ஆயுசுக்கும் மூட்டுவலி முழங்கால் வலி எலும்பு தேய்மானம் கால்சியம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்காது.

 

ஆயுசுக்கும் மூட்டுவலி முழங்கால் வலி எலும்பு தேய்மானம் கால்சியம் 

ஹீமோகுளோபின் குறைபாடு இருக்காது.



சிலருக்கு கொஞ்ச நேரம் வேலை செய்தாலே போதும் ஒவ்வொரு மூட்டுகளிலுமே வலி, வீக்கம், சோர்வு அதிகமாக இருக்கும். படியில் கூட அவர்களால் ஏற முடியாது அதிகமாக மூச்சு இறைக்கிற மாதிரி இருக்கும். இன்னும் சில பேருக்கு இரவில் தூங்கும்போது பின்னங்கால் நரம்புகள் பிடித்து இழுப்பது போல் இருக்கும். தசை பிடிப்பு அதிகமாக இருக்கும் இல்லையென்றால் ஒரு கை கால் மட்டுமே மறத்துப் போகிற மாதிரி கூட இருக்கும். இன்னும் சில பேருக்கு பசி இருக்கவே இருக்காது.

காரணமே இல்லாமல் உடல் எடை அதிகரிப்பும் இருக்கும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும் உங்களால் வேலை செய்யவே முடியாது. தூக்கம் அடிக்கடி வருகிறது போல் இருக்கும். ஆனால் போய் படுத்தால் தூக்கமும் வராது. இந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் நீங்கள் 30 வயதை தாண்டும் போது இருக்கிறது என்றால் நிச்சயமாக உங்களுடைய உடம்பில் கால்சியம் குறைபாடு இரும்புச்சத்து குறைபாடு விட்டமின் பி12 விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்.

அது மட்டும் இல்லாமல் உங்களுடைய உடம்பில் ரத்தம் சுத்தம் இல்லாமல் இருக்கிறது ஹீமோகுளோபின் குறைபாடு அதிகமாக இருக்கிறது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். இது அனைத்தையும் சரி செய்து நம்முடைய நரம்பு மண்டலத்தை சீர் செய்து நம்முடைய எலும்பு மற்றும் நரம்புகளுக்கு நல்ல  உறுதியை கொடுத்து நம்முடைய ரத்த ஓட்டத்தை சீர் செய்யக்கூடிய ஒரு அருமையான பவுடர் எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


கருஞ்சீரகம்

இந்த பவுடரை இரவு படுக்க போகும் முன் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும் அவ்வளவு மருத்துவ பலன்கள் உங்களுக்கு இரண்டே வாரத்தில்கிடைக்கும். எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இதில் அளவுகள் ரொம்ப ரொம்ப முக்கியம். மூன்று டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஓமம் நாம் முறுக்கு செய்ய பயன்படுத்துவது கூடவே மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்க்கு வெந்தயம், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்க்கு கருஞ்சீரகம் சேர்த்துக்கலாம். இப்பொழுது இதில் அளவுகள் ரொம்ப முக்கியம். மூன்று பங்கு ஓமம் மூன்று பங்கு வெந்தயம் இரண்டு பங்கு  கருஞ்சீரகம்.   இது எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளலாம்.

நாம் பயன்படுத்தியிருக்கும்  கருஞ்சீரகத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. கருஞ்சீரகம் நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உடனே அதிகரிக்க வைக்கும். ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவை கட்டுக்குள் வைக்கும், இதய நோய் புற்றுநோய் வராமல் தடுக்கும்.  இதில் இயற்கையாகவே நல்ல கொழுப்பு இருக்கிறது.


ஓமம்


நம் உடம்புக்கு தேவையான நல்ல கொழுப்பை கொடுக்கும். உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும் இதில் முக்கியமாக இரும்புச்சத்து கால்சியம் சத்துக்கள் இருக்கிறது அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடெண்ட் பண்புகளும் இருக்கிறது. அதனால் நம்முடைய நரம்புகளுக்கு  வலுவை சேர்க்கும். நரம்புகளில் இருக்கக்கூடிய அழுக்குகளை சரி செய்யும். ரத்தத்தை  சுத்திகரித்து புது ரத்தத்தை உடம்பில் ஊற வைத்து உடம்பில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். ஒவ்வொரு மூட்டுகளிலும் இருக்கக்கூடிய அந்த வலி வீக்கத்தை  சரி செய்யும்.

ஆனால் கருஞ்சீரகத்தை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். இது  நிறைய நன்மைகள் தருகிறது  என்பதற்காக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது. இதை நாம் ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். தீயை ரொம்ப வேகமாக வைத்து கருக விட கூடாது. மிதமான தீயில் வைத்து  மூன்று அல்லது நான்கு நிமிடம் மட்டும் வருத்தால் போதுமானது. நன்றாக வாசனை வரும், நிறம் மாறி வரும். அதுவரைக்கும் நாம் இதை வறுக்க வேண்டும். 

இதில் நாம் ஓமம் சேர்த்திருப்பதினால்  ஓமம் மலச்சிக்கல் அஜீரண கோளாறு வயிற்றுப் பொருமல் வாயு தொந்தரவு  அனைத்தையும் சரி செய்யும். இதில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் இருக்கிறது.

 வெந்தயம்


வெந்தயத்தில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் இருக்கிறது. இரும்பு சத்துக்கள் இருக்கிறது அதைவிட அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.

சக்கரையினுடைய அளவை கட்டுக்குள் வைக்கும் ரத்தத்தை நன்றாக சுத்தப்படுத்தும் இதில் முக்கியமானது வெந்தயம் பயன்படுத்தியிருக்கோம். ஓமம், கருஞ்சீரகம் இரண்டுமே உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும். வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தும் போது அது நம்முடைய உடம்பில் உள்ள தட்பவெப்பநிலையை சமமாக வைப்பதற்கும் பயன்படுகிது.

சிறிது சூடேற்றி ஒரு வாசனை வரும் அவ்வளவுதான் சிறிது நிறம் மாறும்.அதனுடன் தீயை அணைத்து விட்டு ஆற‌விட வேண்டும்.  நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடராக அறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பவுடரை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு காற்று புகாமல் ஈரப்பதம் இல்லாமல்  பயன்படுத்தலாம்.

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இரவு எப்பொழுதும் போல் சாப்பாடு சாப்பிட்ட பிறகு  அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கடந்த பின்னர்  போய் படுக்கப் போவீர்கள்.  படுக்க போவதற்கு ஒரு பத்து நிமிடத்திற்கு முன் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீர் அதாவது தண்ணீர் ரொம்ப சூடாகவும் இருக்க கூடாது ரொம்ப சில்லென்றும் இருக்க கூடாது.



அந்த தண்ணீரில் ¼ ஸ்பூன் அளவிற்கு எடுத்து தண்ணீரில் கலந்து சாதாரணமாக குடிக்கலாம். இந்த பவுடரை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது. இந்த பவுடர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

 

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தான் ஆபத்து சரியான அளவுகளுடன் இதை நீங்கள் பயன்படுத்தும் போது உடம்புக்கு நன்மை தான் தரும். இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது நரம்பு பிரச்சனை நரம்பில் இருக்கக்கூடிய அடைப்பு ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது அனைத்தையும் சரி செய்து விடும். ஒவ்வொரு மூட்டுகலிளுமே வறட்சி இருக்கும் அதனாலே கூட மூட்டு வலி வீக்கம் அதிகமாக இருக்கும். பாத எரிச்சல் அதிகமாக இருக்கும். அது அனைத்தையும் சரி செய்யும். அதே மாதிரி கால்சியம் குறைபாடு விட்டமின் பி2 குறைபாட்டையும் இது சரி செய்யும்.

முக்கியமாக உங்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறதினால் சிலருக்கு  சரும பாதிப்புகள் ஏற்படும். அந்த சரும பாதிப்பையும் இது வந்து சரி செய்யும்

 சில பேருக்கு காரணமே இல்லாமல் சருமம் அறித்துக்கொண்டே இருப்பது போல் இருக்கும். சோரியாசிஸ்  மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். பொதுவாக ரத்தம் சுத்தம் இல்லாமல் இருந்தால் தான் சரும அலர்ஜி மாறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதினால் உங்களுக்கு  அந்த இறைப்பை சம்பந்தமான பிரச்சனைகள், சளி சம்பந்தமான பிரச்சனைகள், இருமல் மாதிரி பிரச்சினைகள் எதுவும் இருக்கவே இருக்காது.


இதை யார் சாப்பிடக்கூடாது என்றால் கர்ப்பத்துக்கு முயற்சி செய்ய கூடிய பெண்கள் சாப்பிடக்கூடாது. கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்களும் சாப்பிடக்கூடாது ஏன் என்றால் கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய  அழுக்குகளை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை  கருஞ்சீரகத்துக்கு உண்டு. கர்ப்பபைக்கு நல்ல ஒரு வலுவையும் சேர்க்கும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகளையும் சரி செய்யும். அதே சமயத்தில் கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் கர்ப்பத்துக்கு முயற்சி செய்ய கூடிய பெண்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

 மற்றவர்கள் அனைவரும் தாராளமாக சாப்பிடலாம். தாராளமாக எவ்வளவு நாட்களுக்கு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் குறைவான அளவுகளுடன் சாப்பிடலாம். எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணப்படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து ஓடுவார்கள் என்று சொல்வார்கள். ஏன் என்றால் இந்த மூன்று பொருட்களையும் நாம் சீரான அளவுகளுடன் தினமும் பயன்படுத்தும் போது நமக்கு எந்த விதமான நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக அழகாக வாழ முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *