கண் திருஷ்டி நீங்க ஒரு எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல் வாராவாரம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சொல்லக்கூடிய இந்த ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்கின்றீர்கள் என்றால் உங்களுடைய உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட சக்தியாக இருந்தாலும், கண் திருஷ்டியாக இருந்தாலும் உடம்பை விட்டு பல மைல் தூரத்திற்கு ஓடி விடும். அப்படியொரு பரிகாரம் அதுவும் எலுமிச்சை பழத்தை வைத்து செய்யலாம். எலுமிச்சை பழத்தை வைத்து எப்படி நாம் பரிகாரம் செய்யப் போகின்றோம் என்று தெரிந்து கொள்வோம். கண் திருஷ்டி நீங்க ஒரு எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
நம்மைக் கெட்ட எண்ணத்தோடு ஒருவர் பார்த்தாலே போதும். எதிர்மறை ஆற்றல் வந்து நம்மளோட உடலைச் சூழ்ந்து விடும். இந்த மாதிரி நம்முடைய உடம்பில் கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல் நம்முடைய உடம்பை சூழ்ந்து விட்டது என்றால் அதன்பின் நம்முடைய குடும்பத்தில் பூகம்பமே வெடிக்க தொடங்கிவிடும். வீட்டில் எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருப்போம். திடீர் என்று நோய் நொடிகள் வரும் என்ன பிரச்சனை என்றே தெரியாது காசு வீண்விரயம் ஆகும்.
மருந்து மாத்திரை வீட்டில் குவிந்துகொண்டிருக்கும். மாத்திரை மருந்துகள் நிறைய செலவாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்களால் சாப்பிட கூட முடியாது. அந்த அளவிற்கு ஏதாவது பிரச்சனைகள் வரும். சாப்பாடு எல்லாம் சமையல் அறையில் வீணாகப் போகும். இந்த மாதிரியான சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும். வீட்டைச் சுத்தம் செய்யவே முடியாது. வீடு குப்பை கூலமாகவே அப்படியே இருக்கும். நம்முடைய மனதில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
இதையும் படிக்கலாமே: எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவதேன்?
சண்டை சச்சரவு மாதிரி ஏதாவது ஒன்னு வந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஒரு வீட்டில் திடீர் என்று வருகிறது என்றால் கண்டிப்பாக அது கண் திருஷ்டியால் வருவது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாத்தையும் சரி செய்யணும் என்றால் வாரத்திற்கு ஒருமுறை நம்முடைய உடம்பில் தங்கி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நாம் வெளியே விரட்டி அடிக்கணும்.
எப்படி சுலபமாக ஆன்மீக முறைப்படி பரிகாரம் செய்யறது என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு கரும்புள்ளி கூட இல்லாத ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சை பழத்தை வாங்கவும். அந்த எலுமிச்சை பழத்தை நான்கு பாகங்களாக வெட்டி நான்கு பாகங்களும் தனித்தனியாக வந்துரக் கூடாது. நான்கு பாகமாக வெட்டி இருக்கணும் ஆனால் அடியில் இருக்கும் பகுதி மட்டும் ஒட்டி இருக்கணும். நடுவில் ரத்த சிவப்பு இருக்கிறது மாதிரி குங்குமத்தை தடவிடணும். அந்த நாலு பக்கமாக விரிஞ்சி இருக்கும் எலுமிச்சையின் உள்ளுக்குள் குங்குமத்தை தடவி அது கூடவே உப்புக் கல்லை வைக்கணும்.உப்புக் கல்லில் குங்குமத்தை கலந்தும் உள்ளே வைக்கலாம். அதன் மேலே கற்பூரத்தை வைத்து உங்களை நீங்களே சுத்திக்கலாம்.
எப்படி என்றால் கிழக்கு பார்த்து நின்று கொண்டு வலது கையில் உப்புக்கல்லுடன் குங்குமம் கலந்து வைத்திருக்கும் எலுமிச்சையை எடுத்து வலது புறத்திலிருந்து இடது புறமாக மூன்று முறையும் பிறகு இடது பக்கத்திலிருந்து வலது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு வீட்டின் வெளியே கேட்டுக்கு முன்புறம் எலுமிச்சையில் இருக்கும் கற்பூரத்தை ஏற்றிவிட்டு கையில் இருக்கும் எலுமிச்சையை வெளியில் இருக்கும் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து வெளியில் இருக்கும் தண்ணீரில் கை கால் முகம் கழுவி விட்டு வீட்டுக்குள் வந்துவிடுங்கள்.
இப்போ நீங்கள் வீட்டில் இருக்கறவங்களுக்கு சுத்தி போடணும் என்றால் வீட்டில் இருக்கின்ற அனைவரையும் கிழக்கு பார்த்த மாதிரி நிற்க வைத்து சுற்றி போடுபவர்கள் எப்பவுமே மூத்தவர்களாகத் தான் இருக்கணும். மூத்தவரோட கையில் சுற்றி போட வைப்பது ரொம்ப நல்லது. வீட்டில் இருப்பவர்களுடைய உடம்பில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள், பீடைகள், நீங்கும்.அதுக்கப்புறம் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு தரித்திரம் பிடித்த மாதிரியாகவோ அல்லது பீடை பிடித்த மாதிரியாகவோ வீட்டில் இருள் சூழ்ந்த சூழ்நிலை நிலவுவது. கண் திருஷ்டி நீங்க…! ஒரு எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு வருவது, வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது காயங்கள் ஏற்படுவது அதுவும் குறிப்பாக ரத்த காயங்கள் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் இருந்தால் இதேபோல எலுமிச்சை பழத்தைத் தயார் செய்து வீட்டிற்கு வெளியே சென்று அதாவது வீட்டுக்கு வெளியே வாசலில் நின்று உங்களுடைய வீட்டை மூன்று முறை சுற்றுங்கள். வாசலுக்கு மேலே இருக்கின்ற இடத்தையும் மூன்று முறை சுற்றங்கள் மூன்று முறை வலப்பக்கமாகவும் மூன்று முறை இடப்பக்கமாகவும் மூன்று முறை சுற்றிக்கொண்டு போய் வெளியே எடுத்து போய் எரிய வைத்து நீங்கள் குப்பையில் தூக்கி போட்டுவிடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்
உங்களோட வீடு சுபிட்சம் பெறும். வீட்டில் இருந்த தரித்திரம் பீடைகள் எல்லாம் நீங்கிவிடும். வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் செய்யுங்கள். அதிலும் அமாவாசை தினத்தில் இந்த மாதிரியான பரிகாரங்களை நீங்கள் செய்தீர்கள் என்றால் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். இந்தப் பரிகாரங்கள் எல்லாம் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் இரவு 9:00 மணியிலிருந்து 11 மணிக்கு நாம் ரோட்டில் போய் இதெல்லாம் போட்டிடலாம்.
கண் திருஷ்டியில் முதல்வகை என்பது அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் கண்திருஷ்டி தான். உயர்ந்தாலும் சரி தாழ்ந்தாலும் சரி அதனைக் கண்டு முதலில் மனம் குளிர்பவர்கள் யார் என்றால் பகை கொண்ட அக்கம் பக்கத்தினர்கள் தான். புதிதாக ஏதாவது ஒரு பொருளை நாம் வீட்டிற்கு வாங்கி வந்தால் அவங்களோட மனம் பொறுப்பதே கிடையாது. பொறாமை தீயில் வேகும். இந்த மாதிரி அக்கம் பக்கத்தினருடைய தொல்லைகள் நீங்குவதற்கு ஒரு எலுமிச்சையை வைத்து ஒரு சிறிய பரிகாரம் செய்ய வேண்டும்.
அது என்ன என்றால் நம்மளுடைய வளர்ச்சியைக் கண்டு வயிறு எரியக்கூடிய அக்கம்பக்கத்தினர் வீட்டை தாண்டி செல்லும்போது ஒவ்வொரு முறையும் நம்மளோட வீட்டு வாசலைப் பார்த்து தான் சொல்வார்கள். அவர்களுடைய பொறாமை கண்களிலிருந்து நாம் தப்பிப்பதற்கு அம்மாவாசை தினம் அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்தத் தினங்களில் வீட்டு வாசலுக்கு இருபுறம் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதன் மீது மஞ்சள் தடவி நடுவில் குங்குமத்தை வைத்து நிலை வாசலின் இருபுறமும் வைத்துவிட்டால் நம் எதிரிகள் மற்றும் நம் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பார்வை நம் மீதோ அல்லது நம் வீட்டின் மீதோ பட்டாலும் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
கண் திருஷ்டி நீங்க ஒரு எலுமிச்சை பழத்தில் இதை வைத்தால் போதும்
எலுமிச்சை பழம் தேவ கனி என்று கூறப்படுகிறது. அதனால் இந்த எலுமிச்சை பழம் எத்தகைய தீய ஆற்றலையும் தனக்குள் ஈர்த்து வைக்கக்கூடியது. நம்முடைய வீட்டைக் கடந்து செல்பவர்களின் பொறாமை பார்வைகள் நம்மளை தாக்காமல் அந்த எலுமிச்சை பழம் கிரகித்துக் கொள்ளக்கூடியது. இதனால் ஒவ்வொரு அம்மாவாசையும் சரி வாரத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளும் சரி சில பேரு வெள்ளிக்கிழமைகளில் கூட அந்த நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைப்பார்கள்.
நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் வாராவாரம் பூஜைகள் செய்யும்போது இந்தப் பரிகாரத்தையும் செய்யுங்கள். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும்போது இந்த எலுமிச்சை பழத்தை நீங்கள் புதிதாக வைக்கிறதுக்கு முன்னாடி இந்தக் காய்ந்திருக்கும் இல்லை நிறைய கண் திருஷ்டி இருக்கு என்றால் அது அழுகி கூட இருக்கும். அதை வெளியே எடுத்துட்டு போய் குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள். ஏன் என்றால் இந்தக் கண்திருஷ்டி திரும்ப உள்ளே வரக் கூடாது. அதனால் நீங்கள் வெளியே கொண்டு போய் போட்டு விடுங்கள். வாரம் தவறாமல் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.