இயற்கை முறையில் பூச்சிவிரட்டி மருந்து தயாரிப்பது எப்படி?

இயற்கை முறையில் பூச்சிவிரட்டி  மருந்து தயாரிப்பது எப்படி?

இயற்கையான முறையில் பூச்சிவிரட்டி  மருந்து தயாரித்து பூச்சிகளை விரட்டினால் நமக்கு விளைச்சல் அதிகமாகும் உடல் நலமும் பாதிக்கப்படாது பூச்சிகளைச் சாகடிக்காமல் இயற்கை பூச்சி விரட்டி  மருந்து பயன்படுத்தி அதை விரட்டி விடலாம்.


விவசாயத்தில் நமக்கு மிகவும் சவாலான ஒன்று உள்ளது என்றால் அது பூச்சி. இந்தப் பூச்சிகளைச் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேதியல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால் செலவு அதிகமாகும் பூச்சிகளும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு இயற்கையான முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயார் செய்து அதனை உபயோகிப்பதால் பூச்சிகளை நம் தோட்டத்தில் இல்லாதவாறு விரட்டி விடலாம். 



இதையும் படிக்கலாமே: இலவச மாட்டுக்கொட்டகை திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?




இயற்கையான முறையில் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க நமக்குத் தேவைப்படும் பொருட்கள் ஆடாதோடை இலை இரண்டு கிலோ இஞ்சி 1/4 கிலோ, மிளகாய் அரை கிலோ பூண்டு அரை கிலோ.  இஞ்சி, மிளகாய், பூண்டு இவை மூன்றையும் ஒரு உரலில் இட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஆடாதொடை இலையைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 


இருபது லிட்டர் தண்ணீரில் இவை நான்கையும் கலந்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். 10 லிட்டர் அளவுக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும் நன்றாகக் கொதித்ததினால் இலையில் இருக்கும் சாறுகள் அனைத்தும் தண்ணீரில் நன்றாகக் கலந்திருக்கும். 




இதை ஒரு லிட்டருக்கு 10 மில்லியென்று பத்து லிட்டருக்கு 100 மில்லி கலந்து கைத்தெளிப்பான் அல்லது இயந்திர தெளிப்பான் மூலம் செடிகளின் மேல் நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் பூச்சிகள் செடிகளை விட்டு அகன்று வேறு இடத்திற்கு சென்று விடும் இதனால் நம் விவசாயம் பூச்சிகளால் பாதிக்கப்படாது. 


————————————————————————————————————


இதையும் படிக்கலாமே: ட்ரான் வாங்க விவசாயிகளுக்கு நான்கு லட்சம் மானியம்


————————————————————————————————————————-


இந்தப் பூச்சி விரட்டிப் பூச்சிகளுக்கு ஏற்றச் சுவையை மாற்றி விடுவதால் அதனால் அந்தச் செடிகளில் நீண்ட நேரம் இருக்க முடியாது அதனால் வேறு இடத்திற்கு சென்று விடும் இதை நீங்கள் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் கட்டாயம் வெற்றி கிடைக்கும் செலவும் குறையும் உடம்புக்கும் நல்லது அதனால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேண்டுகிறோம். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *