உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

Benefits of eating dry grapes

உலர் திராட்சையை பற்றி நம்ப முடியாத உண்மைகள்..உங்கள் உடலில் என்ன நடக்கிறது என தெரிந்தால் அதிர்ச்சி

வணக்கம் நண்பர்களே கிஸ்மிஸ்னு சொல்லக்கூடிய உலர் திராட்சையில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருக்கிறது ஆனால் நம்மில் பலருக்கும் உலர் திராட்சையில் இருக்கக்கூடிய பல அற்புதமான விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

பாயாசம் கேசரி பொங்கல் போன்ற உணவுகளில் நாம் தவறாமல் சேர்க்கக்கூடிய முக்கியமான ஒரு பொருள் கிஸ்மிஸ். இந்த கிஸ்மிஸ் நமக்கு எப்படி கிடைக்கிறது என்றால்  திராட்சை பழத்தை வெயிலில் உலர வைத்தால் கிடைக்கக் கூடியது உலர் திராட்சை என்று சொல்லக்கூடிய கிஸ்மிஸ். இந்த கிஸ்மிஸில் நம்முடைய உடலுக்கு தேவையான எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. ஆனால் அந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்க அந்த கிஸ்மிஸ்ஸை எப்படி சாப்பிடணும்? எந்த அளவுக்கு சாப்பிடணும் எந்த நேரத்தில் சாப்பிடணும் நாம் தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.

அதனால் நமக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் எல்லாம் கிடைக்கப் போகிறது என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.கிஸ்மிஸ்ஸில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் 100 கிராம் கிஸ்மிஸ்ஸில் நம்முடைய உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கலோரிஸ், புரோட்டீன், டயட்ரி பைபர், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. மேலும் உயிர் சத்துக்களான விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி6 நிறைந்து இருக்கிறது.  ஊட்டச்சத்துக்கள் எல்லாமே நம்முடைய உடலுக்கு மிக மிக இன்றியமையாதது.



கிஸ்மிஸ்ஸை எப்படி பயன்படுத்துவது.


அரை டம்ளர் தண்ணீரில் 8 கிஸ்மிஸை போட்டு முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் கிஸ்ம்ஸ்ஸை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு டம்ளரில் இருக்கும் தண்ணீரையும் குடிக்கவேண்டும்.கிஸ்மிஸ்ஸை சாப்பிடறதினால் நம்முடைய உடலில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் எல்லாம் நடக்கும்.


அனிமியா



முதலில் அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை நோய் இருக்கக்கூடியவர்கள் இந்த எட்டு கிஸ்மிசையும் ஊறவைத்து சாப்பிடும் பொழுது அவர்களுடைய இரத்தத்தில் சிவப்பணுக்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும்.  யாருக்கெல்லாம் அனிமியா இருக்கிறதோ அவர்கள் தினமும் எட்டு கிஸ்மிஸ்ஸை தண்ணீரில் போட்டு ஊற வைத்து சாப்பிட்டாலே போதும். ரத்தத்தில் சிவப்பணுக்களோட எண்ணிக்கை அதிகரிக்கும் அதனால் ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கி அனிமிக் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.


கொலஸ்ட்ரால் 



இதிலே துளி கூட கொலஸ்ட்ரால் கிடையாது அதனால் உடலில் பேட் கொலஸ்ட்ரால் தேங்காது. உடலில் அல்ரெடி கொலஸ்ட்ரால் ப்ராப்ளம் இருக்கிறவங்களும் இந்த கிஸ்மிஸ்ஸை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக  கரைந்து வெளியேறும்.

 

சிறுநீரகப் பாதை தொற்று



சிறுநீரக பாதை தொற்று   இருக்கக்கூடியவங்களுக்கு ஆயுர்வேதத்தில் இந்த கிஸ்மிஸை தான் ரெபர் பண்றாங்க. கிஸ்மிஸ்ஸை ஊறவைத்து சாப்பிடும் பொழுது   உங்களுடைய சிறுநீரக பாதையில் இருக்கக்கூடிய தொற்று நோயை முற்றிலுமாக குணமாக்கும். சிறுநீர் சொட்டு சொட்டா போறது பிறகு  சிறுநீர் கழிக்கும் போது வரக்கூடிய எரிச்சல் அரிப்பு இது எல்லாவற்றையும் போக்கக்கூடிய தன்மை கிஸ்மிஸில் இருக்கிறது. உங்களுக்கு சிறுநீரக பாதை தொற்று நோய் எப்பவுமே வராது. 



பாதாம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


குளிர்ச்சியாக வைத்திருக்கும் 

கிஸ்மிஸ் இயற்கையாவே நல்ல ஒரு குளிர்ச்சி தன்மை உடையது யாரெல்லாம் அதிகப்படியான உடல் சூட்டினால் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கீங்களோ அவங்க வெறும் 8 கிஸ்மிஸ் மட்டும் முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் ஊறிய கிஸ்மிஸ்ஸையும் ஊறவைத்த தண்ணீரையும் சாப்பிட்டாலே போதும். அவங்களோட உடலில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த சூடும் இறங்கி உடலுக்கு நல்ல ஒரு குளிர்ச்சி தன்மை கிடைக்கும். இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  உடல் சூடு என்ற பிரச்சனை உங்களுக்கு என்றைக்குமே வராது.  உடல் எப்பவும் குளுமையோட இருக்கும். 


மாதவிடாய்



 பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் வயிற்று பிடிப்பும் அதிக ரத்தப்போக்கும் உண்டாகும்.  இந்த இரண்டையுமே கட்டுப்படுத்தக்கூடிய தன்மை  கிஸ்மிஸில் நிறைந்து இருக்கிறது. நீங்கள் வயிற்று பிடிப்பு மற்றும் அதிக ரத்தப்போக்கால் கவலைப்படக்கூடிய  மாதவிடாய் காலத்தில் ஊறவைத்த கிஸ்மிஸ்ஸை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். அதிக வயிற்று பிடிப்பு,  இடுப்பு வலி தலைவலி, ஒரு விதமான மயக்கம், அதிக ரத்தப்போக்கு போன்ற எந்த விதமான பிரச்சனைகளும் வரவே வராது.


மலச்சிக்கல்



மலச்சிக்கலால் கவலைப்படக் கூடியவர்கள் தினமும்  காலையில் ஊறவைத்த கிஸ்மிஸ்ஸை சாப்பிடும் பொழுது அவங்களுடைய மலக்குடலில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுகள் நச்சுக்கிருமிகள் எல்லாம் வெளியேறி ஒட்டுமொத்த வயிறும் சுத்தமாகும்.மூன்று நாள் நாலு நாள் ஆச்சு மலம்  வெளியேறாமல் இருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கக்கூடியது ஊறவைக்கப்பட்ட கிஸ்மிஸ்.  மலச்சிக்கல் பிரச்சினைகளால் கஷ்டப்படக்கூடியவர்கள் எட்டு கிஸ்மிஸ்ஸை தண்ணீரில் போட்டு ஊற வைத்து திரும்ப அதை வேகவைத்து நன்றாக மசிச்சு சாப்பிட்டாலும் உங்களுக்கு உடனடியாக மலச்சிக்கலுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். 


ஆண்மை குறைவு



ஆண்களுக்கு வரக்கூடிய சிக்கலான பிரச்சினை  ஆண்மை குறைபாடு.  அதாவது பிறப்புறுப்புக்கு தேவையான ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லை என்றாலும் உடல் சூடு அதிகமாக இருந்தாலும் வேறு சில காரணங்களாலோ ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிராப்ளம் உண்டாகி இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் ஆண்மை குறைபாடு வரும். ஆண்மை குறைபாடுக்கு காரணமாய் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி பண்ணக்கூடிய ஆற்றல் கிஸ்மிஸில் நிறைந்து இருக்கிறது.


நீங்கள் தொடர்ச்சியாக காலையில் எழுந்ததும் கிஸ்மிஸை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். ஆண்களுக்கு அற்புதம் கிடைக்கும். அதாவது அவங்களோட ஆண்மை குறைபாடு முற்றிலும் சரியாகி தாதுக்களோட எண்ணிக்கை அதிகரிக்கும் தாது விருத்தியாகும் ஆண்மை பெருக்கெடுக்கும்.ஆண்மை குறைபாடு இருக்கக்கூடிய ஆண்கள் உடனடியாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்கள் சூப்பரா ஒர்கவுட் ஆகும். 


எலும்புகளின் உறுதியை அதிகரிக்கும்



எலும்புகளின் உறுதியை அதிகரிக்க கூடிய கால்சியம் சத்தும் கிஸ்மிஸில் அளவுக்கு அதிகமாகவே இருக்கு. நம்முடைய உடலில் எப்பொழுது கால்சியம் டெபிசியன்சி வருகிறதோ அப்போது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் மூட்டுகள் எல்லாமே படிப்படியாக தேய்மானம் அடைய ஆரம்பிக்கும்.  மூட்டு மூட்டுக்கு வலி வரும். அந்த மூட்டு வலியை குணமாக்கி எலும்பு பிரச்சனைகள் வராமல் தடுக்க கிஸ்மிஸ்ஸை சாப்பிடலாம்.


ஊறவைக்கப்பட்ட கிஸ்மிஸ்ஸை நீங்கள் சாப்பிட்டால் அதில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து  கால்சியம் டெபிஸியன்சியை போக்கி உடல் முழுக்கவே இருக்கக்கூடிய அனைத்து விதமான எலும்புகளையும் மூட்டுகளையும் வலுப்படுத்தும். எலும்பு சார்ந்த பிரச்சினை இருக்கக்கூடியவர்கள் டெய்லியும் கிஸ்மிஸ்ஸை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். சூப்பரான பெனிஃபிட் கிடைக்கும்.


கண் பார்வையை அதிகரிக்கும்



கிஸ்மிஸில் விட்டமின் ஏ சத்து இருக்கிறது அது நம்முடைய கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண் பார்வை குறைபாடு இருக்கக்கூடியவர்கள் கிஸ்மிஸ்ஸை சாப்பிடும் பொழுது கண் பார்வை தெளிவுபட ஆரம்பிக்கும்.  ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்து போராடக் கூடியது உங்களுடைய கண்ணில் வரக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் எதிர்த்து போராடி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஐ சைட் இம்ப்ரூவ் பண்ணக்கூடிய ஒரு சூப்பரான பொருள் கிஸ்மிஸ். தினமும் எட்டு ஊறவைத்த கிஸ்மிஸ்ஸை மட்டும் ரெகுலரா நீங்கள் சாப்பிட்டு வாங்க உங்களுக்கு இருக்கக்கூடிய கண் சம்பந்தமான அனைத்து விதமான குறைபாடுகளும் நீங்கி கண் பார்வை ரொம்பவே தெளிவா தெரிய ஆரம்பிக்கும்.


ரத்த அழுத்தத்தை சரி செய்யும்



கிஸ்மிஸில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. பொட்டாசியம்  நம்முடைய நரம்புகளுக்கு நன்மை செய்யக்கூடியது. அதாவது உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கக்கூடியவர்கள் கிஸ்மிஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்த அழுத்தத்தை உடனடியாக கட்டுப்படுத்தக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டது கிஸ்மிஸ். உயர் ரத்த அழுத்தம் சாதாரண ஒரு பிரச்சனை கிடையாது அதற்கான ட்ரீட்மென்டை நாம் உடனே எடுத்துக்கணும். அதனால் உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலும் அல்லது பியூச்சர்ல வரக்கூடாதுன்னாலும் நமக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய ரொம்பவே டேஸ்டா இருக்கக்கூடிய இந்த கிஸ்மிஸ் சாப்பிட்டு பாருங்கள் சூப்பரான பெனிபிட் கிடைக்கும்.


ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கிஸ்மிஸ் சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் டயட்டரி பைபர் சத்து நம்மளுடைய இதயத்துக்கு போகக்கூடிய இரத்த நாளங்களில்  படிந்து இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும். இதயத்தோட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதயம் உங்களுக்கு ஹெல்தியா இருக்க நீங்கள் தாராளமாக கிஸ்மிஸை சாப்பிடலாம். சூப்பரான பலன் கிடைக்கும்.


உடல் எடை குறையும்





கிஸ்மிஸ்ஸில் 0% கொழுப்புச்சத்து. யாரெல்லாம் வெயிட் லாஸ் பண்ணனும் என்றால் அவர்கள்  டெய்லியும் காலையில் எழுந்ததும் ஊறவைக்கப்பட்ட கிஸ்மிஸை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். அது  உங்களுடைய உடலில் சேர்ந்து இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பேட் கொலஸ்ட்ராலயும் கரைத்து வெளியேற்றும்.


கலோரிகளை எரிக்கும்



உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கலோரிகளை எரிக்கும். அதனால் இந்த இரண்டு வேலையும் சிறப்பாக செய்யக்கூடியது உடலில் மெட்டபாலிசத்தை தூண்டிவிடும். மெட்டபாலிசம் நம் உடலில் காலையில் அதிக அளவில் இருக்கும். அந்த டைமில் நீங்கள் ஊறவைத்த கிஸ்மிஸ்ஸை சாப்பிடும்பொழுது உங்களுடைய உடல் எடையில் ரொம்பவே மாற்றத்தை  பாக்கலாம். வெயிட் லாஸ் பண்ண ஒரு டேஸ்டியான ரெமடிதான் இந்த ரெமடி இந்த ரெமடிய ட்ரை பண்ணி பாருங்க உங்களோட உடல் எடை குறையறத பார்த்து நீங்களே பிரமிச்சு போவீர்கள்.


அஜீரணக் கோளாறு 



டைஜஸ்டிவ் பிராப்ளம் இருக்கிறவர்கள் அதாவது அஜீரண கோளாறு அசிடிட்டி புளித்து ஏப்பம் வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சனை இருக்கக்கூடியவர்கள் கிஸ்மிஸ் பழத்தை தண்ணீரில் போட்டு வேகவைத்து மசிச்சு சாப்பிட்டு பாருங்கள் எந்த ஒரு டைஜஸ்டிவ் பிராபளமும் உங்களுக்கு வரவே வராது. டெய்லியும் நீங்கள் கிஸ்மிஸ் சாப்பிடும் பொழுது உங்களுடைய முகப்பொலிவு அதிகரிக்கும். இளமை அதிகரிக்க ஆரம்பிக்கும் முகத்தில் சுருக்கம் போன்ற எந்த விதமான பிரச்சனைகளும் வராது. இன்றைக்கு ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கக்கூடிய கிஸ்மிஸில் எவ்வளவு பெரிய ஊட்டச்சத்துக்களும்   அற்புதமான மருத்துவ குணங்களும் இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *