அறிந்து கொள்ள வேண்டிய ஏழு ஆரோக்கிய குறிப்புகள்

 ஆரோக்கியம் 

அறிந்து கொள்ள வேண்டிய ஏழு ஆரோக்கிய குறிப்புகள்

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு சில சின்ன சின்ன ஆரோக்கிய குறிப்புகளை நம்ம பின்பற்றி வருவோம். அப்படி அனைத்தையும் நம்மளால பின்பற்ற முடியவில்லை என்றாலும் கூட இந்த ஏழு குறிப்புகளை நீங்கள் பின்பற்றி வந்தால் வாழ்வில் ஆரோக்கியமாக பல நீண்ட நாட்கள் உங்களால் வாழ முடியும் அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்.


அறிந்து கொள்ள வேண்டிய ஏழு ஆரோக்கிய குறிப்புகள் தினசரி ஒரு பச்சை சின்ன வெங்காயத்தை உண்டு வந்தால் ரத்தமானது சுத்தமாகும் இருமல் சளியானது நீங்கும்.


சுண்டைக்காய்



சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது இந்த காய் ஆஸ்துமா ஜுரம் போன்றவற்றை நீக்குகிறது.  அதனால் எவ்வளவு சுண்டைக்காயை நம்ம உணவுல சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


கேழ்வரகு 


கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவு பொருளை சாப்பிட வேண்டும்.  இதில் இரும்பு சத்து கால்சியம் உள்ளது.


ஒரு சில கற்பினிப் பெண்களுக்கு இரும்பு சத்து இல்ல அப்படின்னு சொல்லி போயி நீங்க இன்ஜெக்ஷன் பண்ணுவீங்க அது போன்ற நிலைமையெல்லாம் இந்த மாதிரி கேழ்வரகு சாப்பிட்டால் வராது.



அதனால் கன்சீவ் ஆன நாள் முதலாவே முதல் நாளிலிருந்து நீங்க வந்துட்டு கேழ்வரகு கொஞ்சம் கொஞ்சமா உங்களுடைய உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.


வேப்பம் பூ


வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும் பித்தம் குறையும் ஒரு சில பேர் என்ன செய்வாங்க தங்கள் உடம்பில இருக்கக்கூடிய கிருமிகள் குறைவதற்கு மருந்து எடுத்துப்பாங்க.


ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மாத்திரை சாப்பிடுவாங்க இதுபோன்று பல விதங்களில் உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய கிருமிகளை போக்கிக் கொள்வதற்கு பல வழிகளை பின்பற்றுவிங்க. 



ஆனால் மிக எளிமையாக வேப்பம் பூவை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள் அப்படி வேப்பம்பூ கிடைக்கலைன்னா கூட பரவால்ல வேப்பம் கொழுந்தை தினமும் காலையில வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாங்க நல்ல ரிசல்ட் இருக்கும். 

முருங்கைக் கீரை



தினமும் முருங்கைக் கீரையை சாப்பிட்டால் நீரிழிவு நோயானது கட்டுப்படும் கண்பார்வையானது தெளிவு பெறும் அது மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு அதிகமான இரும்பு சத்து கிடைக்கும். அதனால வாரத்துல தினமும் உங்களால 


சாப்பிட முடியலன்னா கூட வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் ஆவது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


தேன்


அதிக இருமல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமலானது குறையும் வறட்டு இருமல் சளி இருமல் இதுபோன்ற எந்த ஒரு இருமலாக இருந்தாலும் சரி உடனே ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான தேனை எடுத்து குடிச்சிட்டு வாங்க உங்களுடைய இருமலானது கட்டுப்படும். 



சுக்கும் பனை வெல்லமும்


சாதாரண வாய்வு பிடிப்பிற்கு சுக்கையும் பனைவெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதுமானது. ஒரு சிலருக்கு வெயிட் தூக்கும்போது மூச்சுப்பிடிப்பு ஏற்படும். வாய்வு தொல்லைனால மூச்சுப்பிடிப்பு ஏற்படும் வாய்வு பிரச்சனை இருக்கும் வயிறு உப்புசம் இருக்கும் நெஞ்செரிச்சல் இருக்கும் நெஞ்சை அடைக்கிற மாதிரி இருக்கும். 


இது போன்ற பிரச்சனைகள் எல்லாத்துக்குமே ஒரு சிறந்த மருந்து எது அப்படின்னு பாத்தீங்கன்னா சுக்கும் பனை வெல்லமும் அதனால இது இரண்டையும் கலந்து நீங்க சாப்பிட்டாலே போதும் ரொம்ப ஆரம்ப ஸ்டேஜ்ல இருக்கக்கூடிய இந்த வாய்வு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும்.


அதனால் இந்த ஏழு குறிப்புகளை மட்டும் நாம் பின்பற்றி வந்தாலே போதும் நம்ம உடல்ல எந்த விதமான பிரச்சினையுமே வராது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *