பயங்கரமாவோ இல்லனா ரொம்ப சந்தோஷமாகவோ இருக்கும். ஆனால் என்ன நடந்துச்சுன்னே நமக்கு புரியாது. இப்படி கனவுகள் பலவிதமாக வரும்.
ஒன்று: நம்முடைய ஆழ் மனதின் எண்ணங்கள் நிறைவேறாத ஆசைகள் நமக்கு கணவாக வரும். இன்னொன்று நம்முடைய பூர்வ ஜென்ம பந்தங்கள் அப்பொழுது நடந்த விஷயங்கள் கனவுகளாக வரும். அதையும் தாண்டி சிலருக்கு வரும் காலத்தில் நடக்கப்போகின்ற விஷயங்கள் கணவாக வரும்.
இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்
ஒரு சில நேரத்தில் ஆன்மீக கனவுகள் அந்த கடவுளே நம் கனவில் தோன்றி பேசுவது போல வரும். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் நிறைய நேரத்தில் குழம்பி போய் நின்றிருப்போம். நம்முடைய கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நமது இந்து மதத்தை பொறுத்தவரை பலவிதமான சாஸ்திரங்களை பின்பற்றி வருகின்றனர். அதிலே கனவுகளுக்கு உண்டான பலன்களை தெரிந்து கொள்ள சொப்பன சாஸ்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.
கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களுடைய வாழ்க்கையில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் போது தான் அந்த கடவுளுடைய அனுகிரகம் கிடைத்து கடவுளே காட்சி கொடுக்கிறார். அப்படி தோன்றும் சில கனவுகள் மூலமாக நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படி நம்முடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் நல்லது மற்றும் கெட்டதை நமக்கு உணர்த்துகின்ற வகையில் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு விதமான விஷயங்களை நமக்கு தெரியப்படுத்துவார்கள்.
சிவபெருமானையோ அல்லது சிவன் தொடர்பான ஏதாவது ஒரு பொருளைளோ நம்முடைய கனவில் கண்டால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் விரைவிலே நடக்கும்.
சிவலிங்கம் நம்முடைய கனவில் வந்தால் தினமும் தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சிவலிங்கம் நம்முடைய கனவில் தோன்றும். இது கடந்த கால வாழ்க்கையில் நமக்கு இருந்த ஆசை மற்றும் வேண்டுதல்களுடைய வெளிப்பாடு என்று சொல்லி இருக்கிறது.
சிவலிங்கம் கனவில் வருவது வெற்றியை குறிக்கும். உங்களுக்கு இருந்த தடைகள் விலகி செல்வம் வந்து சேரப்போவதற்கு அறிகுறியாக சிவலிங்கம் மனிதர்களுடைய கனவில் வரும் என்று சொல்லி இருக்கிறது.
சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதை குறிக்கிறது.
சிவன் மற்றும் அவருடைய மனைவி பார்வதி இவங்க ரெண்டு பேரையும் கனவில் ஒன்றாக பாக்குறது மிகச்சிறந்த அறிகுறியாக சொல்லி இருக்கிறது.
இவங்க ரெண்டு பேரையும் கனவில் ஒன்றாக பார்த்தால் புதிய வாய்ப்புகள் நம்மளை தேடி வருமாம்.விரைவில் மகிழ்ச்சியான செய்தியும், பிடித்த பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் செல்வமும் தேடி வரப்போகுதுன்னு அர்த்தம்.
இதையும் படிக்கலாமே: 50 கனவுகளின் பலன்கள்
சிவனின் நடனம் சிவதாண்டவத்தை கனவில் பார்ப்பது பேரார்வத்தின் ஒரு அடையாளம் என்று சொல்லி இருக்கிறது.இந்த கனவை நாம் கண்டால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்சனைகளும் சீக்கிரமே முடியப்போகிறது என்பதற்கு ஒரு அறிகுறியாக இருக்கும்.
ஆனால் அதற்கு முன்னால் நம்முடைய வாழ்க்கையில் பல சவால்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று சொல்லி இருக்கிறது.
சிவ ஆலயம் ஈசன் வசிக்கும் இருப்பிடத்தை போன்ற சிவன் கோவில் நம்முடைய கனவில் வந்தால் ஈசனுடைய மகன்கள் போன்று இரண்டு மகன்கள் பிறக்க வாய்ப்புள்ளது.
கனவில் கோயிலை பார்த்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் என்று புராணங்களில் நம்பப்படுகிறது.ஒருவர் நாற்பட்ட தலைவலியாலும் வயிற்று வலியாலும் பாதிக்கப்பட்டிருந்தால் சிவன் கோவிலை கனவில் பார்ப்பது மூலமாக அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சிவனின் திரிசூலத்தை கனவில் பார்ப்பதன் மூலமாக திரிசூலம் முக்காலம் கடந்த காலம் எதிர் காலம் நிகழ் காலம் கூட முக்கால பிரச்சனைகளும் இந்த திரிசூலுத்தை நாம் கனவில் கண்டால் தீரும் என்று சொல்லி இருக்கிறது. அதனுடைய நல்ல அறிகுறி தான் சிவபெருமானுடைய திரிசூலம்.
சிவனின் நெற்றிக்கண். சிவனின் மூன்றாவது கண்ணை நாம் கனவில் பார்பதன் மூலமாக வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுப்போமாம். இந்த நெற்றிக்கண் உங்கள் கனவில் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை கொடுக்கிறது.
கிருஷ்ணரை நம்முடைய கனவில் பாக்குறது ரொம்பவே புனிதமானது.
இந்த கனவுகள் நமக்கு உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலினும் இந்த பூமியில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாணம் சொல்கிறார்கள்.
குழந்தை கிருஷ்ணரை கனவில் காண்பதே நல்ல அறிகுறி. நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பிற்கு குறைவே இல்லாமல் செல்வந்தர்களாக வாழ்வோம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் சிரமங்கள் எல்லாம் நீங்கி விரைவில் நல்ல வாழ்க்கை துணை நமக்கு கிடைப்பார்கள். கிருஷ்ணரை கனவில் பார்த்தால்.
கிருஷ்ண பகவானுக்கு சில வேலைகள் செய்து கொடுக்கிறது. அதாவது கிருஷ்ணரை குளிப்பாட்டுவது, அவருக்கு உணவு அளிப்பது, புதிய டிரஸ் போட்டு விடுறது, கிருஷ்ணருக்கு உணவு தயாரிப்பது என்று அவருக்கு சேவை செய்யறது போன்ற கனவுகள் வந்தால் நாம் நினைத்த எல்லாம் காரியமும் நிறைவேறும் காலம் வந்துவிட்டது என்று சொல்வார்கள்.
கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்
அதே மாதிரி கிருஷ்ண பகவானோட கோவிலை நாம் கனவில் பார்த்தால் கிருஷ்ணர் நம்முடன் கூட நம் வழிபாட்டிலும் நம் வாழ்க்கையிலும் எப்பவும் நம் கூட பரிபூரணமாக இருக்கின்றார் என்பதை உணர்த்தும் விதமாகவும் நம்முடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறும் என்பது இந்த கனவோட பொருள்.
இதையும் படிக்கலாமே: 50 கனவுகளின் பலன்கள்
கிருஷ்ண பகவானுடைய சிலை உடைந்தோ அல்லது குப்பைத் தொட்டிலையோ கிடக்கிறது போல நமக்கு ஒரு கனவு வந்தால் நம்ம வாழ்க்கையில் ரொம்ப மோசமாக ஏதோ ஒரு விஷயம் நடக்கப்போகின்றது.
கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுவது மாதிரியான கனவு வந்தால் வாழ்க்கை துணையை நீங்கள் சீக்கிரமே சந்திக்க போகின்றீர்கள் என்றும் அவுங்க ரொம்ப அன்பானவர்கள் என்றும் அர்த்தம்.
கிருஷ்ணரோட மயிலிறகை கனவில் கண்டால். இது கிருஷ்ணரோட நேரடி ஆசீர்வாதத்தை பெற்று தரக்கூடிய ஒரு கனவு என்று அர்த்தம்.
ரொம்ப கோபமான உருவத்தில் கிருஷ்ணபகவான் கனவில் காட்சி கொடுத்தார் என்றாள் அதை ஒரு எச்சரிக்கை கனவாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்க்கையில் செய்த பிரச்சனைகளை சரி பண்ணி எதிர்காலத்தில் நடக்கப் போகும் பிரச்சனைகள் வராமல் நம்மளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை கனவாக சொல்லப்படுகிறது.
மகாவிஷ்ணு எந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தாலும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று சொல்லி இருக்காங்க. மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வருவது போல நமக்கு கனவு வந்தால் நாம் ஏதாவது கேஸ் போட்டு இருந்தோம் என்றால் அந்த கேஸ் நமக்கு சாதகமாக முடியும் என்று சொல்லி இருக்காங்க. காளிதேவி ஆக்ரோஷமான உருவத்தில் கனவில் வந்தால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் உங்களுக்கு ஏற்படும்.
சாந்த சொரூபமாக அம்மன்கனவில் வந்தால் அம்மனுடைய பரிபூரண அருள் கிடைத்து வீட்டில் சீக்கிரமே சுப காரியங்கள் நிகழும்.
அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து போல கனவு வந்தால் எந்த தீய சக்தியும் நம்மை நெருக்காது என்பதுதான் இந்த கனவோட பொருள்.
திருநீறு பூசுவது போல் கனவு வந்தால் நல்ல ஞானம் பிறக்கும் என்பது பொருள்.
முருகப்பெருமான் நம் கனவில் வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பொருள்.
விநாயகர் நம்முடைய கனவில் வந்தால் புதிதாக தொடங்கும் வேலை நல்லபடியாக நடந்து முடியும் என்பது தான் இந்த கனவோட அர்த்தம்.
விநாயகப் பெருமானுக்கு உகந்த யானையும் முருகப்பெருமானுக்கு உகந்த சேவலோ மயிலோ நாம் கனவில் துரத்துவது போல் கனவு வந்தால் அவர்களிடம் நாம் வேண்டிக் கொண்ட ஏதோ ஒன்று மீதம் இருக்கிறது என்று அர்த்தம்.
அம்மனுக்கு உகந்ததும் தீய சக்திகளை அழிக்கவல்ல எலுமிச்சை நம் கனவில்வந்தாலோ அல்லது யாராவது நமக்கு எலுமிச்சம்பழம் கொடுக்கிறது போல கனவு கண்டாலோ நம்முடைய தொழிலில் முன்னேற்றமடைந்து எல்லா செல்வங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காலம் காலமாக நம் குலத்தைக் காக்கும் குலதெய்வம் நம்முடைய கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த கனவோட அர்த்தம்.
விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் பிறந்த சபரிமலை ஐயப்பனை கனவில் பார்த்தால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ராமரின் கிரீடத்தையும் பட்டாபிஷேகத்தையும் கனவில் பார்த்தால் ஒற்றுமை அதிகரிக்கும்.
நரசிம்மர் சுவாமியை கனவில் பார்த்தால் இதுவரைக்கும் நம்முடைய வாழ்க்கையில் இருந்த எல்லா தடைகளும் எதிர்ப்புகளும் நீங்கி எதிரிகளே இல்லாத வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும் என்பது தான் இந்த கனவோட அர்த்தம்.
தெய்வ விக்கிரகங்கள் நம்முடைய கனவில் வந்தால் நமக்கும் நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய நன்மைகள் நடக்கும்.
கோவில் மணியை கனவில் பார்த்தால் நம்முடைய மனதில் நினைத்த காரியம் அப்படியே நடக்கும்.
கோவில் மணியை அடிக்கிறது போல கனவு வந்தால் பொருள் வரவு ஏற்படும்.
கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு வந்தால் நாம் செய்கின்ற காரியங்களில் இடஞ்சல்கள் ஏற்படுமாம்.
கனவில் கோவில் மணியோசை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவங்களுக்கு சீக்கிரமே குழந்தை கிடைக்கும் என்று சொல்லி இருக்காங்க. பொருள் வரவு பெருகும்கிறதும் ஒரு அர்த்தமாயிருக்கு.
இதையும் படிக்கலாமே: இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்
அழகான கோவில் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
சேதமடைந்த இடிந்த கோவிலை கனவில் பார்த்தால் நாம் செய்கின்ற செயலில் தோல்வியும் நஷ்டமும் ஏற்படபோகிறது என்பது கனவோட அர்த்தம்.
கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல கனவு வந்தால் நாம் ஒரு செயல் தொடங்குறோம் என்றால் முதலில் சில இடர்பாடுகளும் தடைகளும் ஏற்படுமாம். ஆனால் தெய்வத்தின் அருளால் அந்த காரியம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறார்கள்.
கோயிலுக்கு போய் சாமி கும்பிட முடியாமல் இறைவனை தரிசிக்க முடியாமல் திரும்புறது போல கனவு கண்டால் நமக்கு ஒரு தீராத பிரச்சனை காத்திருக்கின்றது தான் இந்த கனவோட அர்த்தம்.
கோவில் கோபுரத்தை தரிசிப்பது போல் கனவில் வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் எல்லாம் நீங்கி நல்ல நிலைக்கு போக போறோம் என்கிறது தான் இந்த கனவோட அர்த்தம்.
ஒரு கோவிலுக்குள் போகவேண்டும் என்று நினைத்து கூட்டத்தில் மாட்டி சிக்கிக்கொண்டது போல கனவு வந்தால் எதிர்பார்க்காத பிரச்சினைகளை சிக்கிக்கிட்டு கஷ்டப்படுவோம் என்கிறதுதான் இந்த கனவோட பொருள்.
இப்பொழுது ஒரு கோயிலில் நாம் மட்டும் தனியாக இருக்கும்போது அந்த கோவிலோட கதவுகள் மூடப்பட்டது போல நமக்கு கனவு வந்தால் நாம் செய்யும் தொழிலில் ஏதோ பிரச்சினை ஏற்பட போகுதுங்கறதுதான் இந்த கனவோட அர்த்தம்.
கோவில் வாசலை நாம் திறந்துகொண்டு உள்ளே போறது மாதிரியான கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைய போகிறோம் என்பதுதான் இந்த கனவோடு அர்த்தம்.
கோவில் பிரசாதத்தை வாங்குவது போல கனவு கண்டால் நமக்கு நெருங்கிய சிலரால் மனக்கவலைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
சொப்பன சாஸ்திரத்தின் படி கனவில் எந்த கடவுளை கண்டாலும் அது நல்ல சகுனமாக தான் சொல்றாங்க இந்த ஜென்மத்துக்கான புண்ணியம் அந்த ஒரு கடவுளையே கிடைச்சிடுமாம். அதே மாதிரி நமக்கு ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சனைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும் என்று தான் சொல்லி இருக்காங்க.