உடல் மற்றும் மனசு நலமாக இருக்க ஆன்மீக யோசனைகள்.

 

உடல் மற்றும் மனசு நலமாக இருக்க ஆன்மீக யோசனைகள்.

சாப்பிடும் பொழுது எப்பொழுதும் முழு வயிறு நிரம்பும்படி சாப்பிடக்கூடாது. கால் வயிறு காலியாக இருக்கும் படி விட்டுவிட வேண்டும். இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது தினமும் கட்டாயம் ஒரு பழம் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 சாப்பிடும் போது எவர்சில்வர் அலுமினிய தட்டை தவிர்த்து மந்தாரை வாழை இலைகள் அல்லது வெள்ளி தட்டில் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆண் பெண் இருபாலரும் இரவினை தவிர்த்து புகையிலை இல்லாத தாம்பூலம் போடுவது உடலுக்கு நன்மை தரும்.

 நவீன மெத்தைகளை தவிர்த்து வெறும் தரை அல்லது கோரை பாய் மரப்பலகைகளில் தூங்குவதை பழக்கமாகிக்கொள்வது நல்லது. இரவில் எப்பொழுதும் சுத்தம் என்கிற சுலோகத்தை உச்சரித்து உறங்க செல்வது நிம்மதியான உறக்கத்தை தரும்.


இதையும் படிக்கலாமே : குலதெய்வத்தை இப்படி கும்பிட்டால் இவ்வளவு நன்மையா?| நமது வேண்டுதல் எளிதில் நிறைவேற எளிய பரிகாரம்!!

இன்று எதிலும் கலப்படம் எவற்றிலும் ரசாயனம் கலந்து வருகிறது இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள தினமும் வில்வம் அருகம்புல் வேப்பிலை துளசி கரிசலாங்கண்ணி இவைகளில் கிடைத்த வரை சிறுக சிறுக உடலுக்கு சாராக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நன்மையை தரும்


.உங்களால் முடிந்த அளவு தினமும் சிறுசிறு பொருட்களை சிறுவர்களுக்கோ அல்லது இயலாதவர்களுக்கு தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் சொல்ல முடியாத அளவிற்கு அமைதியை தேடி தரும் வாழும் போதும் சரி, வாழ்ந்து முடிந்த மண்ணுக்குள் சென்ற பின்னாலும் சரி நீங்கள் செய்த நல்லவைகள் தான் துணையாய் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் உங்களோடு தண்ணீர் இருக்குமாறு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது பல விஷ நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு உதவுகிறது.

வாரம் ஒரு முறை சிவாலயம் சென்று நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி நந்தி தேவரின் காதில் சென்று மன்னிப்பு கேளுங்கள் இதனால் உங்களது உள்ளம் நாளடைவில் தூய்மை பெற்று விடும் இல்லத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று மன அமைதியை சீர்குலைத்தால் எதிர்மறை தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதாக அர்த்தம்.

வீட்டின் தளத்தில் சேர்ந்திருக்கும் தூசுகள் கூட இந்த விளைவை ஏற்படுத்தும் அதனால் அவற்றை உடனடியாக நீக்கி சுத்தம் செய்து சாம்பிராணி போட்டு விடுங்கள் இதன் மூலம் எதிர்மறையான எண்ணத்தை விரட்டி விடலாம். வில்வமரம் மற்றும் வேப்ப மரத்தை தம்பதியர்கள் ஆக அடி பிரதர்ஸ்ணம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். 


செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தேங்காயில் கற்பூரம் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். விளக்கு ஏற்றி தர்ப்பை பாய் அல்லது பலகையில் அமர்ந்து தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் அதன் ஒளியை பார்த்தபடி தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

விண்ணில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்தபடி நட்சத்திர தியானம் செய்வது ஆன்மீக ரீதியாக பலன்களை நமக்குத் தரும் இதனால் நட்சத்திர அதிபதிகள் நன்மைகளை வாரி வழங்குவார்கள் வெள்ளரிக்காய் கேரட் பாகற்காய் முட்டைக்கோஸ் முள்ளங்கி இவற்றை சாறு எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். 


இதையும் படிக்கலாமே : அதிக சக்திவாய்ந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.. இப்படி வழிபாடு செய்யுங்கள்.

நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையற்ற வேலைகளை செய்யாமல் குடும்பத்தோடு இறைவழிபாடுகள் இறை நாமங்களை உச்சரித்து வருவது மிகவும் நன்மை தரும் வேதங்கள் பாசுரங்கள் அருட்பாக்கள் பாடியவர்கள் இறைவனின் அருளை பெற்றுள்ளார்கள். 

நம்மில் எத்தனை பேர் இவற்றை படிக்கிறோம் என்றால் குறைவாக தான் இருப்போம் அவர்கள் அருள் பெற்ற தலங்களுக்கு சென்று கால் பதித்து வந்தாலே போதும் நமக்கு மோட்சம் கிடைக்கும் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தாலே போதும் எப்பொழுதும் மனமும் உடலும் தூய்மையாக இருக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *