இந்த 7 கனவுகள் வந்தால் சீக்கிரம் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி – இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டம் வருவதற்கான அறிகுறிகள்|கனவு பலன்|Dream.
அதிகன் தமிழ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டம் வருவதற்கான அறிகுறிகள் கனவு பலன்கள் தீபம் எறிவது போல், மோதிரம், காதணி, தங்கம், பால் குடிப்பது போல், பாம்பு,தாமரை மலர் போன்றவை கனவில் வந்தால் அதிர்ஷ்டத்தை குறிக்கும் கனவுகளாகும்.
கனவு சாஸ்திரத்தில் ஒவ்வொரு கனவிற்கும் சில அர்த்தம் இருக்கிறது
கனவில் காணும் அனைத்துமே உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் நாம் காணக்கூடிய கனவில் சில விஷயங்கள் பணவரவோட அறிகுறியாக கருதப்படுகிறது. கனவு உலகமானது நிஜ உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் தூங்குறப்போ இந்த கனவு உலகத்துக்கு போறோம் சில சமயம் நமக்கு வரக்கூடிய கனவானது நம்மளுடைய ஆழ்மனதோட எண்ணமாக இருக்கலாம் ஆசையாகவும் இருக்கலாம். ஆனால் நாம் காணக்கூடிய ஒவ்வொரு கனவும்நனவாகும் என்ற எந்த ஒரு அவசியமும் கிடையாது. கனவு சாஸ்திரத்தின் படி நாம் தூங்கும் போது காணக்கூடிய சில கனவுகள்
எதிர்காலத்தில் பணக்காரர் ஆகப்போவதை குறிக்கக்கூடிய கனவுகளாகவும் இருக்கிறது. கனவு அறிவியல் படியும் நாம் காணக்கூடிய சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளோட அறிகுறியாகவும் சொல்லப்படுகிறது. சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவும் சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும்.
இப்போது ஒருவரது கனவில் எந்தெந்த விஷயங்களை பார்த்தால் பணக்காரர் ஆகவேண்டும் என்ற அவருடைய கனவு நனைவாகும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
தீபம்
உங்களுடைய கனவில் தீபம் எரிவது போல் நீங்கள் கனவு கண்டீர்கள் என்றால் அது மங்களகரமானதாக சொல்லப்படுகிறது. அதுவும் கனவில் விளக்கை காண்பது என்பது உங்களை தேடி நிறைய பணம் வரப்போகிறதை குறிக்கக்கூடிய அறிகுறியாக தான் பார்க்கப்படுகிறது.
காதணிகள்
நீங்கள் தூங்கும்போது காதணிகள்அதாவது காதில் போடக்கூடிய தோடு கனவில் வந்தால் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை பெற போகின்றீர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த கனவு வந்த நாளிலிருந்து உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் தவற விடாமல் பயன்படுத்தி முயற்சி செய்தீர்கள் என்றால் நிச்சயமா கூடிய விரைவில நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களை வந்து தேடி வரும்.
மோதிரம்
கனவு சாஸ்திரத்தின் படி நீங்கள் உங்களுடைய கனவில் மோதிரம்அணிவதை கண்டால் அல்லது மோதிரத்தை பார்த்தீர்கள் என்றால் அது மங்களகரமானதாக சொல்லப்படுகிறது. கனவில் மோதிரம் வருவது என்பது லக்ஷ்மி தேவியோட அருள் உங்கள் மீது உள்ளது என்று சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் உங்களை தேடி மிகப்பெரிய பணத்தொகை வருவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
பாம்பு
பொதுவாக கனவில் பாம்பு வந்தது என்றால் எல்லோருக்கும் பயம் வந்து விடும்.ஆனால் ஒருவருடைய கனவில் பணம் வைக்கக்கூடிய பெட்டிக்கு பக்கத்தில் பாம்பை பார்த்தார்கள் என்றால் அது பணம் உங்களைத் தேடி வர போகிறது என்பதற்கான அறிகுறியாக தான் கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
பால் குடிப்பது போல்
நீங்கள் உங்களுடைய கனவில் பால் குடிக்கிறது மாதிரி கனவு கண்டீர்கள் என்றால் உங்கள் கையில் பணம் அதிகமாக வந்து சேர போகிறது நீங்கள் பணக்காரர் ஆவதற்கான வாய்ப்புகள் உங்கள தேடி வரப்போகிறது என்று இதற்கான அர்த்தம்.
தங்கம்
கனவில் தங்கத்தை காண்பது மங்களகரமான செயலாக சொல்லப்படுகிறது. தங்கம் லட்சுமிதேவி இருக்கக்கூடிய ஒரு பொருள் இந்த தங்கம் ஒருத்தருடைய கனவில் வந்தது என்றால் அவங்களுக்கு லட்சுமி தேவியோட அருள் எப்போதுமே உள்ளது. அவுங்க விரைவில பணக்காரர் ஆகப் போகிறார் என்று அர்த்தம்.
தாமரை மலர்
இறுதியாக இதுபோன்ற கனவுகள் உங்களுக்கு வந்தாலும் நீங்கள் சீக்கிரமாக பணக்காரர் ஆயிடுவீங்க. ஒருத்தருடைய கனவில் ரோஸ் தாமரை பூவை பார்த்தீர்கள் என்றால் லக்ஷ்மி தேவியோட அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது. ரோஜா தாமரை இது இரண்டுமே லக்ஷ்மி தேவிக்குரிய மலர்கள் இந்த இரண்டு மலர்களையும் நீங்கள் கனவில் பார்த்தால் நிச்சயமாக உங்களை தேடி ராஜயோகம் வரப்போகிறது என்று அர்த்தம்.
நாம் காணும் கனவுகளுடைய பலன்கள் நேரத்தை பொருத்தே அமையும். இரவோட முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும் விடியற்காலை அதாவது நாலாவது ஜாமத்தில் காணும் கனவு பத்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக எல்லா கனவுகளும் பலிப்பது கிடையாது. சில கனவுகள் வந்து மறைந்து விடும். சில கனவுகள் மனதில் பசுமரத்தாணி போல பதிஞ்சிடும் அதிலும் சிலருக்கு நடக்க இருக்கக்கூடிய நிகழ்வுகள் அதன் தொடர்பான விஷயங்கள் கனவில் முன்னதாகவே காட்டிவிடும்.
பணக்காரர் ஆகப்போவதை உணர்த்தக்கூடிய ஏழு கனவுகளுடன் எடுத்துச் சொல்லி இருக்கிறது. இந்த மாதிரி கனவு மட்டும் வந்தால் போதுமா இந்த கனவுகள் எல்லாம் கண்டால் நாம் பணக்காரர் ஆயிடுலாமா என்று சில பேர் கேட்கலாம் அது மட்டும் கிடையாது கனவு கண்டால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் முயற்சியும் நம்மிடம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒருவர் பணக்காரராக வேண்டும் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். இந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டம் வருவதற்கான அறிகுறிகள்
அவர்களுக்கு மட்டும் தான் லட்சுமி தேவியோட அருள் முழுமையாக கிடைக்கும். நீங்கள் பணக்காரர் ஆகவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கனவு காண்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கடின உழைப்பையும் நீங்கள் பார்க்கக்கூடிய வேலையில் உண்மையான எண்ணத்தோடும் நேர்மையான எண்ணங்களோடும் மற்றவர்களை புண்படுத்தாமலும் நீங்கள் வேலை செய்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கான அனைத்து விதமான வசதி வாய்ப்புகளும் லட்சுமி தேவியோடு அருளால் கிடைக்கும்.