ஆண்களின் முகம் அழகாய் மாற சூப்பரான டிப்ஸ்.
பெண்களோட சருமத்துக்கும் ஆண்களோட சருமத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் அவங்களோட சருமத்தை எப்படி எல்லாம் பராமரிக்கணும். சருமத்தோட தன்மை வேறுபடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சருமத்திற்கான பராமரிப்பு விஷயங்கள் வெவ்வேறாக இருக்கின்றது. ஆனால் ஆண்கள் தங்களுடைய சருமத்தை எப்படி எல்லாம் பராமரிக்க வேண்டும் எந்த மாதிரியான சரும பராமரிப்பு பொருட்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஆண்களோட சருமத்திற்கும் பெண்களோட சருமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கு இந்த அடிப்படை விவரங்கள் கூட தெரியவில்லை. நிறைய ஆண்கள் தங்களுடைய சருமத்தை பெண்களுடைய சருமத்தை போலவே பராமரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களுக்கு வரக்கூடிய சரும பிரச்சனைகளும் ஆண்களுக்கு வரக்கூடிய சரும பிரச்சனைகளும் ஒன்றாக இருப்பதில்லை. பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிப்பதற்காக சருமத்தில் சருமகிழ் பராமரிப்பு, பருக்கள் வராமல் தடுக்கிறது. எண்ணை சருமத்தை தவிர்ப்பதற்கு நிறைய விஷயங்களை ஃபாலோ பண்ணுகிறார்கள்.
ஆண்கள் சேவிங் செய்யும் போது சருமத்துக்கு பாதிப்பு இல்லாமல் செய்யணும். அடுத்து வெளியே போகும்போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். சரும துளைகளை சுத்தம் செய்தல், தாடி மீசை பராமரிப்பு விஷயங்கள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும்.
ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்ட் ரோஷன் ஹார்மோன் சுரப்பால் ஆண்களோட சருமம் பெண்களோட சருமத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது அதனால் ஆண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிப்பதற்கு நான் சொல்லக்கூடிய இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதையும் படிக்கலாமே ;ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
ஆண்கள் சந்திக்கக்கூடிய பொதுவான சரும பிரச்சனைகள் என்னவென்றால் சேவிங் செய்யறதினால் ஏற்படும் சருமகாயங்கள், ஸ்கின்ல எரியுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். அடுத்து முடி வளர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தாடி பகுதியில் பாக்டீரியாவோ அல்லது பூஞ்சை தொற்று ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து முகத்தில் பருக்கள் வரலாம் அப்புறம் சருமத்தில் அதிகமாக எண்ணெய் சுரக்கக்கூடிய பிரச்சனை நிறைய நபர்களுக்கு இருக்கிறது. சருமத்துளைகள் பெரிதாக இருந்ததென்றால் நம்மளுடைய சருமத்துல நிறைய சரும துளைகள் காணப்படும். இந்த சரும துறைகளில் தான் வேர்வை வெளிவரும்.
அடுத்து எண்ணெய் சுரப்பு அதிகம் ஆகிவிட்டால் சரும துளைகள் மூலம் வெளியேற்றுகிறது ஆண்களுக்கு பெண்களை விட பெரிய சருமத்துளைகள் இருக்கும். இந்த பெரிய சருமதுளைகளால் முகப்பருக்கள் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சரும துளைகள் தூசிகள், அழுக்குகள், எண்ணை பிசுக்கு, அடைப்பு போன்றவற்றால் மூடப்பட்டு முகப்பருக்கள் அதிக அளவில் உண்டாக்கும். அதனால் ஆண்கள் தங்களுடைய முகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களோட டெஸ்ட் ரோஷன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கிறதால் உங்களுடைய
முகத்துக்கு எண்ணை பசையை போக்கக்கூடிய ஃபேஸ் வாஷ்களை தேர்ந்தெடுப்பது ரொம்ப அவசியமாகிறது. அதோட வீட்டிலேயே ஸ்க்ரப் செஞ்சுகிறது ரொம்பவே நல்லது அதே நேரத்தில் எண்ணை சருமம் இருக்கக்கூடிய ஆண்களுக்கு சருமத்துளைகள் கொஞ்சம் பெரியதாக இருக்கிறதால் எண்ணெய் சுரப்பு அதிகமா இருக்கும். இதனால் ஆண்கள் பெண்களை காட்டிலும் பளபளப்பான சருமத்தை பெற்றிருப்பார்கள். சருமத்தில் இருக்கக்கூடிய எண்ணை பசையை நீக்குவது என்பது அவர்களுக்கு ரொம்பவே கஷ்டமானதாக இருக்கும்.
எண்ணை பசையை சரியாக நீக்கவில்லை என்றால் முகத்தில் முகப்பருக்கள் அதிகளவில் ஏற்படக்கூடிய பிரச்சனையை சந்திப்பார்கள். அதேபோல ஆண்களோட சருமம் பெண்களோட சருமத்தை விட 20 சதவீதத்துக்கும் மேலே அதிக தடிமனாக இருக்கும். ஆண்களோட சருமம் கொஞ்சம் கரடுமுரடாக தான் இருக்கும். பெண்கள் பயன்படுத்தகூடிய சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் எந்த பலனையும் கொடுக்காது. ஆண்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கக்கூடிய சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலனைகொடுக்கும். சில ஆண்களின் சருமம் மிருதுவாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; இரவில் இதை செய்தால் பகலில் முகம் ஜொலிக்கும்.
அவர்களுக்கு சேவிங் செய்யும் போது ஏற்படக்கூடிய காயங்கள் அந்த சருமத்துல எரிச்சலை உண்டாக்கும். ரேஸர் காயங்களும் சரும எரிச்சலும் சருமத்தில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அதிகப்படுத்தும். அதனால் சேவிங் செய்த பிறகு சருமத்தை ஈரப்பதோடு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஆக்டிபாக்டீரியல் பொருட்களை பயன்படுத்துவது சரும எரிச்சலை குறைக்க உதவும்.
நல்ல தரமான ஷேவிங் பொருட்களை தேர்ந்தெடுப்பது நல்லது. நல்ல கூர்மையான சுத்தமான பிளேடுகளை பயன்படுத்தவேண்டும். சேவிங்ஸ் செய்தபின் ஏற்படக்கூடிய கொப்பளங்களை குறைப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும். அதே நேரத்தில் சருமதோட பி எச் அளவை கட்டாயமா பாக்க வேண்டும். ஆண்கள் தங்களுடைய சருமத்தோட பி எச் அளவை பராமரிக்க கூடிய பொருட்களை சரியா தேர்ந்தெடுத்து பயன் படுத்தும் அதே நேரத்தில் ஆண்களுக்கு வயசாகிறது பெரியதாக தெரியாது. பெண்கள் போல ஆண்களுக்கு சீக்கிரம் வயதாகிறது பெரிதாக வெளியில் தெரியாது. காரணம் அவங்களோட சருமம் ரொம்ப தடிமனா இருக்கிறதால். சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் எல்லாம் ரொம்ப குறைவாகவே தெரியும். எனவே ஆண்களின் சருமத்தை சரியான முறையில் பராமரித்து வந்தால் நீண்ட காலங்களுக்கு இளமையாக ஜொலிக்க முடியும்.