ஆடி 18 அன்று தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் மற்றும் மாற்றும் முறை.
வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடி பதினெட்டாம் பெருக்கு வருகின்றது. இந்த நாளில் தாலி கயிறு மாற்றுவதற்கு சரியான நேரம் என்ன? வழிபாட்டு முறை என்ன?
ஆடி மாதத்தில் அனைத்து நாட்களும் விசேஷமான நாட்கள். அதிலும் மிகவும் விசேஷமான ஒரு நாள் எது என்றால் அது ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தில் 18ம் நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு. ஆடி 18ம் நாள் அன்று நாம் செய்யக்கூடிய ஒரு முக்கியமான வழிபாடு என்னவென்றால் தாலி பிரித்து கோர்ப்பது, தாலி கயிறு மாற்றுவது.
நமது வீட்டில் இருக்கின்ற நீரை நாம் வழிபாடு செய்யலாம். அதே போல் காவிரி ஆற்றிலும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும். நாம் அங்கு சென்று வழிபாடு செய்யமுடியவில்லை என்றாலும் கூட நம் வீட்டிலேயே இந்த வழிபாடு செய்யலாம். நம் வீட்டில் வழிபாடு செய்தாலும் நாம் தொட்டது எல்லாமே வெற்றியாக முடியும். பொதுவாகவே இந்த ஆடிப்பெருக்கு நாளில் புது ஆடைகள் அணியலாம். இந்த ஆடி 18 வருகின்ற வியாழக்கிழமை வருகின்றது.3 8 2023 வியாழக்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானது. இந்த நல்ல நாளில் நீங்கள் புத்தாடை அணிந்து கொண்டு பூஜைகள் செய்யலாம். நீங்கள் எது செய்தாலும் அது அதிகமாக பெருக்கெடுக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறைதான் இந்தஆடிப்பெருக்கு.
இதையும் படிக்கலாமே : பணத்தை ஈர்க்கும் 7 அதிர்ஷ்ட செடிகள்
ஆடி மாதத்தில் ஒரு சிறப்பான நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கு. அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். முக்கியமாக சுமங்கலி பெண்கள் அவர்களுடைய தாலி கயிறை மாற்றுவது என்பது மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.
நமது வீட்டிலேயே காவிரி அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீங்கள் தண்ணீர் பயன்படுத்துகின்ற இடங்கள் எல்லாம் உதாரணமாக கிணறு இருந்தால் வீட்டில் எங்கெல்லாம் தண்ணீர் வரும் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு விளக்கு ஒன்று ஏற்றி வையுங்கள். அகல் விளக்கு ஏற்றி வையுங்கள்.
ஒரு செம்பு பாத்திரத்தில் அதாவது செம்பு பாத்திரம் இருந்தால் எடுத்துக்கலாம். செம்பு பாத்திரம் இல்லையென்றால் வெள்ளி பித்தளை இதில் ஏதாவது ஒரு பாத்திரத்தை பயன்படுத்தலாம்.
அடுத்து நெய்வேத்திய பொருட்கள் இனிப்பு ஏதாவது காதில் கருகமணி ஒரு எலுமிச்சைப்பழம் வாழைப்பழம் வெத்தலை பாக்கு தேங்காய் உடைக்கிற வழக்கம் இருந்தால் தேங்காய் உடைக்கலாம். அடுத்து காப்பு அரிசி ரொம்ப ரொம்ப முக்கியமான நெய்வேத்திய பொருள். இது எல்லாம் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முக்கியமாக பூஜை அறையில இதை வைத்து நீங்க வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்
குறிப்பாக பூஜை அறையில் என்னென்ன பழம் இருக்க வேண்டும்?
நாவல் பழம், கொய்யா, மாதுளை, சாத்துக்குடி மாதிரி பழங்கள் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் வாங்கி வைக்கலாம். முக்கியமாக தாலிக்கயிறு நீங்கள் மாற்றுவதாக இருந்தால் அன்றைய நாளில் புதியதாக தாலிக்கயிறு ஒன்றை எடுத்து அதற்கு மஞ்சள் பூசி உங்கள் தாலியிலே இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் கோர்த்து இந்த வெத்தலை பாக்கு மேல் வைக்க வேண்டும். உங்களுடைய மாங்கல்யத்தை கழட்டுவதற்கு முன்பாக வெறும் மஞ்சள் கயிறை உங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாத பதினெட்டாம் பெருக்கலில் பிரார்த்தனைகள் என்னவாக இருந்தாலும் அதை நீங்கள் நினைவில் வைத்து தீப ஆராதனை காமிக்க வேண்டும். பூஜை எல்லாம் முடிந்த பிறகு திருமாங்கல்யத்தை உங்கள் கணவரிடம் கொடுத்து அவரை உங்களுக்கு கட்டிவிட சொல்லலாம். கணவர் வெளிநாட்டில் இருந்தால் மாமியாரோ அல்லது பெரியவர்கள் கையாலோ அல்லது நீங்களே கூட கட்டிக் கொள்ளலாம்.
தாலி கயிறு மாற்ற சரியான நேரம் எது?
வியாழக்கிழமை ராகு காலம் எமகண்டம் இது எல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ராகு காலம் எப்பொழுது வருகிறது என்றால் பகல் நேரத்தில் காலையில் தான் வரும். 1.30 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் ராகு கால நேரம். எமகண்டம் அதிகாலை 6 மணியிலிருந்து 7.30 மணி வரை.
வியாழக்கிழமை காலை 10:45 மணியிலிருந்து மதியம் 1.15 மணி வரைக்கும் நேரம் நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டு முறைகள் மூலமாக மதியத்துக்கு பிறகு நீங்கள் வழிபாடு செய்யலாம் ஆனால் தாலி கயிறு மாற்றக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தாலி கயிறு மாற்றலாமா என்று சந்தேகம் இருக்கும். ஆடிப்பெருக்கு நாள் அன்று மாதவிடாய் காலமாக இருந்தால் நீங்கள் பூஜை அறைக்கு வெளியிலிருந்து தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். எந்த பிரச்சனையும் இல்லை. பூஜை அறைக்கு உள்ளே இருந்து மாற்ற வேண்டாம்.
இந்த தகவல் உங்களுக்கு ஆடிப்பெருக்கு அன்று என்னென்ன செய்ய வேண்டும், தாலிக்கயிறு எப்படி மாற்ற வேண்டும் என்ற வழிபாட்டு முறையை தெரிந்து கொண்டீர்கள். தவறாமல் வருகின்ற வியாழக்கிழமை இந்த ஒரு நல்ல விஷயத்தை நீங்கள் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் மங்களங்கள் நிறைய பெருகும் மாங்கல்ய பலம் ஏற்படும்.