இயற்கை மூலிகை செடியின் மூலம் முதுகு வலி குறையும் அதிசயம்.

இயற்கை மூலிகை செடியின் மூலம் முதுகு வலி குறையும் அதிசயம். 

வணக்கம் நண்பர்களே.

அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.


உண்மையிலேயே முதுகு வலிக்கான  நிவாரணம் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால் அதை விட்டுவிட்டு நாம் மருந்து மாத்திரைகளை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம். 

உங்களுக்கு இருக்கக்கூடிய நாள்பட்ட முதுகுவலி மட்டும் இல்லாமல் மூட்டு வலி இடுப்பு வலி குறிப்பாக உங்களுடைய உடம்பில் ஏதாவது வெட்டு காயங்கள் ஆறாத நாள்பட்ட புண்கள் சிராய்ப்புகள் கொப்புளங்கள் கட்டிகள் இருந்தாலும் அதை  விரைவிலேயே குணமாக்கி தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அந்த மூலிகை என்ன என்ன என்று பார்த்துவிட்டு பிறகு அந்த செடியை முதுகு வலிக்கு எப்படி பயன்படுத்தவேண்டும் வெட்டு காயங்களுக்கு எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.  


இதையும் படிக்கலாமே ; ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் 10 உணவு வகைகள்

நம்முடைய வீட்டிற்கு பக்கத்தில் தானாகவே வளர்ந்து இருக்கக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை செடிதான் வெட்டுக்காய பூண்டு செடி. இதை  வெட்டுக்காய பச்சிலை, கிணற்றுப் பாசான், மூக்குத்தி பூ செடி, தாத்தா பூச்செடி, தாத்தா தலை வெட்டி செடி, என்று நிறைய பெயர்களை சொல்லுவார்கள். இந்த செடி  சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இதில் இருக்கக்கூடிய பூக்கள் சிறிய அளவில் இருக்கக்கூடிய சூரியகாந்தி போலவே இருக்கும். சின்ன வயதில் நிறைய பேர் இந்த பூக்களை வைத்து விளையாடுவார்கள். 


மூட்டு வலி


இந்த செடியில் இருக்கக்கூடிய இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. ஆனால் அதை நாம் கொஞ்சம் கூட கவனிப்பது இல்லை. முதுகு வலி தலைவலி என்றால் உடனே மருந்து மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோமே தவிர பாரம்பரியமாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திட்டு வந்த இந்த மாதிரியான மூலிகைகளை நாம் பயன்படுத்துவதே கிடையாது.

அந்த காலத்தில் விவசாய வேலை செய்றவர்களுக்கும் கல் உடைத்து வேலை செய்றவர்களுக்கும் எப்போதாவது முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி மாதிரியான பிரட்சினை வந்தது என்றால் அவர்கள்  பாரம்பரியமாக இந்த மருந்தை தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதுபோல உங்களுக்கும் முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி இருக்கிறது என்றால் நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். நிச்சயமாக இந்த செடி உங்களுடைய கண் பார்க்கிற தொலைவில் ஏதாவது ஒரு இடத்தில் முளைத்து இருக்கும் 

அதை கையோட பிடுங்கி உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்து அந்த இலைகளை மட்டும்  பறித்து எடுத்து இலைகள் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். நன்றாக கரும்பச்சை நிறத்தில் இருக்கும். அந்த இலைகளை மட்டும் பறித்து எடுத்து அதை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாய் எடுத்து வைத்துக்கொண்டு அதில்  இரண்டு டீஸ்பூன் அளவிற்க்கு நல்லெண்ணெய் ஊற்றி நல்லெண்ணெயில் அதிக அளவில் வலி நிவாரண பண்புகள் இருக்கிறது.


முதுகு வலி


எண்ணெய் கொஞ்சமாக சூடானதற்கு பிறகு நாம் பறித்து வைத்திருக்கின்ற அந்த இலையை ஒரு கைப்பிடி அளவிற்க்கு எடுத்து கடாயில் போட்டு நன்றாக சூடு ஏறும் அளவிற்கு வதக்கவும். நல்ல சூடாக இருக்கவேண்டும். அதை அப்படியே எடுத்து ஒரு வெள்ளை துணியில் வைத்து சின்னதாக மூட்டை போல் கட்டிக்கொள்ளுங்கள். மூட்டையாக கட்டி வைத்த பிறகு முதுகு வலி இருக்கிறவர்கள் குப்புர படுத்துக்கொள்ள வேண்டும்.

குப்புர படுத்த பிறகு உங்களுக்கு எந்த இடத்தில் முதுகு வலி இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்து ஒரு கை பொறுக்குற சூட்டில் பத்து நிமிடத்தில் இருந்து 15 நிமிடம் வரைக்கும் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவேண்டும். அது போல நீங்கள் தொடர்ந்து இரண்டு நாட்ளுக்கு ஒத்தடம் கொடுத்தாலே போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய நாள்பட்ட முதுகு வலி இரண்டே நாட்களில் குணமாகிவிடும். 


இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்

கொஞ்சமாக முதுகுவலி இருக்கிறவர்களுக்கு ஒரு நாள் போதும். நண்பர்களே அது மட்டும் இல்லாமல் இந்த பாரம்பரிய வைத்தியத்தை நீங்கள் மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் இடுப்பு வலியால் கஷ்டப்படுபவர்கள் பாத வலியால் ரொம்ப நாளாக அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

நண்பர்களே இது ஒரு மெத்தட் இன்னொரு மெத்தட் என்னவென்றால்  இந்த வெங்காய பூண்டு பச்சிலை செடியை எடுத்து வந்து அதனுடைய இலைகளை மட்டும் பறித்து கசக்கினால் அதிலிருந்து சாறு வரும். பொதுவாக நீங்கள் கையில் வைத்து கசக்கினால் நிச்சயமாக அதிலே சாறு வரும். ஏன் என்றால் அந்த செடியில் நிறையவே நீர்ச்சத்து நிறைந்திருக்கும். அப்படி சாறு வரவில்லை என்றால் பரவாயில்லை நீங்கள் மிக்ஸி ஜார்லையோ அல்லது அம்மியிலையோ வைத்து அரைத்து அந்த சாறை மட்டும் பிழிந்து எடுத்து உங்களுக்கு முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் குடைச்சல் உள்ள இடத்தில் தடவுங்கள். அதுபோல் தொடர்ந்து தடவி விட்டு வரும்பொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய முதுகு வலி மூன்று நாட்களில் குணமாகிவிடும்.


ஆறாத புண்


இதைத்தான் பாரம்பரியமாக நம்முடைய முன்னோர்கள் முதுகு வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பாத வலிக்கு பயன்படுத்தி வந்தனர்.  நாள்பட்ட முதுகு வலி என்று முடங்கி கிடக்காமல் உடனே இந்த மருத்துவத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான தீர்வு ஒரே நாளில் கிடைத்துவிடும். குறிப்பாக இந்த வைத்தியத்தை நீங்கள் இரவு தூங்க போவதற்கு முன்னால் முயற்சி செய்து பாருங்கள். ஏன் என்றால் இரவு படுக்கும் பொழுது தான் நிறைய பேருக்கு முதுகு வலி ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும்.

அதனால் இரவில் முயற்சி செய்து பார்க்கும் பொழுது உங்களுக்கான சொலுஷன் முழுமையாக கிடைத்துவிடும். இரண்டே நாளில் உங்களுடைய முதுகு வலி உங்களை விட்டு ஓடி போய்விடும். அதுபோல் உங்கள் உடம்பில் ஏதாவது வெட்டு காயங்கள் அடிபட்ட புண்கள் ஆறாத நாள்பட்ட ரணங்கள் கொப்புளங்கள் கட்டிகள் இருந்ததென்றால் அதற்கு  இந்த வெங்காய பூண்டு பச்சிலை இலைகளை மட்டும் எடுத்து வந்து அது கூட கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து   உங்களுக்கு எந்த இடத்தில் வெட்டுக்காயம் புண், ரணம் இருக்கும், அதுக்கப்புறம் கட்டிகள் இருக்கும் அதுபோன்ற இடங்களில் வைத்து நீங்கள் பத்து போட்டாலே போதும். இரண்டே நாட்களில் புண் ஆறிவிடும்.. குறிப்பாக உங்கள் உடம்பில் ஏதாவது சிராய்ப்பு இருந்தென்றால் அந்த சிராய்ப்பு உண்டான இடம் கூட கம்ப்ளீட்டா மறைந்து போய் விடும்.


இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.

உங்களுக்கு முதுகு வலியாக இருக்கட்டும் மூட்டு வலியாக இருக்கட்டும் இடுப்பு வழியாக இருக்கட்டும், உடலில் ஏதாவது புண்ணாக இருக்கட்டும் அதுக்கு நீங்கள் மெடிக்கல் ஷாப் தேடி ஓடவே வேண்டாம். உங்களுடைய வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த மூலிகையை மட்டும் பயன்படுத்துங்கள்.

அதுபோல் இந்த மூலிகையில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பான இன்னொரு குணம் என்னவென்றால்  சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய புண்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறவே ஆறாது அந்த புண்ணு   பெரியதாக போகுமே தவிர குணமாகவே ஆகாது. ஆனால் இந்த சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய புண்களை குணப்படுத்தும் தன்மையும் இந்த வெட்டுக்காய பூண்டு செடியில் நிறைந்திருக்கிறது.

நம்முடைய வீட்டிற்கு பக்கத்தில் தாராளமாக கிடைக்கின்ற ஒரு அற்புதமான மூலிகையுடைய நன்மைகள் பற்றி நாம் தெரிந்து கொண்டோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *