நாம் வீடு கட்டுவதை எந்தெந்த இடங்களில் கட்டக் கூடாது அப்படின்னு பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு அருகில் வீடு காட்டாதீர்கள்
வாஸ்துபடி ஒரு வீட்டைக் கட்டி முடிக்கிறது தான் சிறந்தது. அப்பதான் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவும். நேர்மறையாற்றலை கொண்டு நம்முடைய கடவுளைப் பூஜிக்கயில் தான் எல்லாம் நெனச்சது நிறைவேறும். சகல சௌபாக்கியமும் நம்ம வீட்டுக்கு வந்து சேரும். வீடு கட்டும்போது எந்த இடத்தில் சமையல் ரூம் இருக்கணும் சாமி ரூம் இருக்கணும் பெட்ரூம் இருக்கனும் அப்படின்னு அந்த அமைப்பு இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அந்த அளவீடுகள் எல்லாம் சரியா இருந்தால் தான் நமக்கு நல்லது நடக்கும். இல்லையென்றால் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வீட்டை எந்த இடத்தில கட்டக் கூடாது அப்படின்னு சில விதிமுறைகள் எல்லாம் சொல்லி இருக்காங்க. அது என்னென்ன அப்படின்னு பார்க்கலாம்.
வீடு வாங்கிட்டோம் இருக்கிறோம் அப்படின்னா அதுல நாம் ஒன்னும் பண்ண முடியாது. ஆனால் புதுசா ஒரு வீடு வாங்க போறோம் அப்படின்னா அந்த வீடு வாங்கறப்ப இதெல்லாம் நாம் பார்த்துட்டு வாங்கலாமே. ஏன் தெரிஞ்சே நாம் இந்தத் தவறுகளைச் செய்யணும். வாங்கறதுக்கு முன்னாடி இது சரியா இருக்கா இந்த இடத்தில் இப்படி இருக்கான்னு பாத்துட்டு வாங்குவோம். ஆனால் வாங்கிட்டோம் குடியிருக்கோம் அப்படின்னா அதுக்காகப் போட்டு நம்ம மனச போட்டு குழப்பிக்க வேணாம்.
குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு நமக்கு எந்தப் பிரச்சினையும் வராது அப்படின்னு நம்பிக்கையோடு இருங்க எந்தக் கஷ்டமும் வராது. ஆனால் புதுசா வீடு வாங்குறவங்க இதெல்லாம் பார்த்துட்டு இந்த இடத்துல வீடு வாங்கலாமான்னு யோசிச்சிட்டு வாங்குங்க. குறுக்கான ரோட்டிற்கு அருகில் இந்துக்களோட புனித நூலான பவிஷய புராணத்துல குறுக்கான ரோட்டுக்கு அருகில் வீடு கட்டக் கூடாது அப்படின்னு சொல்லப்பட்டுள்ளது. இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வீட்டைக் கட்டுவது வசிப்பது என்பது சரிவராது.
அது வந்து உங்களுடைய திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சொல்லுவாங்கல்ல முட்டு சந்துல வீட்டை வாங்காத அப்படிம்பாங்க. சில பேர் வீட்டில் குடி இருக்கோம் அந்த மாதிரி இடத்துல எல்லாம் ஒரு வேல் மாதிரி கல்லுல வச்சு வழிபடுவாங்க பார்த்திருப்பீங்க. அதுதான் இதுல சொல்லி இருக்காங்க இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில வீட்டை வாங்க கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க.
மருத்துவமனைக்கு அருகில்
வீடு வாங்க போறோம் அப்படின்னா வீடு நீங்க வாங்குறப்ப மருத்துவமனை பக்கத்திலேயே இருக்கிற மாதிரி ஏதாவது ஒட்டுன மாதிரி இருக்கிற மாதிரி வாங்காதீங்க. இதெல்லாம் பார்க்க முடியுமா நாம் ஹாஸ்பிடல் மேலேயே கூட இப்ப எல்லாம் டாக்டர்ஸ் எல்லாம் குடியிருக்காங்க அப்படின்னு நினைப்பீங்க. இதுல சொல்லப்பட்டுள்ள தகவலைத் தான் நான் சொல்றேன்.
இந்த இடங்களுக்கு அருகில் வீடு காட்டாதீர்கள்
மருத்துவமனைக்கு அருகில் ஏன் வீடு வாங்க கூடாது ன்னு நாம் சயின்டிபிக்கா யோசிச்சு பார்த்தோம்னா கிருமிகள் காய்ச்சல் நோய் தொற்றுகள் இதெல்லாம் நமக்கு வந்து அடிக்கடி நமக்கு அந்த ஹாஸ்பிடல் பக்கத்தில் இருந்தால் பரவக்கூடும் அப்படிங்கற காரணத்தாலையும் இருக்கலாம். அந்த ஹாஸ்பிடல் இருக்கிறவங்க ஏதாவது இறக்க நேரிடுது அப்படின்னா அந்தச் சவுண்டு அழுகை இதெல்லாம் வந்து வெளிய கொண்டு போறது பார்க்கிறது இதெல்லாம் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். அதனாலயும் இந்த இடத்தில் வீட்டை வாங்காதீங்கன்னு சொல்லி இருக்கலாம்.
பாலடைந்த இடத்திற்கு அருகில்
ஏதாவது ஒரு வீடு பாலடைந்து போய் ரொம்ப காலமா பூட்டியே இருக்கு அப்படின்னா அந்த இடத்தில் வீடு கட்டுவது அப்படிங்கறது எதிர்மறை ஆற்றல் இழுத்துக் கொண்டு வரும் அதை வந்து பெரிய வாஸ்து தோஷமாகவே சொல்லப்படுகிறது. இடிந்த நிலையிலோ பாலடைந்த நிலையில் இருக்கிற வீட்டை வாங்காதீங்க. அதற்குப் பக்கத்துலயும் அங்க ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்திருக்கா அப்படின்னு தெரிஞ்சுகிட்டு அதற்கு அருகில் வீடு வாங்கினீங்கன்னா வாங்குங்க.
மதுபான கடைக்கு அருகில்
வாஸ்து சாஸ்திரப்படி மதுபான கடைக்கு அருகிலையும் வீடு கட்ட கூடாது. இந்து மதத்தின்படி கெட்ட சக்தி மற்றும் எதிர்மறை ஆற்றலை மதுபானமும் அசைவ உணவுகளும் ஈர்க்கக்கூடும். அதனால் இந்த மாதிரி இடத்தில் வீடு இல்லாமல் சற்று தொலைவில் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்.
இறைச்சி கடைக்கு அருகில்
நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா இந்த மதுபானமும் இறைச்சியும் எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கக் கூடியது. அதனால் வீடு இறைச்சி கடைக்கு அப்பால் இருப்பதுதான் நல்லது. இறைச்சி கடையிலிருந்து வரக்கூடிய எதிர்மறை ஆற்றலானது நமக்கு அருகில் வசிப்பவர்களையும் பாதிக்கக்கூடும். அதனால் வீட்டில் வறுமையை ஏற்படுத்தும். மகிழ்ச்சியானது தடைபடலாம். அதனால அங்கே வாங்க கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க.