இரத்த அழுத்தம் குறைய 10 டிப்ஸ்

 

இரத்த அழுத்தம் குறைய 10 டிப்ஸ் – Top 10 Tips to Reduce Blood Pressure -How to Control Blood Pressure.



ரத்த அழுத்தம்


மாறி வரக்கூடிய உணவுப்பழக்கம் வேகமான வாழ்க்கை முறை காரணமாக இன்று பலரும் சந்திக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை ரத்த அழுத்தம். ரத்த அழுத்தம் என்றால் என்ன?   


ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அழுத்தம் (Pressure) அல்லது இதயம் சுருங்கி விரியும்போது உண்டாகக்கூடிய அழுத்தம் தான் பிளட் பிரஷர் ரத்த அழுத்தம்.  உடல் எடை அதிகமாக இருக்கிறவர்களுக்கும் எப்போதும் எரிச்சல் கோபம் மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளினால் அவதிப்படுகிறவர்களுக்கும் துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கும் மிக எளிதாக பாதிக்க கூடியது  ரத்த அழுத்தம். 


இரத்த அழுத்தம் நார்மல் அளவைவிட அதிகமாக இருப்பதை ஹை பிளட் பிரஷர் எனவும் குறைவாக இருப்பதை லோ பிளட் பிரஷர் எனவும் சொல்வதுண்டு .உடலில் ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாளடைவில் இருதயம் மூளை சிறுநீரகங்கள் கண்கள் போன்ற உறுப்புகளை எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மிக எளிதாக பாதிக்க கூடியது இந்த பிளட் பிரஷர். இதன் காரணமாகத்தான் பிபியை ஒரு சைலன்ட் கில்லர் டிசிஸ் என்று சொல்வதுண்டு.


ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவக்கூடிய 10 சிறந்த வழிமுறைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


ஒன்று : சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.


ரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் ஆகவே ஆகாது தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய உப்பில் 40% சோடியமும் 60% குளோரைடு இருக்கும் உப்பில் இருக்கக்கூடிய சோடியம்  நம் உடலில் இருக்கக்கூடிய நீரை உறிஞ்சி ரத்தத்தில் வந்து கலந்து விடும். இதன் விளைவாக ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் ரத்தத்தின் அளவு அதாவது வாலிம் அதிகரிக்கும் போது  இதயத்திற்கு அதிக சுமை உண்டாகும். அதே சமயம் ரத்த நாளங்களில் பிரஷர்  அதிகரிக்கும். 


இது மட்டும் இல்லாமல் நரம்புகள் அதிகமாக ஸ்ட்ரிச் ஆவரதுனால பிளட் வெர்சல்ஸும்  எளிதாக டேமேஜ் ஆகும் இப்படி டேமேஜ் ஆகக்கூடிய இடத்தில் எல்டிஎல் போன்ற கெட்ட கொழுப்புகள் படிந்து ஹார்ட் அட்டாக் போன்ற ஆபத்தான நோய்களையும் மிக எளிதாக ஏற்படுத்தக் கூடியது இந்த பிளட் பிரஷர். இதன் காரணமாக சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


ஹெல்தியாக இருக்கக்கூடிய ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து மில்லி கிராம் உப்பு எடுத்துக் கொண்டாலே போதுமானது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. பிபி பிரச்சனை இருக்கிறவர்கள் உப்பின் அளவை பாதியாக குறைத்து இரண்டிலிருந்து இரண்டரை மில்லி கிராம் உப்பு வரைக்கும் எடுத்துக் கொண்டாலே போதுமானது. சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைப்பதன் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். 


இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது


இரண்டு : துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் 


பீட்சா பர்கர் பிரைடு சிப்ஸ் பாஸ்ட் புட் போன்ற துரித உணவுகளையும்பாக்கெட்டில் அடைத்து வைக்கக்கூடிய சிப்ஸ் பிஸ்கட் லேஸ் ஸ்கெட்ச் மற்றும் அனைத்து விதமான குளிர்பானங்களையும் பல்வேறு வடிவங்களில் இந்த சோடியம் உப்பு அதிக அளவில் நிறைந்து இருக்கும் இது மட்டுமில்லாமல் நம் உடலுக்கு தீமை விளைவிக்க கூடிய ஒயிட் சுகர் வனஸ்பதி என்று சொல்லக்கூடிய டால்டா மைதா போன்ற பொருட்களும்   ஜங் ஃபுட்ஸ் எல்லாம் வந்து நிறைந்திருக்கும்.


இது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவது மட்டும் இல்லாமல் உடல் எடையையும்  அதிகப்படுத்தும்.  பிளட் பிரஷர் இருக்கிறவர்கள் பேக்கரி உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் துரித உணவுகளை  அவசியம் தவிர்க்க வேண்டும்.


மூன்று :  உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது 


உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கக்கூடிய 100 நபர்களில் 75 நபர்கள் உடல் எடை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கும் உடல் எடைக்கும்  தொடர்பு இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதயத்திற்கு அதிக சுமை உண்டாகும்.


இதன் விளைவாக இதயமானது இயல்பான வேகத்தை விட சற்று கூடுதல் வேகத்துடனும் இயங்கவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. இதனால்  ரத்தநாளங்கள் அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்து விடும் வருட கணக்கில் உடல் எடை அதிகமாக இருக்கும் போது எளிதாக உயர் ரத்த அழுத்தத்தை  உண்டாக்கும். உயரத்திற்கு ஏற்றார் போல் உடல் எடையை சீராக வைத்துக் கொள்வதனால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.


நான்கு : பொட்டாசியம் அதிக நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கின்றவர்கள்  தினசரி சாப்பிடக்கூடிய உணவுகளில் பொட்டாசியம் அதிக நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றும் ஆற்றல் இந்த பொட்டாசியத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இதய தசைகள் சீராக இயங்கவும் மிகவும் அவசியமானது பொட்டாசியம்.


 இருக்கிறவங்க பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகளான இளநீர் வாழைப்பழம் கீரைகள் சர்க்கரைவள்ளி கிழங்கு உலர் திராட்சை தயிர் போன்ற உணவுகளை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.


இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்


ஐந்து : மன அழுத்தத்தை  குறைக்க வேண்டும்.




மன அழுத்தத்திற்கும் ரத்த அழுத்தத்திற்கும் அதிக தொடர்பு உண்டு மன அளவில் பாதிக்கப்படும் போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்  உற்பத்தியாகும். இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன் ஸ்பைக் என்று சொல்லக்கூடிய ஒரு குறுகிய நேர ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் இந்த மன அழுத்தமானது மாத கணக்கில் வருட கணக்கில் தொடரும் போது  ரத்த நாளங்களை பாதித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்.  கூடுமானவரைக்கும் ஸ்ட்ரெஸ் ஃபுல்லான சூழ்நிலைகளை தவிர்ப்பது  மட்டும் இல்லாமல் எக்சர்சைஸ் யோகா போன்ற விஷயங்களை செய்வதன் மூலமாகவும் மன அழுத்தத்தை  குறைக்கலாம்.


ஆறு : கப்பின் அதிகமுள்ள உணவுகளை வந்து தவிர்க்க வேண்டும்.


அதிக அளவிலான கப்பின் இருக்கும்  உணவுகளை சாப்பிடும்போது  அது உடலில் குறுகிய நேரத்திற்கு பிளட் பிரஷரை உருவாக்கி ரத்த ஓட்டத்தை  அதிகப்படுத்தும் இதன் காரணமாகத்தான் டீ காபி குடிக்கும் போது சற்று நேரம் உற்சாகமாக இருப்பது போன்று உணர்கின்றோம். ஆனால் ஒரு சிலர் தினசரி 5 டீ 10 காபி என அதிக எண்ணிக்கையில் டீ காபி குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்பார்கள் அப்படிப்பட்டவங்களுக்கு  நாளடைவில் உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. காபி டீ அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.


ஏழு : தினமும் போதுமான அளவு  தூங்க வேண்டும். 




மனதையும் உடலையும் ஒருசேர ஆரோக்கியமாக வைத்திருக்க கூடிய ஒரே விஷயம் நல்ல தூக்கம். தூக்கம் தடைபடும் போது  அன்றைய நாள் முழுவதும் ஒரு வித எரிச்சலாகவும் மன அழுத்தத்துடனும் இருப்பதை உணர முடியும். தினசரி போதுமான அளவு தூங்கினாலே 20% வரைக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயர் ரத்த அழுத்த பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.


இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்


எட்டு : தினசரி உடற்பயிற்சி அவசியம்


தினசரி தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பொழுது இதயம் மற்றும் இதய தசைகள் நன்கு வலுவாகும். இதயம் வலுவாக இருக்கும் போது  குறைந்த முயற்சியிலேயே அதிக ரத்தத்தை பம்ப் பண்ண முடியும். இதன் மூலமாக ரத்த நாளங்களில் பிரஷரும்  சீராக இருக்கும். ரத்த அழுத்த பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் தினசரி ரெகுலராக எக்ஸ்சைஸ் வாக்கிங் சைக்கிளிங் போன்றவற்றை செய்வதன் மூலமாகவும் பிளட் பிரஷர்  கண்ட்ரோலாக வைக்கிறது மட்டும் இல்லாமல் இதயம் மட்டும் இதய ரத்த நாளங்களும் வலுவாகும்.


ஒன்பது :  நம் வீடுகளில் இருக்கக்கூடிய ஒரு சில உணவுகளுக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு





உதாரணமாக இளநீர் பூண்டு பால் செம்பருத்தி டீ போன்ற பானங்களை  வீட்டில்  செய்து குடிக்கலாம். இந்த பானங்கள் எல்லாம்  பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் ஏராளமான எலக்ட்ரோலைட்ஸ் நிறைந்திருக்கிறது. இது நம் நரம்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் இருதயத்தையும் பலப்படுத்தும் அதேசமயம் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.


பத்து : உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறவர்கள் மது புகை போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


மது அதிகமாக அருந்தும் போது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுக்கூடிய ரெனின் ஆஞ்சியோடென்சின் போன்ற ஹார்மோன்சை பாதித்து ரத்த நாளங்களை சுருங்க செய்து விடும். ரத்தநாளங்கள் சுருங்குவதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் மிக எளிதாக உண்டாகும். புகை நேரடியாகவே இரத்த நாளங்களை  பாதிக்கக்கூடியது.  மது புகை போன்ற பழக்கங்களை தவிர்ப்பதன் மூலமாக ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுப்பது மட்டும் இல்லாமல் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில்  வைத்திருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *