ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பதன் ரகசியம்

Do you know the secret of one zone, 48 days!

அனைவருக்கும் வணக்கம்

நமது முன்னோர்களும் பெரியோர்களும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். விரதங்களும் பூஜைகளும் 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அது என்ன ஒரு மண்டலம் 48 நாட்கள் கணக்கு. அந்த 48 நாட்களுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது. என்ன மகிமை இருக்கிறது என்பதை ஒரு சிறிய கதையின் வாயிலாகப் பார்க்கலாம். ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பதன் ரகசியம்.

துறவியை சந்தித்த இளைஞன்

ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பதன் ரகசியம்

புகழ்பெற்ற அந்த துறவியை சந்திக்க அந்த ஊரை சேர்ந்த இளைஞன் ஒருவன் அவரது குடிலுக்கு வந்திருந்தான். அப்போது துறவி குடிலுக்கு வெளியே உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்து நின்றான் அந்த இளைஞன். அவனைப் பார்த்த துறவி அவன் மிகவும் கவலையுடன் உள்ளான் என்பதை புரிந்து கொண்டு தம்பி உனது பிரச்சனை என்ன? உனது இந்த கவலைக்கும் துக்கத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன் ஐயா நான் சிறுவனாக இருக்கும்போது நன்றாக படிக்க வேண்டும் என எனது பெற்றோர்கள் எவ்வளவோ என்னிடம் எடுத்துக் கூறினார்கள். ஆனால் நான் கேட்கவே இல்லை அவர்களது பேச்சை சிறிது மதிக்காமல் நடந்து கொண்டேன். பிறகு அவர்கள் படிக்கவில்லை என்றாலும் ஏதாவது ஒரு தொழிலையாவது நன்கு கற்றுக்கொள் என்று எவ்வளவோ கூறினார்கள்.

ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பதன் ரகசியம்

ஆனால் நான் அதையும் கேட்காமல் எனது நண்பர்களோடு ஊர் சுற்றுவதை முழு நேரமாக செய்து கொண்டிருந்தேன். நான் பழகிய நண்பர்களும் நல்ல குணங்கள் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து நானும் சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டேன். அப்போது எனக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் இப்போது அதையெல்லாம் நினைத்து பெரிதும் வருந்துகின்றேன். இப்போது எனது எதிர்காலத்தை நினைக்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

எப்படி என் வாழ்க்கையை வாழ போகிறேன் என்று தெரியவில்லை. இதனால் இனி மனம் திருந்தி தீய பழக்கங்களை விடலாம் என முடிவு செய்தேன். ஆனால் சில நாட்கள் தான் என்னால் அந்த பழக்கத்தை தள்ளி வைக்க முடிகிறது. பிறகு சில நாட்களில் மறுபடியும் அந்த பழக்கத்திற்குள் நான் வந்து விடுகிறேன். அதேபோல் ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து கற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் அதை தொடர்ந்து பயிற்சி செய்து கற்றுக்கொள்ள முடியவில்லை.

துறவியின் அறிவுரை

இதற்கு தாங்கள்தான் நல்ல ஒரு ஆலோசனையை கூறி என் வாழ்க்கையில் முன்னேற ஒரு வழியை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு துறவி தம்பி உனது பிரச்சனை என்ன என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன். நீ உனது தீய பழக்கங்களை விட வேண்டும். அதேபோல ஒரு தொழிலை சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோல எதுவாக இருந்தாலும் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து அதை கடைப்பிடி.

48 நாட்கள் அதை தொடர்ந்து மனம் சிதறாமல் அதை சிறப்பாக செய்து கொண்டே இரு. உதாரணமாக நீ தீய பழக்கங்களை விட வேண்டும் என முடிவெடுக்கும் போது தொடர்ந்து 48 நாட்கள் அந்த பழக்கங்களை மனதாலும் நினைக்காமல் நல்ல பழக்கங்களை மட்டும் செய்து கொண்டு வா. அந்த 48 நாட்கள் உன் மனம் வைராக்கியத்துடன் மனம் சிதறாமல் இருக்க வேண்டும். அந்த 48 நாட்களை கடந்து விட்டால் நீ நினைத்த விஷயத்தில் நிச்சயமாக வெற்றி அடையலாம் என்றார் துறவி.

அதற்கு அந்த இளைஞன் ஐயா அது என்ன 48 நாட்கள் ஒரு மண்டலம் என்கிறீர்கள் அப்படி என்ன மகிமை அந்த 48 நாட்களுக்கு இருக்கிறது என்று கேட்டான். அதற்கு துறவி ஆமாம் 48 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. மகிமை உள்ளது அதாவது நமது யோகிகளும் முனிவர்களும் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற தொடர்ந்து அதை செய்து 48 நாட்கள் முறையாக கடைப்பிடித்தால் அதில் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார்கள்.

அதாவது சூரியனின் புறவு தான் கதிர்கள் பூமியில் நம் மீது படுவது போல நம்மை சுற்றிலும் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் கதிர்வீச்சுகளும் நம்முடன் தொடர்புடன் உள்ளது. ஆனாலும் மற்ற கோள்கள் அவைகள் இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவைகள் வெளியிடும் கதிர்வீச்சுகளின் ஒளி சூரியனின் ஒளியை போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

நம்மை வந்தடையும் நம்முடன் தொடர்புடைய கதிர்வீச்சு ஒலிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் ஒன்பது கோள்களாகவும் நமது ஞானிகள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி உள்ளார்கள். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்துக் கொண்டாலும்

48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசி கூட்டங்கள் 27 நட்சத்திர கூட்டங்கள்

48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசி கூட்டங்கள் 27 நட்சத்திர கூட்டங்கள்| adhikan.co.in

அன்றிலிருந்து தொடங்கி 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசி கூட்டங்கள் 27 நட்சத்திர கூட்டங்கள் உடைய அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும். கிரகங்கள் ஒன்பது ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 48. இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம்

வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு நம்முடைய புத்திக்கு காரணமாக இருக்கின்றது என்று நமது முன்னோர்களும் ஞானிகளும் சித்தர்களும் கண்டுபிடித்த மிகப்பெரிய உண்மையாகும். இதனால் தான் நான் கூறுகிறேன் தொடர்ந்து 48 நாட்கள் முறையாக மன உறுதியுடன் வைராக்கியத்துடன் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நடக்கும்.

அதற்கு பலன் நிச்சயமாக கிடைக்கும். இதனால்தான் நமது சித்த வைத்தியத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்று சொல்கிறார்கள். இதே போல் மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் மன உறுதிக்கு ஏற்ப நிச்சயமாக பலன் கிடைக்கும்.

எனவே நீயும் உனது தீய பழக்கங்களை விட தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் மன வைராக்கியத்துடன் மன உறுதியுடன் இருந்து அந்த பழக்கங்களில் இருந்து விலகி இரு. அதேபோல் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள தொடர்ந்து 48 நாட்கள் மனம் சிந்தனை முழுவதையும் அதிலேயே ஒருமுகப்படுத்தி தொழிலை கற்றுக்கொள். நிச்சயமாக நீ அதில் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

துறவி கூறியதை கேட்ட அந்த இளைஞன்

துறவி கூறியதை கேட்ட அந்த இளைஞனுக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு அவருக்கு தனது நன்றியை தெரிவித்து விட்டு முழு நம்பிக்கையுடன் வீடு திரும்பினான். சூரியனின் கதிர்வீச்சு ஒளியில்லாமல் எப்படி இந்த உலகில் எந்த உயிரும் வாழ முடியாதோ அதேபோல 9 கிரகங்கள் 12 ராசி கூட்டங்கள் 27 நட்சத்திர கூட்டங்கள் என மொத்தம் 48 அமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளி இல்லாமலும் நாம் வாழ முடியாது.

இதை நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அந்த கதிர்வீச்சுகள் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியலும் ஒத்துக்கொள்ளும் விஷயம் ஆகும். எனவேதான் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நடக்கின்றன. பாலடைந்த ஒரு கோவிலை கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் செய்தால் மீண்டும்

அந்த தெய்வ சாணித்தியம் உயிர் பெறும் இதே போல் தொடர்ந்து 48 நாட்கள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நமது வாழ்க்கையில் ஒரு அரசியல் நல்ல மாற்றம் வருவதை நாம் உணரலாம்.

இதே போல் நாம் உண்ணும் உணவு ரத்தமாகி சதையாகி எலும்பாகி மச்சையாகி பிறகு அது இந்துவாக மாறுவதற்கு ஒரு மண்டல காலம் எடுக்கும் என்று நமது ஞானிகள் கூறுகிறார்கள். சித்த மருத்துவத்திலும் இயற்கை மருந்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட சொல்வார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *