இலவச மாட்டு கொட்டகை திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?

 

இலவச மாட்டு கொட்டகை திட்டம் 

விண்ணப்பிப்பது எப்படி?

(How to Apply Free cow shed scheme details in Tamil|Free Cow shed – TN News.)





இலவசமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்கும் திட்டத்தின் மூலம் ஆடு மாடுகள் வளர்பது மட்டும் இல்லாமல் அது தங்குவதற்கு தேவையான இலவசமான ஆட்டுக்கொட்டைகையும் மாட்டு கொட்டகையும் அமைப்பதற்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது.


தமிழக அரசிடமிருந்து இலவசமாக ஆட்டுக்கொட்டகையும் மாட்டுக்கொட்டகையும் அமைப்பதற்கு எப்படி மானியம் வாங்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.


ஒரு மாட்டுக்கு கொட்டகை அமைக்கவேண்டும் என்றால்  குறைந்தபட்சம் 40 சதுர அடி இடம் தேவை. .


ஒரு மாட்டிற்கு 40 சதுர அடி இடம் அவசியம் தேவை. அப்பொழுதுதான் மாடு சௌகரியமாக இருக்கும் என்று தமிழக அரசில் சொல்லி இருக்கிறார்கள்.


உங்களுக்கு சொந்தமாக நிலம் இருக்கவேண்டும். அதிலும் பட்டாவானது உங்களுடைய பெயரில் இருக்கிறது நல்லது.  யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுடைய பெயரில் பட்டா இருந்தால் கடன் விரைவாக கிடைக்கும். கூட்டுப்பட்டவாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


ஆதார் அட்டை, பால் ஊற்றும் அட்டை மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ நீங்கள் வேலை செய்வதற்கான சான்று மேலும் விபரங்களுக்கு உங்கள் ஊரில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுகி முழு விபரமும் பெற்றுக்கொள்ளலாம். 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்ற கால்நடை பராமரிப்பு துறையில் விண்ணப்பங்கள்  கொடுக்கிறார்கள் அதனை வாங்கி  பூர்த்தி செய்து அதில் என்னென்ன சான்றிதழ்கள் கேட்கிறார்களோ அவற்றை எல்லாம் இணைக்க வேண்டும்.


சொந்தமாக நிலம் இருந்தால் அவற்றின் ஆதாரங்களையும் பத்திரங்களையும் ஜெராக்ஸ் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


இதையும் படிக்கலாமே : தமிழ் நாட்டின் முதல் 10 விவசாயம் சார்ந்த தொழில்கள்


இதையெல்லாம் தயார் செய்து நீங்கள்  கொடுத்து விட்டீர்கள் என்றால் சில நாட்கள் கழித்து அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து இட வசதிகள் இருக்கிறதா என்பதை கவனித்து உங்களுக்கான கடனை வழங்க ஒப்புதல் அளிப்பார்கள்.


இரண்டு மாடுகள் வைத்திருந்தீர்கள் என்றால் 79,000.00 ரூபாயும், 10 மாடுகள் வைத்திருந்தால் 2,15,000.00 ரூபாயும் தமிழக அரசால் மானியமாக வழங்கப்படும். இந்த கடனை பெறுவதற்கு உங்களுக்கு பேங்கில் ஒரு அக்கவுண்ட் தேவைப்படும். அனைத்து சான்றிதழ்களையும் தயார் செய்து விண்ணப்பத்தை அளித்தீர்கள் என்றால் உங்களுக்கு விரைவிலேயே கடன் வாங்க ஏற்பாடு செய்வார்கள்.


மேலும் விவரங்களுக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *