இந்த பவுடரை ஒரு வாரம் தேய்த்து குளித்து பாருங்கள் அசந்துபோவீர்கள்.
உடலில் தோலின் தன்மையை மேம்படுத்தும் (Skin Colour Improve) குளியல் மாவு (Bathing Powder) தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். முதலில் உபயோகத்திலேயே நல்ல ஒரு மாற்றம் தெரியும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தோலின் நிறத்தில் வித்தியாசத்தை காணலாம். பிறகு நீங்கள் தொடர்ந்து இந்த மாவை மட்டுமே குளியலுக்கு பயன்படுத்துவீர்கள்.
கடலை பருப்பு
பச்சைபயறு :
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
மைசூர் பருப்பு
பிங்க் நிற பருப்பு அல்லது சிவப்பு பருப்பு என்று பெயர். மைசூர் பருப்பிலும் நிறைய ப்ரோடீன்ஸ், விட்டமின்ஸ், மினரல்ஸ் எல்லாம் நிறைய இருக்கிறது. மேலும் தோலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைய மைசூர் பருப்பில இருக்கிறது. முகப்பரு (Pimples) கருவளையம் போன்றவைகளையும் மைசூர் பருப்பினால் போக்க முடியும்.
பச்சரிசி
பச்சரிசியை பயன் படுத்தி நிறைய செய்முறைகள் இருக்கிறது. முகம் மற்றும் உடலில் உள்ள தோலை மிருதுவாகவும் எண்ணை பசை இல்லாமல் அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க பச்சரிசி மாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பச்சரிசி நம்முடைய ஸ்கின்னுக்கு மிகவும் நல்லது பச்சரிசி மாவு.
பச்சரிசி மாவு இருந்ததென்றால் அதையே நீங்கள் உபயோகப்படுத்தலாம். இவைகள் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இது மட்டும் பாதி அளவு எடுத்தால் போதுமானது.
இதையும் படிக்கலாமே ; ஆண்களின் முகம் அழகாய் மாற சூப்பரான டிப்ஸ்
முல்தானி மெட்டி பவுடர்.
முல்தானி மெட்டி பவுடர் கடையில் கிடைக்கும். பேன்சி ஸ்டோரில் இருக்கும். முல்தானி பெட்டி பவுடர் ஒரு அளவு எடுத்துக் கொள்ளலாம். முல்தானி மெட்டி பவுடர் பவுடராக இருப்பதனால் முன்பு சொன்ன அனைத்து பொருட்களையும் அறைத்து மாவாக எடுத்த பின் இந்த பவுடரை கடைசியாக கலந்து கொள்ளலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் ஸ்கின்னுக்கு ஒரு பளபளப்பு கொடுக்கும். அதனால் ஓட்ஸ் ஒரு அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடி நிறைய அளவில் (Quantity) செய்ய வேண்டும் என்றால் நீங்கள் மாவு மெஷினில் கொடுத்து அறைத்துக்கொள்ளலாம்.
முதலில் அனைத்து பொருட்களும் அறைத்து முடிந்தவுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி பவுடர் இரண்டையும் கடைசியாக மிக்ஸியில் போட்டு கலந்து எடுத்துக் கொள்ளலாம். பவுடர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அறைத்த மாவை சலித்து உபயோகப்படுத்தலாம்.
இதை குழந்தைகளுக்கும் பயன் படுத்தலாம். பையன்களுக்கு பயன் படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்க வேண்டாம். இதனுடன் ஆரஞ்சு தோல் பவுடர் (Orange Peel Powder) அல்லது பாதாம் பவுடர் சேர்த்தக்கொள்ளலாம்.
இதை நீங்கள் பிரிட்ஜில் வைத்து இரண்டு மாதம் வரைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வெயிலில் காய வைத்து பொடி செய்தீர்கள் என்றால் ஒரு மாதம் வரையும் வெளியில் வைத்து பயன்படுத்தலாம் கெட்டுப் போகாது.
நன்றாக இருக்கும் நீங்கள் பாத்ரூமில் கூட ஒரு பாக்ஸில் போட்டு வைத்து குளிக்கும் போது நன்றாக தேய்த்து ஸ்கிரப் செய்து குளிக்க வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து உபயோகப்படுத்தி பாருங்கள் நன்றாக உங்களுடைய தோல் கலர் கொடுக்கும்.
நன்றாக பளபளப்பு கொடுக்கும். பாட்டிலிங போட்டு ஒரு ஸ்பூன் வைத்து உபயோகப்படுத்துங்கள். கையில் எடுக்கக்கூடாது, எடுத்தீர்கள் என்றால் விரைவில் பங்கஸ் ஃபார்ம் ஆகிடும். இதை நீங்கள் பாத்ரூமில் ஒரு இடத்தில் வைத்து சோப்பு போட்டு குளித்த பின்பு உடம்பு ஃபுல்லாவே தேய்ச்சு குளிக்கலாம். பீர்க்கங்காய் நார் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வந்தால் ஒரு மாதத்தில் கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.
இந்த பவுடரை எப்படி யூஸ் பண்ணனும் என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் தேவையான அளவுக்கு எடுத்து அதில் தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்துகலாம். ரோஸ் வாட்டர், அலோவேரா ஜெல் சேர்த்துக்கலாம். இதையெல்லாம் சேர்த்து பீர்க்கங்காய் நார் வைத்து தேய்த்து குளிக்கலாம்.
சோப்பு போட்டு குளித்த பின்பு இந்த பவுடரை நீங்கள் போட்டு நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்றாக மசாஜ் செய்துவிட்டு குளித்துப் பாருங்கள்.இது எல்லாம் முயற்சி செய்வதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பாத்துருங்கள். ஏன் என்றால் எல்லா ஸ்கின் டைப்பும் சூட் ஆகாது சிலருக்கு அலர்ஜி கொடுப்பது போல் ஏதாவது பொருள் இருக்கலாம்.
அதனால் நீங்கள் இதை உபயோகப்படுத்துவதற்கு முன்பு ஒரு பேஸ்ட்டு அதாவது காதுக்கு கீழே லைட்டா கொஞ்ச நேரம் போட்டு பாருங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இதை நீங்கள் முகத்தில் போடுவது எப்படி என்றால் கீழே இருந்து மேல் நோக்கி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கையில் நன்றாக தடவி விட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடம் விட்டு அது ஓரளவுக்கு காய்ந்த பிறகு நன்றாக மசாஜ் பண்ண வேண்டும். மசாஜ் செய்து பீர்க்கங்காய் நார் வைத்து நன்றாக தேய்த்து குளித்துப் பாருங்கள். கண்டிப்பாக சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.