உடல் எடை குறைய சாப்பிடவேண்டிய உணவுகள்

 

உடல் எடை குறைய சாப்பிடவேண்டிய உணவுகள். (Top 10 Weight Loss Foods in Tamil) 

அதிக உடல் எடை மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக அதிக உடல் எடையினால் அவதிப்படக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் எடை அதிகமாக இருக்கிறவர்கள் உடல் எடை குறைப்பதற்கான பல முயற்சிகளை செய்தாலும் பலருக்கும் நல்ல பலன் கிடைக்கிறது இல்லை. உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி பாஸ்டிங் என முயற்சி செய்தும் கூட குறையாத உடல் எடையை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உடல் எடையை குறைக்கக்கூடிய ஒரு சில உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது மிக எளிதாக  உடல் எடையை குறைக்க முடியும்.


வேகமாக உடல் எடையை குறைக்கக்கூடிய 10 சிறந்த உணவுகள்.


ஒன்று: எலுமிச்சம் பழம் 



மிக வேகமாக உடல் எடையை குறைக்கக்கூடிய பழம் என்றால் அது எலுமிச்சம்பழம் தான். மிகக் குறைவான அளவு கலோரிகளையும் அதிகமான விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்களையும் கொண்ட பழம் எலுமிச்சம் பழம். உடல் எடையை குறைக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம் பழம் சாறு ஒரு ஸ்பூன் தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் குடித்தால் உடல் எடை குறையும்.


இரண்டு: லவங்கப்பட்டை 



பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தி வந்த பொருள் இலவங்கப்பட்டை. லவங்கப்பட்டை உடல் எடையை குறைக்கக்கூடியது என பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. லவங்கப்பட்டையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மட்டும் சின்னமானிகை என்று சொல்லக்கூடிய ஒரு அரிய வகை மூலப்பொருளும் அடங்கி இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன்லவங்கப்பட்டை பொடிசேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால்  உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால்   கரைந்து உடல் எடை குறையும்.


மூன்று: வெந்தயம் 



வெந்தயத்தில் கொலஸ்ட்ராலை கரைக்கக்கூடிய நார்ச்சத்து  இருக்கிறது. இது உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொலஸ்ட்ராலை எரித்து உடல் எடையை வேகமாக குறைக்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தையும் அந்த நீரையும் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

நான்கு: கிரீன் டீ



கிரீன் டீயில் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடிய பாலிபினால்கள் கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும். தினமும் காலை மாலை என இரு வேலையும்  கிரீன் டீ பருகி வருவது நல்லது.


ஐந்து: ஆப்பிள் 



ஆப்பிளில்  நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும். அதனால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.


ஆறு: பாதாம்



பொதுவாக நட்ஸ்களில் பாதாம் உடல் எடை குறைப்பதற்கு உதவும்.

பாதாமில் ஒமேகா 3 பேட்டியாசின் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள்  இருக்கிறது.  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை நேரடியாக கரைக்கும். தினமும் ஒரு பத்து பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதன் தோலை உரித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்.

ஏழு: கொள்ளு 



இலைத்தவனுக்கு எள்ளு கொடு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது பழமொழி. உடலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கும் சதையை கரைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள் கொள்ளு. இந்த கொள்ளு விதைகளை நன்றாக வானொலியில் வறுத்து பொடி வைத்துக்கொண்டு  ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் குடித்து வந்தால் எடை குறையும்.


எட்டு: ஆளி விதைகள் 



ஆளி விதைகளில் சாலிப்பில் பைபர் மற்றும் இன்சாலிப்பில் பைபர் என்று சொல்லக்கூடிய என இரண்டு வகையான நார்ச்சத்துக்களும் இருக்கிறது.ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டும் இருக்கிறது.  இந்த ஆளி விதைகளை  ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் ஆரிய பிறகு குடிக்கலாம்.  அல்லது சாப்பிடும் உணவுகள் மீது  ஆளி விதை பொடிகளை தூவியும் சாப்பிடலாம் இதனால் உடல் எடை குறையும்.


ஒன்பது: முருங்கைக்கீரை 



முருங்கைக்கீரையில்  நார்ச்சத்து   இருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.  சாப்பிடும் உணவுகளில் முருங்கைக்கீரையை பொரியலாக செய்தோ அல்லது முருங்கைக்கீரையை ஜூஸ் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


பத்து: தண்ணீர் 



காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது  நல்லது. தண்ணீர் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக்கும். வெதுவெதுப்பான நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகும் போது  உடலில் உள் உறுப்புகளின் இயக்கத்தை சீராக இயக்கி உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பை கரைக்கும். இதனால் உடல் எடை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *