அம்மான் பச்சரிசி மூலிகை மருத்துவ பயன்கள்.
(Herb, Euphorbia hirta, Amman pacharisi, Health Tips.)
காய்கறிகள் பழங்களை விட பல மடங்கு நன்மையை தரக்கூடியது கீரைகளும் மூலிகை வகைகளும்தான். நம் முன்னோர்கள் அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தார்கள் அதனால்தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். நம் முன்னோர்களும் சித்தர்களும் அதிகம் பயன்படுத்திய ஒரு அற்புதமான மூலிகையை பற்றி தெரிந்து கொள்வோம்.
அம்மான் பச்சரிசி
சாதாரணமாக நடைபாதை சாலை ஓரங்கள் மற்றும் நீர் ஆதாரமுள்ள எல்லா இடங்களிளுமே காணப்படக்கூடிய ஒரு சிறந்த மூலிகை இந்த அம்மான் பச்சரிசி. இதற்கு சித்திரப் பாலாடை, நீலப் பாலை, வெள்ளி பஸ்பம் போன்ற பல பெயர்கள் இருக்கிறது. இந்த அம்மான் பச்சரிசி சிறந்த மலமிளக்கியாகவும், வெப்ப தனிப்பானாகவும், வீக்கம் குறைப்பானாகவும் உடலின் தாது உற்பத்தியை போக்கி உடலின் பலத்தை அதிகரிக்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த அம்மான் பச்சரிசியை பயன்படுத்தி என்னென்ன நோய்கள் குணமாகும் மற்றும் இதனை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று: உடல் சூடு மற்றும் மலச்சிக்கலை போக்கும்
அம்மான் பச்சரிசி இலைகளை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி சட்னியாக செய்து காலை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு குறையும் மற்றும் உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய மலச்சிக்கலும் குணமாகும்.
இதையும் படிக்கலாமே :90 வயதிலும் மூட்டு வலி, வாயு தொல்லை, கொலஸ்ட்ரால், சர்க்கரை, பார்வை மலச்சிக்கல் இல்லாமல் இருப்பீங்க.
இரண்டு: பாத வீக்கம் குணமாகும்.
உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக இருக்கிறதன் விளைவாக பலரும் பாதங்கள் வீங்கி அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுகிறவர்கள் இந்த அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து பட்டு போட்டு வர பாதத்தில் உள்ள வீக்கம் மறையும். நான்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த இலைகளை பயன்படுத்தி பட்டு போட்டு வர வீக்கம் நிரந்தரமாக குணமாகும்.
மூன்று: வாய்ப்புண் மற்றும் குடல் அல்சர் குணமாகும்
வாய்ப்புண் மற்றும் குடல் அல்சரினால் அவதிப்படுறகிவர்கள் பாசிப்பருப்புடன் இந்த இலைகளை சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர குடல் அல்சர் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
நான்கு: உதடு புண்கள் குணமாகும்.
அம்மான் பச்சரிசியில் இருந்து வரக்கூடிய பாலை உதடு புண்களில் தேய்த்து வர புண்கள் விரைவில் குணமாகும்.
ஐந்து: தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
தாய்ப்பால் சுரப்பு கம்மியாக இருக்கிறவர்கள் சுத்தமான மாட்டுப் பாலுடன் அம்மான் பச்சரிசியினுடைய பூக்களை மட்டும் எடுத்து அதனை நன்றாக கழுவி அரைத்து அதனை பாலுடன் கலந்து தினமும் காலையில் குடித்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஆறு : கருவுறுதல் நடைபெற உதவி செய்யும்
குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்கள் கருவுறுதலில் பிரச்சனை இருந்தால் இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நெல்லிக்காய் அளவு அரைத்து பட்டர் மில்க்குடன் சேர்த்து குடித்து வர பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மேம்பட்டு கருவுறுதல் எளிதில் நடைபெறும்.
இதையும் படிக்கலாமே :குறட்டைக்கு நிரந்தர தீர்வு இதுதான்!ஏலக்காய் பற்றிய தெரியாத ஆரோக்கிய உண்மைகள்.
ஏழு : உடல் வலிமை அதிகரிக்கும்
ஆண்மை குறைவு பிரச்சினையினால் அவதிப்படுகிறவர்கள் அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து 21 நாட்கள் காலையில் குடித்து வர ஆண்களின் தாது உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.
எட்டு: ரத்தம் சுத்தமாகும்
ரத்தத்தில் அதிக கழிவுகள் தேங்கி அவதிப்படுகிறவர்கள் அம்மான் பச்சரிசி இலையுடன் மூன்று வேப்பிலை மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலையில் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
ஒன்பது: மறுஉதிர உதவி செய்யும்
நிறைய பேர் கழுத்து அக்குள் போன்ற பகுதிகளில் மருக்களினால் அவதிப்படுவார்கள். இது போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுகிறவர்கள் அம்மான் பச்சரிசி செடியில் இருந்து வரக்கூடிய பாலை மருக்கள் மீது தடவி வர மறுக்கள் உதிரும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த பாலை தடவி வர மறுக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
இதையும் படிக்கலாமே :புற்றுநோயை உண்டாக்கும் 10 உணவுகள்.
பத்து: சிறுநீர் எரிச்சல் குணமாகும்
நிறைய பேர் சிறுநீர் கடுப்பு, உடல் உஷ்ணம், உடல் நமைச்சல், சிறுநீருடன் குருதிப் போக்கு அதாவது ரத்தம் போறது போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுகிறவர்கள் அம்மான் பச்சரிசி இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு அரைத்து பசும்பாலுடன் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.