கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க…

 

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்க…!



இரு மனங்கள் இணைய கூடிய திருமணம் ஆனது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் கூறுவார்கள். அந்த இல்லற வாழ்வை இனிமையாக வைத்துக் கொள்ள கணவன் மனைவிக்கு இடையே புரிதலை அதிகரிக்க அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் என்ன எனத் தெரிந்து கொள்வோம்.


புரிந்து கொள்வது என்னும் குணம் கணவன் மனைவிக்கு மட்டும் அல்ல அனைத்து உறவுகளுக்கும் இது அவசியம் தேவை. குறிப்பிட்ட வயதில் இணையக்கூடிய தம்பதியர்கள் முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது அவசியமாகும். அதற்குப் பொறுமை மிக மிக அவசியம். இல்லற வாழ்க்கையை இனிமையாக்கி கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன எனத் தெரிந்து கொள்வோம்.

உங்களுடைய வாழ்க்கை துணைக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது? இதுவரை அவர்கள் வாழ்ந்து வந்த சூழல் எப்படி இருந்தது? அவர்களின் குணம் என்ன? அவர்களின் ஆசை மற்றும் லட்சியம் என்ன? என்பதை கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.



இதையும் படிக்கலாமே: மன அழுத்தம் குறைய எளிய வழிகள்



திருமணத்துக்குப் பிறகு புதுமண தம்பதியாக முதன் முதலில் சென்று வந்த இடம் எப்போதும் யாருக்குமே மறந்து போகாது. அந்த இடத்திற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது இருவரும் சேர்ந்து செல்லுங்கள் அந்த அனுபவம் மிக நல்ல நெருக்கத்தை இருவருக்கும் இடையே ஏற்படுத்தும். உங்களுடைய வாழ்வின் இனிமையான பொழுதுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது அந்த நாளின் இன்பத்தை மீண்டும் நினைவு படுத்தும். அது கணவன் மனைவிக்கு இடையேயான உறவைப் பலப்படுத்தும்.


காலையில் எழுந்து பால் காய்ச்சுவதிலிருந்து இரவு தூங்கும் வரை வீட்டில் உள்ள எல்லோரையும் கவனித்துக் கொள்வதிலேயே பெண்கள் உடல் மற்றும் மனதளவில் அசந்து போய்விடுவார்கள். அப்படி இருக்கும் வீடுகளில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை நாட்களில் அவர்களை வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொண்டால் போதும். அது கணவன் மனைவிக்கு இடையேயான உறவைப் பலப்படுத்தும்.



கணவன்மார்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். சமைக்க தெரியும் என்றால் சமைத்துக் கொடுக்கலாம். உங்களுக்குச் சமைக்க தெரியாது என்றாலும் பரவாயில்லை நீங்கள் அவர்களுக்காகச் சமைக்கிறீர்கள் என்றால் நல்லா இல்லாவிட்டாலும் அதை ரசித்து சாப்பிடுவார்கள். அது முடியாது என்றால் குறைந்த பட்சம் ஹோட்டலுக்காவது கூட்டிச் செல்லலாம்.


அலுவலகம் வீடு என்று மட்டுமே இருந்து கொண்டிருந்தால் கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கும். வார விடுமுறை நாட்களில் அல்லது மாதத்துக்கு ஒருமுறை எங்காவது வெளியில் அழைத்துச் செல்லுங்கள். அன்றாட வாழ்க்கை சூழலிலிருந்து விடுபட்டு இப்படி தனியாகச் சென்று வருவதால் இருவருக்கும் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் சென்று பாருங்கள் இதனால் இருவருக்கும் இடையில் இருக்கும் அக்கறையும் பண்பும் அதிகரிக்கும்.




பிறந்தநாள் திருமண நாள் போன்றவற்றிற்கு மட்டும் தான் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பெண்களுக்கு எப்போது பரிசு கொடுத்தாலும் பிடிக்கும். பரிசுகள் வாங்கிக் கொடுக்கக் காரணமே இல்லை என்றாலும் பரிசு கொடுப்பதையே ஒரு சிறப்பான நாளாக மாற்றி விடுங்கள். இருவரும் பரஸ்பரம் பரிசுகளைக் கொடுத்துக் கொள்ளுங்கள் அது உறவை இன்னும் பலப்படுத்தும் ஆண்கள் மட்டும்தான் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று இல்லை


பெண்களும் தங்களுடைய கணவனுக்குப் பரிசுகள் வாங்கிக் கொடுத்து அசத்தலாம். கணவன் மனைவிக்குள் யார் முக்கியமான விஷயங்கள் செய்தாலும் அவர்களை வாயால் மட்டும் பாராட்டாமல் அவர்களுக்குப் பிடித்த பொருள்களைப் பரிசாகக் கொடுக்கலாம். பெண்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஆண்களை அதிகம் பிடிக்கும் பரிசு கொடுக்கும் ஒவ்வொரு முறையும் சர்ப்ரைஸாக கொடுங்கள்.


இதையும் படிக்கலாமே: பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆண்களின் 4 குணங்கள்


திருமணத்திற்கு முன்பு இருப்பதைப் போலத் திருமணத்திற்கு பின்பும் உடலைக் கட்டுக்கோப்பாகப் பிட்டாக வைத்துக் கொள்வதில் பெரும்பாலானோர் ஆர்வம் கவனமும் செலுத்துவதில்லை. ஆனால் கணவன் மனைவி உறவுக்கு இடையே உடலைப் பிட்டாக வைத்துக் கொள்வதும் மிக முக்கியமானது.


ஓய்வாக இருக்கும்போது இருவருக்கும் பிடித்த சின்ன சின்ன விளையாட்டுகளைச் சேர்ந்து விளையாடுவது. வாக்கிங் ஜாக்கிங் போகும்போது இருவரும் சேர்ந்து செல்வது என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இந்தப் பரபரப்பான உலகில் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரத்தை இப்படி பல வழிகளில் அதிகப்படுத்தி கொள்ள முடியும் இதனால் இருவருக்கும் இடையில் இருக்கும் அக்கறையும் அன்பும் அதிகரிக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *