ஆண்களுக்கு இந்த ரகசியம்
தெரிந்தால் விடவே மாட்டார்கள்.
(garlic benefits in tamil)
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், எலும்புகள், பற்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஆண்மை பிரச்சினை உடைய ஆண்கள், பெண்களின் சிறுநீர் தொற்று அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது பூண்டு.
அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது. பூண்டின் உண்மையான மருத்துவ குணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? தினமும் பூண்டு பற்களை சாப்பிடுவதால் உங்கள் உடம்பிற்குள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
பூண்டு என்றாலே எனக்கு அலர்ஜி பூண்டோட ஸ்மெல் எனக்கு கொஞ்சம் கூட செட் ஆகாது அதனால் நான் பூண்டு சாப்பிட மாட்டேன் என்பவர்களுக்கும்
பூண்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிகிறதே கிடையாது. பூண்டிலிருந்து வரக்கூடிய வாசனை பிடிக்காமல் பலரும் பூண்டு சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் பூண்டை நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அதனுடைய மருத்துவ பயன்களும் ஊட்டச்சத்துக்களும் நமக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் கிடைக்கும்.
ஒரு ஆறு பூண்டு பற்களை எடுத்து அதை வெறுமனே தவாவில் போட்டு நன்றாக சுட்டு கோல்டன் பிரவுன் கலர் ஆனதும் எடுத்து அதை தினமும் நீங்கள் சாப்பிட்டு வரலாம்
ஒரு ஐந்து பூண்டுப்பற்களை எடுத்து அதை சின்ன உரலில் போட்டு நன்றாக இடித்து பேஸ்ட் ஆக்கி அது கூட சம அளவு தேன் கலந்து சாப்பிடலாம்.
இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை நன்றாக இடித்து பாலில் போட்டு வேகவைத்து குடித்தாலும் நமக்கு அதனுடைய முழுமையான மருத்துவ பயன்கள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
இந்த மூன்று முறையிலும் நீங்கள் ஏதாவது ஒரு முறையில் பூண்டை சாப்பிடலாம். இந்த வகையில் நீங்கள் பூண்டை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் பூண்டில் இருக்கக்கூடிய ஸ்மெல் உங்களுக்கு கொஞ்சம் கூட வராது. குறிப்பாக பூண்டை சுட்டு சாப்டீர்கள் என்றால் அதனுடைய சுவை வேற லெவலில் இருக்கும்.
கண்டிப்பாக நீங்கள் தினமும் பூண்டையும் சுட்டு சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுட்ட பூண்டு நமக்கு சுவையையும் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் கொடுக்கக் கூடியது.
பூண்டு சாப்பிடுவதால் வரக்கூடிய பயன்கள் என்ன?
நமக்கு இந்த மூன்று வியாதிகள் இல்லை என்றால் நாம் நிச்சயமாக ஆயுசுக்கும் ஹெல்தியாக இருக்கலாம்.
அந்த மூன்று நோய்கள் என்ன?
உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய நம்முடைய வாழ்க்கை முறையால் வீட்டில் ஒருத்தருக்கு இது மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது.
உயர் ரத்த அழுத்தம்
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் பூண்டு சாப்பிடலாம். ஏன் என்றால் பூண்டில் டயார் சல்பைட் மற்றும் அல்லில் 16 என்கிற முக்கியமான வேதிப்பொருட்கள் நிறைந்து இருக்கிறது. உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
இதய நோய்
இதய நோய் இருக்கிறவங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரை பண்ணக்கூடிய ஒரு பொருள் பூண்டு. பூண்டு உங்களுடைய தமனிகளில் உண்டான அடைப்பை போக்கும். ரத்தம் உறைவதை தடுக்கும். குறிப்பாக உங்களுடைய இதயத்திற்கு போகும் ரத்த நாளங்களில் படிந்து இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும். அதனால் இதயத்தோட ஆரோக்கியம் மேம்படும், இதயம் சிறப்பாக செயல்படும். உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கோ பக்கவாதமோ வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடே கிடையாது என்கிற அளவிற்கு நீரிழிவு நோயால் கஷ்டப்படுறவங்க டெய்லியும் ஆறு வருத்த பூண்டை சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கக்கூடிய சுகர் லெவல் கட்டுப்படும். யாருக்கெல்லாம் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சத்து சேர்ந்திருக்கிறதோ அவர்கள் சுட்ட பூண்டை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய நீரிழிவு நோய் கட்டுப்படும். குறிப்பாக டைப் 2 டயாபட்டிக் பிரச்சனை இருக்கிறவர்கள் டெய்லியும் ஆறு வருத்தப்பூண்டு சாப்பிட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சூடான தண்ணீர் குடித்தாலே போதுமானது.
எலும்புகள்
நம்முடைய உடலில் எலும்புகள் மிக மிக முக்கியமானது. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடினாலோ அல்லது வேறு சில காரணங்களாலையோ நம்முடைய உடலில் இருக்கக்கூடிய எலும்புகளும் மூட்டுகளும் தேய்மானம் அடைந்து வலுவிழந்து முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். மூட்டு சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கிறவங்க டெய்லியும் ஆறு சுட்ட பூண்டை சாப்பிட்டாலே போதுமானது. உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எலும்புகளும் இரும்பை விட ஸ்ட்ராங்கா மாற ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
ஆண்களுக்கு பல வகைகளிலும் அற்புதம் செய்ய கூடியது சுட்ட பூண்டு.
அதாவது இந்த சுட்ட பூண்டில் செலினியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. ஆண்மை குறைபாடு இருக்கிறவர்கள் தாம்பத்ய உறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறவர்கள் தாம்பத்தியத்திற்கு ஹெல்ப் பண்ண கூடிய ஹார்மோன் குறைபாடு இருக்கிறவர்கள் டெய்லியும் ஆறு பூண்டு பற்களை நைட்டு தூங்க போறதுக்கு முன்னால் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஆண்களுக்கே உரித்தான டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன் உற்பத்தி அதிக அளவில் தூண்டப்படும். அதனால் பாலியல் ஆசையும் அதிக அளவில் உருவாகும். தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாகும் நரம்புத் தளர்ச்சி குறைபாடுகளை போக்கி ஆண்மையை பெருக்கெடுக்க வைக்க கூடியது ஆறு வறுத்த பூண்டு.
பெண்களுக்கு மாயம் செய்யக்கூடியது பூண்டு
சில பெண்களுக்கு அவர்களுடைய அந்தரங்க உறுப்பில் இன்பெக்சன் உண்டாகி சிறுநீர் கழிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தரங்க உறுப்பு என்று சொல்லக்கூடிய (private part) அதிக அளவில் எரிச்சலும் அரிப்பும் இருக்கும். சிறுநீர் அவ்வளவு ஈஸியாக கழிக்க முடியாது. கடுப்பு வேற இருக்கும். அந்த மாதிரி அந்தரங்க உறுப்பில் இன்பெக்சன் இருக்கிறவர்கள் ஆறு வருத்த பூண்டை சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் அளவிற்கு இளம் சூடான தண்ணீரை குடித்தாலே போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய இன்பெக்சன் நீங்கி சிறுநீர் கழிக்கும் பொழுது எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு வரவே வராது.
குழந்தை பெற்று தாய்ப்பால் கொடுக்கக்கூடிய தாய்மார்கள்
குழந்தை பெற்று பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் காலையிலும் இரவிலும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வரும் பொழுது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அந்த தாய்ப்பாலை குடிக்கக்கூடிய குழந்தைக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். குழந்தையோட மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தசைகள் வலுவாகும் எலும்புகள் ரொம்பவே உறுதி வாய்ந்ததாக மாறும்.
கண்கள் சார்ந்த குறைபாடுகள்
நம்முடைய உடலிலேயே கண்கள் மிக மிக அவசியமானது என்று சொல்லலாம். உங்களுக்கு கண் அழுத்த பிரச்சனை இல்லை என்றால் கண் பார்வை தெளிவின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்றாலும் டெய்லி தொடர்ந்து 15 நாளைக்கு வறுத்த பூண்டை மட்டும் சாப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கு இருக்கக்கூடிய கண் சார்ந்த பிரச்சனைகளை போக்கி கண் பார்வையை மேம்படுத்தும்.
பல் சம்மந்தமான பிரச்சனை
பல்வலி பல் சொத்தை போன்ற பிராப்ளம் இருக்கிறவர்கள் இந்த பூண்டு பற்களை சாப்பிட்டு பயன்பெறலாம். பூண்டு பற்களில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. குறைபாடு இருக்கும்பொழுது ஆட்டோமேட்டிக்காவே நம்முடைய பற்கள் அதனுடைய உறுதித் தன்மையை இழக்க ஆரம்பிக்கும். அதற்கு நீங்கள் பூண்டு பற்களை மட்டும் நன்றாக கடித்து மென்று சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய பல் வலி நீங்கும். பல் சொத்தையில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் புழுக்கள் எல்லாமே நீங்கி பல் உறுதித் தன்மை வாய்ந்ததாக மாறும். பல் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனையும் வராது.
வயிறு சார்ந்த பிரச்சினைகள்
பூண்டில் நேச்சுரலாவே கிருமி நாசினி ப்ராபர்டீஸ் நிறையவே இருக்கிறது. வயிறு சார்ந்த பிரச்சனைகள் அதாவது சிலருக்கு உடலில் வாதத்தன்மை அதிகரிக்கும் பொழுது ஆட்டோமேட்டிக்காவே வாயு தொல்லையும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். வாயுத்தொல்லை இருக்கிறவர்கள் குடலில் பூச்சி தொந்தரவு இருக்கிறவர்கள் செரிமான கோளாறு இருக்கிறவர்கள் மலச்சிக்கல் இருக்கிறவர்கள் டெய்லியும் காலையில் எழுந்ததும் ஒரு ஆறு வருத்த பூண்டு பற்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் அளவிற்கு சுடுதண்ணீர் குடித்தாலே போதும்.
உங்களுக்கு வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனையும் வரவே வராது. இந்த பூண்டு பற்களை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களுடைய செரிமானத்திற்கு ஹெல்ப் பண்ணக்கூடிய டைஜெஸ்டிவ் என்ஸிம் அதிகளவில் சுரக்கப்படும். நீங்கள் சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுகளும் உடனுக்குடனே டைஜஸ்ட் ஆகும். அதே போல உயர் கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய பேட் கொலஸ்ட்ரால் ப்ராப்ளம் இருக்கிறவர்கள் டெய்லியும் 6 வருத்த பூண்டு பற்களை சாப்பிடும் பொழுது உங்க உடலில் மூளை முடுக்குகளில் சேர்ந்து இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.