உங்கள் வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை சுலபமாக குறைக்க…

 

வெறும் 5 நாட்களில் உங்கள் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பை மொத்தமும் கரைத்துவிடும்.



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் எந்தவிதமான உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல் வெறும் ஐந்தே நாட்களில் உங்களுடைய உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று தெரிந்து கொள்வோம்.


தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் ஐந்து நாட்களுக்கு இந்த ரெமடி எடுத்துக் கொண்டாலே போதும். அது  உங்களுடைய உடல் பருமனுக்கு காரணமாக இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ரால், கலோரிஸ் எல்லாவற்றையும் குறைத்து விடும். இதனால் உங்களுடைய உடல் எடை குறைந்து சரியான சருமத்திற்கு மாறிகொழு கொழு    தொப்பைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பவர்களுக்குஇந்த ஒரு பானத்தை தயார் செய்து குடித்தாலே  போதுமானது. பானம் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்



இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பேர் உடல் பருமனால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஓ பி சிடி என்று சொல்லக்கூடிய உடல் பருமனால் நமக்கு நிறைய வியாதிகள் வந்த வண்ணம் இருக்கும். மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை வியாதி போன்ற நிறைய நோய்கள் இருக்கிறது.  இந்த நோய்கள் எல்லாம் வருவதற்கு காரணமே அதிக உடல் பருமன். 


அதிக உடல் பருமன் வருவதற்கு காரணம் என்ன என்றால் நிச்சயமாக பேட் கொலஸ்ட்ரால் தான்.  இப்பொழுது உங்களுடைய உடலில் சேர்ந்து இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றி அதிகப்படியான உடல் எடையை எப்படி எளிமையான முறையில் குறைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


கருமிளகு



ஒரு பாத்திரத்தை எடுத்து  அதிலே  250 மில்லி அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து ஐந்து கருமிளகை எடுத்து இடித்து தூள் செய்து கொள்ளவும். பவுடராக இருந்தால் அரை டீஸ்பூன் போதுமானது. கருமிளகு செரிமானத்தை எளிமையாக்கும். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதை சுலபமாக செரிமானம் ஆகும். அதாவது உங்களுடைய உடலில் கெட்ட கொழுப்பை படிய விடாமல் தடுக்கும். 


கலோரியை எரிக்கும் தன்மை மிளகில் நிறைந்து இருக்கிறது. நம்முடைய உடலில் எப்பொழுது கெட்ட கொழுப்பு படிய ஆரம்பிக்கிறோ அப்பொழுதே உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த கெட்ட கொழுப்பை கரைக்க மிக மிக முக்கியமான ஒரு மூலப்பொருளாக இருக்கக்கூடியது கருமிளகு.


இலவங்கப்பட்டை



இலவங்கப்பட்டை ஒரு துண்டு. சமையலுக்கு பயன்படுத்தகூடியது.

இலவங்கப்பட்டையில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்து இருக்கிறது. இதுவும் நம்முடைய செரிமான உறுப்புகளை  சிறப்பாக செயல்பட வைக்கக்கூடியது. நாம் சாப்பிடும் உணவுகளை உடனுக்குடனே செரிமானம் ஆகி அதில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட கழிவுகள் அனைத்தையும் உடனே  வெளியேற்றிவிடும். இலவங்கப்பட்டையை நீங்கள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காமல் சீராக இருக்கும்.


மஞ்சள்



மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் சிறிதளவு சேர்த்து கொண்டால் போதும். மஞ்சளில் அளவிற்கு அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. உடல் எடையை குறைக்க மஞ்சள் பெரிதும் உதவும்.


இஞ்சி



இஞ்சி ஒரு அங்குல அளவிற்கு  எடுத்து அதை தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு  அதிலிருக்கும் தோலை சீவி விட்டு நன்றாக இடித்து பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி இல்லையென்றால் சுக்கு பொடி சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் சுக்கு பொடி. சுக்கில் விட்டமின் சி மற்றும் நார்சத்து இருக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

 

100% முக்கியமான இயற்கை முறை பொருள் நிறைந்து இருக்கிறது.   நம்முடைய செரிமான முறையை சிறப்பாக செயல்பட வைக்கும். உடலில் கெட்ட கொழுப்பை எப்பவுமே தேங்க விடாது.  உடனுக்குடன் கரைத்து வெளியேற்றக் கூடியது. உடல் எடைக்கு காரணமாக இருக்கக்கூடிய கலோரியை குறைக்க இஞ்சி விழுது பயன்படுகிறது 


கரு மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும் நெருப்பை முதலில் இருந்தே மிதமான வெப்பத்தில் வைக்க வேண்டும்.


250 ml தண்ணீர் சுண்டி 200ml அளவுக்கு வந்தாலே போதும். பாதிக்குப் பாதி வரவேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. அடுப்பில் வெப்பத்தின் அளவை சீராக வைத்தால் நாம் சேர்த்திருக்கும் கருமிளகு லவங்கபட்டை மஞ்சள் இஞ்சி பேஸ்ட் இவை அனைத்தும் தண்ணீரில் நன்றாக இறங்கி கலக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பானத்தை தயார் செய்து அருந்தி வந்தால் வெகு விரைவில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகள் அனைத்தும் கரைந்து சீரான உடல் அமைப்பை பெறுவீர்கள். 


இதையும் படிக்கலாமே: தொப்பையை குறைக்க இதுதான் வழி



நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி வைத்து நன்றாக ஆற விட வேண்டும் பிறகு அதை வடிகட்டியின் மூலம் வடித்து எடுக்க வேண்டும் வடித்து எடுத்த பானத்தை சுவை தேவை என்றால் சிறிது தேன் கலந்து கொள்ளலாம் தேவையில்லை என்றால் இஞ்சி இலவங்கம் மஞ்சள் கரு மிளகு ஆகியவற்றின் சுவையே நன்றாக இருக்கும் அதனால் அப்படியே பருகுவது என்றாலும் பருகலாம். சிறு குழந்தைகளுக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் சிறிது தேன் கலந்து கொடுங்கள்.


 

பிசிஓடி பிசிஓஎஸ், ஹாட் ப்ராப்ளம்,  நீரிழிவு நோய் இருக்கிறவர்கள் கூட தாராளமாக பருகலாம். தைராய்டு பிரச்சினை இருப்பவர்களும் இந்த பானத்தை பழகலாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இந்த அற்புதமான பானத்தை தயார் செய்து தொடர்ந்து குடித்து வரலாம். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு குடித்து விட்டு எடையை பாருங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மேலும் தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *