(Unhealthy Food Combo| Bad Food Combinations)
ஆரோக்கியமற்ற உணவுச் சேர்க்கை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கவும் நல்ல எனர்ஜியாக வேலை செய்யவும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோம். ஆனாலும் காலை உணவைச் சாப்பிட்ட உடனையே லேசான சோர்வு நல்ல தூக்கம் வருவது போன்று உணர்வது, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று வலியெனப் பலவிதமான தொந்தரவுகளால் நம் அனைவரும் அவதிப்படுகிறோம்.
இதற்கு என்ன காரணம் என்றால் நாம் ஆரோக்கியமானது என நினைத்து சாப்பிடக்கூடிய உணவுகளே இதற்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் சாப்பிடும்போது ஒரு சில தன்மை கொண்ட உணவுகளை வேறுசில தன்மை கொண்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் முதல் அலர்ஜி ஃபுட் பாய்சன் எனப் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு கூடக் காரணமாக அமைகிறது என ஆயுர்வேதத்தில் சொல்கிறார்கள்.
ஐந்து தவறான உணவு பொருத்தங்கள் (Wrong Food Combination) என்ன என்பதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
ஒன்று: பால் மற்றும் வாழைப்பழம்
இரண்டுமே ஆரோக்கியமான உணவு என நம் எல்லோருக்குமே தெரியும். இந்த இரண்டையும் சேர்த்து பனானா மில்க் ஷேக் ஆக நம்மில் பலருமே விரும்பி சாப்பிடுவோம். குறிப்பாகப் பாடி பில்டிங் பண்றவங்க போஸ்ட் ஒர்க்கவுட் ட்ரிங்கா இந்தப் பனானா மில்க் ஷேக் தான் ரெக்கமண்டடா சாப்பிடுவாங்க. பால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு உணவு என்றாலும் கூட இதனை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மந்த நிலை உண்டாகும்.
இதற்குக் காரணம் பாலில் 80% கசின் என்னும் மிக மெதுவாக ஜீரணமாகக்கூடிய புரோட்டின் இருக்கிறது. வாழைப்பழம் வேகமாக ஜீரணமாகும் தன்மை கொண்டது. இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது டைஜஷன் மெட்டபாலிசம் அஃபெக்ட் ஆகுறது மட்டுமில்லாமல் வயிற்றில் நச்சுக்கள் அதிகரித்து உடலில் நியூக்கர்ஸ் என்னும் சளியை உண்டாக்கும். இதன் விளைவாகக் கோல்ட் காப் சைனஸ் அலர்ஜியெனப் பல்வேறு தொந்தரவுகள் உண்டாவதற்கு காரணமாக இருக்கும். அதனால் பாலுடன் வாழைப்பழம் மட்டுமல்ல எந்த ஒரு பழத்தையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது கிடையாது.
இரண்டு: தயிர் மற்றும் மீன்
நிறைய பேருக்குத் தயிர்சாதத்துடன் ஃபிஷ் பிரை வைத்து சாப்பிடுவது ரொம்பவே விருப்பமான ஒன்று. ஆனால் ஆயுர்வேத அடிப்படையில் தயிர் வயிற்றுக்கு குளுமையை கொடுக்கக்கூடியது. மீன் உஷ்ணத்தை கொடுக்கக்கூடிய உணவு. இரண்டுமே அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகள். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலில் வாத தோச சமநிலை மாற்றங்கள் ஏற்பட்டு செரிமான மந்த நிலை உண்டாகும். இதன் விளைவாக வயிற்றில் டாக்ஸின் என்னும் நச்சுக் கழிவுகள் அதிகமாவதோடு ஃபுட் அலர்ஜி உண்டாகுறதுக்கும் வாய்ப்புகள் உண்டு. தயிருடன் மீன் மட்டுமல்ல எந்த ஒரு அசைவ உணவையும் எடுப்பது நல்லது கிடையாது.
மூன்று: வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி
இதையும் படிக்கலாமே: கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
வெயிட் லாஸ்க்காக டயட் பாலோ பண்றவங்களும் உடல் ஆரோக்கியத்தை சற்று மேம்படுத்த விரும்புவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு வெஜிடபிள் சாலட். வெஜிடபிள் சாலட்டில் பிரதானமாக இருக்கக்கூடியது வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியாகத் தான் இருக்கும். ஆயுர்வேதத்தின் படி வெள்ளரிக்காய் 90% நீர்ச்சத்து நிறைந்த அல்கலைன் என்று சொல்லக்கூடிய காரத்தன்மை கொண்ட காய்கறி. தக்காளி மாலிக் மற்றும் சிட்ரிக் ஆசிட் நிறைந்த அமிலத்தன்மை கொண்ட ஒரு பழம்.
இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து ஆசிட் ரிப்ளக்ஸ் என்னும் அமில எதுக்களிப்பு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது மட்டுமில்லாமல் வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய ஒரு சில என்சைன்ஸ் தக்காளியிலிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் சியை தடுக்கும். அதனால் சாலட்டுகள் செய்யும்போது வெள்ளரிக்காய் சேர்த்தால் தக்காளி சேர்க்கக் கூடாது தக்காளி சேர்த்தால் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடக் கூடாது.
நான்கு: டீ மற்றும் பால்
Healthy Snacks for Adults:
Yogabar Multigrain Energy Bars 338Gm Pack (38G x10) – Healthy Diet with Fruits, Nuts, Oats and Millets, Gluten Free, Crunchy Granola Bars, Packed with Chia and Sunflower Seeds (10 Bars)
டீயுடன் பால் சேர்த்து மில்க் டீயாகக் குடிக்கும் பழக்கம் நம் எல்லோருக்கும் உண்டு. டீயில் கேட்டசீன்ஸ் போன்ற பாலிப்பினால் காப்பர் அதிக அளவில் இருக்கிறது. இது நம் உடலில் சிறந்த ஒரு ஆன்டிஆக்சிடன்டாகச் செயல்படுகிறதை விடப் பல்வேறு விதமான கேன்சர் வராமல் தடுக்கும். ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் பிளாக் டீக்கு உண்டு.
ஆனால் இதனுடன் பால் சேர்க்கும்போது பாலில் இருக்கக்கூடிய புரதங்கள் பிளாக் டீயில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டை மட்டுப்படுத்தும். அதனால் டீயுடன் பால் சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு உடனடியாக எனர்ஜி கிடைக்குமே தவிர பிளாக் டீயிலிருந்து கிடைக்கக்கூடிய உண்மையான சத்துக்களும் அதன் பயன்களும் நமக்குக் கிடைக்காது. கூடுமானவரைக்கும் பிளாக் டீயை பால் சேர்க்காமல் குடிப்பது நல்லது.
ஐந்து: உணவு மற்றும் பழங்கள்
ஆரோக்கியமற்ற உணவுச் சேர்க்கை சாப்பிடும்போது பழங்கள் சேர்த்து சாப்பிடுவதுசாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது ஒரு முற்றிலும் தவறான பழக்கம். ஏன் என்றால் பழங்கள் ஒரு முழுமையான உணவு இது மட்டுமில்லாமல் எளிதில் நேரடியாகவே சிறுகுடலுக்குச் சென்று ஜீரணமாகும் தன்மை கொண்ட உணவு. ஆனால் நாம் சாப்பிடக்கூடிய பிற தானியங்கள் காய்கறிகள் பயிர் வகைகள் அசைவ உணவுகள் எல்லாமே செரிமானம் ஆகக்கூடிய நேரமும் அதன் தன்மையும் வேறு.
பழங்களைப் பிற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும்போது வயிற்றில் செரிமான சீர்குலவை ஏற்படுத்துவதோடு அசிடிட்டி கேஸ் இன்டேஜர் போன்ற தொந்தரவுகளையும் ஏற்படுத்தும். இது மட்டுமில்லாமல் நாம் சாப்பிட்ட உணவின் மூலமாகக் கிடைக்கக்கூடிய பலவிதமான சத்துக்களும் நமக்குக் கிடைப்பது தடைபடும். அதனால் காலை மதியம் இரவு உணவு வேலைகளில் பழங்கள் சாப்பிடக் கூடாது. காலை வெறும் வயிற்றிலோ அல்லது உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போதான் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை ஆயுர்வேதத்தில் சொல்லி இருக்கிறார்கள்.