ஆடுகள் வளர்ப்பு – ஒரு வருடத்திற்கு ஒரு கோடி வருமானம்.

 

ஆடுகள் வளர்ப்பு – ஒரு வருடத்திற்கு ஒரு கோடி வருமானம்.




ஆடுகள் வளர்ப்பதின் மூலம் சராசரியாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம். இப்போதைய சூழலில் இருப்பதிலேயே அதிக வருவாய் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்புதான். ஆசிரியர்கள் படிக்கும்போது சொல்வார்கள் நீ எல்லாம் ஆடு மேய்க்க தான் லாகின்றி அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்று 100% பொருந்தும் படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என்று வருத்தப்படுபவர்கள் ஆடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம்.



பட்டி:



ஆடு வளர்ப்பும் ஒரு சிறந்த வாழ்வாதாரமாகும் வளர்ந்த ஒரு ஆட்டுக்குட்டிக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க விரும்பும் ஆடுகளுக்கு ஏற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம்.

செம்மறி ஆடாக இருந்தால் நைலான் வலைகளிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் வேலி அமைக்க முடியும். பட்டிக்குள் கிடாக்கள் குட்டிகள் சின்ன ஆடுகள் மற்றும் வளரும் என தனித்தனியாக பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனி கொட்டைகள் அமைக்க வேண்டும்.



இதையும் படிக்கலாமே :ட்ரோன் வாங்க விவசாயிகளுக்கு 4லட்சம் மானியம்.


மேய்ச்சல் நேரம்:



காலை 9 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு கொட்டைகளை சுத்தம் செய்து விட வேண்டும். 11 மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலை புண்ணாக்கு ஊறவைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும் தோட்டங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை குடிக்க விட்டால் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது மிக அவசியம். வெயில் அதிகமாக அடிக்கும் மதிய  நேரத்தில் ஆடுகளை மேச்சலுக்கு விடும்போது சோர்ந்து விடும் அந்த நேரங்களில் ஆடுகளை பட்டியல் அடைத்து விட்டு வேலி மசால். முயல் மசால் மற்றும் கோ ஃபோர் ஆகிய பசுந்தீவனங்களை நறுக்கி போட வேண்டும்.



தீவனம்:



தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்கு பிறகு ஐந்தரை மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்திற்கும் போட வேண்டிய தடுப்பூசிகளை கட்டாயமாக போட்டு வர வேண்டும்.



பருவகாலம்:



எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பருவத்திற்கு வந்துவிடும். இந்த சமயத்தில் தரமான நல்ல கிடாக்களுடன் சேர்த்துவிட வேண்டும்.

ஆட்டுக்கு சினை பருவம் ஐந்து மாதங்கள். இரண்டு மூன்று மாதங்களில் மீண்டும் அடுத்த பருவத்திற்கு தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒரு முறை குட்டி ஈனுவதால் சராசரியாக இரண்டு வருடங்களில் மூன்று முறை குட்டி ஈனும். 



இதையும் படிக்கலாமே :இலவச மாட்டு கொட்டகை திட்டம் 

விண்ணப்பிப்பது எப்படி?

40 நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆற்றிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்து விட வேண்டும் அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும். ஆடுகளுக்கான தீவனமாக தீவனச்சோளம், மக்காச்சோளம், வேலி மசால் மற்றும் சீமைப்புல் போன்றவற்றை தரலாம்.  போதிய இடவசதி இல்லையென்றாலும் பரவாயில்லை சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் பரண் மேல் ஆடு வளர்க்கும் முறையை பின்பற்றலாம். படித்தவர்கள் படிக்காதவர்கள் என பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

நன்றி. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *