Seven Horse Painting Vastu
வாஸ்து படம் பெரும்பாலும் கடைகளிலும் வீடுகளிலும் இருக்கும் இது ஏன் வைத்திருக்கிறார்கள். இந்த வாஸ்து குதிரை படத்தில் இருக்கக்கூடிய அற்புதமான விஷயங்கள் என்ன? மேலும் எந்த திசையில் வைக்கவேண்டும். அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன? போன்ற பல சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம். ஏழு குதிரை வாஸ்து படம்
இந்த ஏழு குதிரை வாஸ்து படம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். உங்களுக்கு வாஸ்து மீது அதிகமான நம்பிக்கை இருந்தது என்றால் அந்த ஏழு குதிரை வாஸ்து படத்தை வாங்கி வீட்டிலும் தொழில் செய்யும் இடங்களிலும் வைக்கலாம்.
வீட்டிலும் தொழில் செய்யும் இடங்களிலும் இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தை வைத்தீர்கள் என்றால் குதிரை என்பது நவகிரகங்களில் இரண்டு கிரகங்களை குறிக்கும். ஒன்று சூரியன் மற்றொன்று சுக்கிர பகவான். சூரியன் என்பது வேகத்தையும் சக்தியும் தரக்கூடிய ஒரு கடவுளாக கருதப்படுகிறது. சுக்கிரன் என்பது நமக்கு கல்வி செல்வம் திருமணம் போன்ற சுகபோக வாழ்க்கை தரக்கூடிய கடவுளாக கருதப்படுகிறது.
| இதையும் படிக்கலாமே |
|---|
| வீட்டில் பணம் சேருவதை தடுக்கும் ஐந்து பொருட்கள் |
ஏழு குதிரை வாஸ்து படம்
ஐஸ்வர்யம் செல்வம் ஆரோக்கியம் மற்றும் திருமணத்தடை இருந்தால் நீங்கும். இதுபோல நல்ல விஷயங்கள் அதிகமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானுடைய அம்சம் பெற்ற ஏழு குதிரைகள் இந்த வாஸ்து படத்தில் இருப்பதால் வீட்டில் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் இதுபோல விஷயங்கள் அண்டாமல் இந்த ஏழு குதிரை வாஸ்து படம் தடுக்கும் என்பது நம்பிக்கை.
தொழில் செய்யும் இடங்களில் இந்த ஏழு குதிரைகள் வாஸ்து படத்தை வைப்பதன் மூலம் உங்கள் தொழில் மென்மேலும் வளரும். உங்கள் தொழிலில் இருக்கும் தடைகள் அனைத்தும் தகர்ந்து மென்மேலும் வளர்ச்சி அடையும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தில் சில முக்கியமான குறிப்புகள் இருக்கிறது. இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தில் பின்புறம் இருக்கக்கூடிய கலர் வானவில்லில் இருக்கக்கூடிய ஒரு கலராக தான் இருக்கும்.
வானவில் என்பது இயற்கை நிகழ்வாக இருந்தாலும் சூரியனுடைய ஒளிக்கட்டைகள் உருவாக்கக்கூடிய நிறங்களாக அது கருதப்படுகிறது. அதனால் ஏழு குதிரை என்பது சூரியவம்சம் ஆகும். அதன் பின் இருக்க கூடிய கலரும் சூரியன் ஒளியால் ஏற்படக்கூடிய அந்த கலரில் ஒன்றாக இருந்தால் அந்த ஏழு குதிரை வாஸ்து படத்திற்கு மென்மேல் சக்திகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
| இதையும் படிக்கலாமே |
|---|
| இந்த இடங்களுக்கு அருகில் வீடு காட்டாதீர்கள் |
ஏழு குதிரை வாஸ்து படம்
நீங்கள் இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தை வாங்குகிறீர்கள் என்றால் அதனுடைய கலரை கவனமாக பாருங்கள். மேலும் அந்த படத்தில் இருக்கக்கூடிய குதிரைகள் அனைத்தும் ஒரே திசையில் ஓடுகிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரே திசையில் ஓடுகிற மாதிரி இருக்கக்கூடிய ஏழு குதிரை வாஸ்து படத்திற்கு சக்தி அதிகம்.
ஒவ்வொரு குதிரையும் வெவ்வேறு திசையில் ஓடுவது போல அந்த படத்தில் இருந்தால் அதனுடைய சக்தி வெவ்வேறு திசைகளில் சென்றுவிடும் ஒவ்வொரு குதிரையும் சாந்தமாக அமைதியாக இருக்கிற மாதிரியான அமைப்பில் இருக்கணும். ரொம்ப ஆக்ரோஷமாக கோவமாக இருக்கக்கூடிய அமைப்பில் உள்ள வாஸ்து படத்தை வாங்காதீர்கள்
இந்த ஏழு குதிரை வாஸ்து படம் வீடாக இருந்தாலும் சரி தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி நீங்கள் எந்த திசையில் எப்படி வைக்கிறீர்கள் என்பதில் தான் அதனுடைய சக்தியே இருக்கிறது.
இதற்கு நீங்கள் தனியாக பூஜை பண்ணனும் பிரே பண்ணனும் அப்படின்னு எந்தவித அவசியமும் கிடையாது. இதை நீங்கள் வைத்தாலே போதும். இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தின் சக்தி தானாக வேலை செய்ய ஆரம்பிச்சுடும். இதை எந்த திசையில் வைக்கவேண்டும் என்றால் ஏழு குதிரை வாஸ்து படத்தை பொறுத்த வரைக்கும் நான்கு திசைகளுமே சரியான திசை அப்படின்னு சொல்லப்படுகிறது.
| இதையும் படிக்கலாமே |
|---|
| ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பதன் ரகசியம் |
இருந்தாலும் சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசை இந்த ஏழு குதிரை வாஸ்துப்படம் வைப்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு அமைப்பு இல்லையென்றால் நீங்கள் வேற மூன்று திசையிலும் எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் குறிப்பாக இந்த ஏழு குதிரை வாஸ்து படத்தை வைக்கும் போது அது உங்களுடைய வீட்டை விட்டு வெளியே போகக்கூடிய திசையாக இருக்கக் கூடாது.
அந்த ஏழு குதிரை வாஸ்து படம் வீட்டை விட்டு வெளியே போவது போல் நிலை வாசலை பார்க்கிற மாதிரி இருக்க கூடாது. அந்த ஏழு குதிரை வாஸ்து கூட நீங்கள் சுவற்றில் வைக்கும் போது குதிரை பார்க்கும் திசையில் சுவர் இருந்தால் நல்லது.
ஏழு குதிரை வாஸ்து படம்
ஏனென்றால் ஏழு குதிரைகளின் சக்தி வீட்டை விட்டு வெளியே போகாமலிருக்க. வீட்டின் வாசல் பக்கம் ஏழு குதிரைகளின் படத்தை வைத்தால் ஏழு குதிரைகளின் சக்தியும் உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வீக சக்தியும் சேர்ந்து வெளியேறக் கூடிய ஒரு அமைப்பு உருவாகும் என்று வாஸ்து படத்தில் கூறப்பட்டுள்ளது.
உங்களுடைய வியாபாரம் செய்யும் இடத்திலோ அல்லது வீட்டிலோ நீங்கள் ஏழு குதிரைகளின் வாஸ்து படத்தை வைத்தீர்கள் என்றால் அந்த படத்திற்கு எதிராக வாசல் கதவோ ஜன்னலோர இருக்க கூடாது.
தொழில் செய்யும் இடமாக இருந்தால் உங்களுடைய வளர்ச்சி உங்களுடைய தொழில் முன்னேற்றம் எல்லாம் வெளியே சென்று விடும். எந்த அளவுக்கு வேகமாக செல்லும் என்றால் ஏழு குதிரை பூட்டிய வண்டி எந்த அளவிற்கு வேகமாக செல்லுமோ அந்த அளவிற்கு வேகமாக வெளியே சென்று விடும். அதனால் ஏழு குதிரைகளின் வாஸ்து படத்தை வைத்தீர்கள் என்றால் அந்த படத்திற்கு எதிராக வழி இருக்கக்கூடாது.
ஏழு குதிரைகளின் வாஸ்து படத்தை நீங்கள் வீடு அலுவலகம் மட்டுமின்றி வேலை செய்யும் இடமாக இருந்தாலும் வைக்கலாம். குறிப்பாக சமையல் அறை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
| இதையும் படிக்கலாமே |
|---|
| கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? |
இந்த ஏழு குதிரை வாஸ்து படம் என்பது வாஸ்து நம்பிக்கை சார்ந்த ஒரு படம். இதை வீட்டில் கடையில் வாங்கி வைத்து விட்டு நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்தவித முன்னேற்றமும் கிடைக்காது. இந்த ஏழு குதிரை வாஸ்து படமும் இருக்கணும் உங்களுடைய முயற்சியும் அதிகமாக இருக்கனும். அப்பொழுது தான் அந்த வாஸ்து படம் உங்களுக்கு கை கொடுத்து நீங்கள் நினைத்த மாதிரி வெற்றியும் முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படும்.