அத்திப்பழத்தின் முதல் 10 ஆரோக்கிய நன்மைகள்

(Top 10 Health Benefits of Fig Fruit)

அத்திப்பழத்தின் முதல் 10 ஆரோக்கிய நன்மைகள். அத்திப்பழத்தில் நாட்டு அத்தி. சீமை அத்தி என இரண்டு வகையான அத்திப்பழங்கள் இருக்கிறது. லேசான இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு பழம்தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாபிலோனிய மக்கள் காலத்திற்கு முன்பு இருந்தே இந்த பழத்தை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டதாக வரலாற்று பதிவுகள்  இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அண்ணல் காந்தியடிகள் தினந்தோறும் தவறாமல் சாப்பிட்ட ஒரு பழம் அத்திப்பழம் என பல நூல்களில் சொல்லி இருக்கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த அத்திப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது.

இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தயாமின், ரிப்போ ப்ளோவின், வைட்டமின் சி மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துகள் நிறைந்த ஒரு பழம் அத்தி பழம். பிரஷ்ஷான அத்திப்பழங்கள் நம் இடங்களில் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கூட காய்ந்த அத்திப்பழங்கள் கடைகளில் அதிகமாகவே கிடைக்கிறது. தினமும் அத்தி பழங்களை சாப்பிடும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மற்றும் குணமாக கூடிய நோய்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஒன்று: அனிமியாவை குணமாக்கும்

அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்றால் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாமல் இருப்பதுதான் ஒரு முக்கியமான காரணம். இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு பழம்  அத்திப்பழம். 100 கிராம் காய்ந்த அத்திப்பழத்தில் 0.8 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய இரும்புச்சத்தின் அளவை அதிகரித்து உடலில் புதிய சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்தியாவதற்கு ரொம்பவே உதவி செய்யும்.

இதன் மூலமாக அனிமியாவை எளிதில் குணமாக்கக்கூடியது இந்த அத்திப்பழம். ரத்தசோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் நான்கிலிருந்து ஐந்து அத்திப்பழங்களை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீருடன் அத்திப்பழங்களை சாப்பிட்டு வர அனிமியா விரைவில் குணமாகும்.

இரண்டு: எலும்புகளை வலுவாக்கும்



 எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கக்கூடிய ஒரு பழம் அத்திப்பழம். 100 கிராம் ஃபிரெஷ் ஆன அத்திப்பழத்தில் 35 மில்லிகிராம் கால்சியம் சத்து இருக்கிறது. மூட்டு வலி முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறவர்கள் இந்த பழத்தை  சாப்பிட்டு வர எலும்புகள் வலுவாகும்.  இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் விட்டமின் கே போன்ற டென்சிட்டின்னு சொல்லக்கூடிய எலும்புகளின் அடர்த்தியை  அதிகரிக்கும். இதன் மூலமாக ஆஸ்திரேலியா போன்ற பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்க கூடியது அத்திப்பழம்.

மூன்று: மலச்சிக்கலை குணமாக்கும்

நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகவும் நல்லது அத்திப்பழம். அத்திப்பழத்தில்  சாலிபில் பைபர் என்று சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இது குடலின் உட்பகுதியில் ஒரு வழவழப்பு தன்மையை ஏற்படுத்தி குடல் இயக்கம் சீராக இயங்கவும் மலம் எளிதாக வெளியேறுவதற்கும் உதவி செய்யும். இதன் மூலமாக மலச்சிக்களும் எளிதில் குணமாகும். இது மட்டுமில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை காரணமாக உண்டாகக்கூடிய ஆசனவாய் வெடிப்பு பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக் கூடியது அத்திப்பழம்.

நான்கு: இருதயத்தை பலப்படுத்தும்

இருதயம் பலமாக இருப்பதற்கு அதிக ஆன்டிஆக்சிடென்ட் உள்ள உணவுகளை சாப்பிடணும்.   ஆன்டிஆக்சிடன்ட் சத்து அதிகம் நிறைந்த ஒரு பழம் அத்திப்பழம். ஆன்டிஆக்ஸிடன்ட் மட்டும் இல்லாமல் பெட்டிங் என்று சொல்லக்கூடிய ஒருவகை நற்பொருளும் அதிக அளவில் இருக்கிறது. இது இருதயத்தை பலப்படுத்துவதோடு இருதய ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். இதன் மூலமாக இருதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது அத்திப்பழம்.

ஐந்து: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்



அத்திப்பழத்தில் இனிப்பு சுவை உண்டு என்கிறதின்னால் அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பழமாக சாப்பிடக்கூடாது அத்திக்காயை தான் சாப்பிட்டு வரணும். சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் அத்திக்காயை பொரியலாக செய்து சாப்பிடலாம். இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

ஆறு: ரத்த அழுத்தத்தை குறைக்கும்

அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் 232 மில்லிகிராம்  பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய எலக்ட்ரோலைட்சை பேலன்ஸாக வைப்பதோடு இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும் குறைக்கும். இதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியது அத்திப்பழம். அதிக ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறவர்கள் இரண்டில் இருந்து மூன்று காய்ந்த அத்திப்பழங்களை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த அத்திப்பழத்தையும் நீரையும் சாப்பிட்டு வந்தால் அந்த நாள் முழுவதும் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

ஏழு: செரிமானத்தை எளிதாக்கும்

செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கக்கூடிய உணவை கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை அத்தி பழத்துக்கு உண்டு. எந்த ஒரு உணவை சாப்பிட்ட  பிறகும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய உணவை எளிதில் ஜீரணமாக உதவி செய்யும். செரிமானம் ஆவதில் சிரமம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பது  போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுகிறவர்கள் உணவு சாப்பிட்டபின் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வர செரிமானம் எளிதாக நடைபெறும்.

எட்டு: பற்களை பலமாக்கும்


இதையும் படிக்கலாமே: மஞ்சள் புகை எப்படி உதவுகிறது?

பற்களை பலவீனப்படுத்தக்கூடிய பல் சொத்தை வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திப்பழத்திற்கு உண்டு. இதன் ஆண்ட்டி பாக்டரியல் பண்புகள்  பற்களில் உண்டாக்கக்கூடிய கிருமிகளை அழித்து பல்சொத்தை வராமல் தடுக்கும். மேலும் கால்சியம் சத்தும் அதிக நிறைந்தது அத்திப்பழம். அதனால் பற்களை பலமாக்குவதற்கும் ரொம்ப உதவியாக இருக்கிறது அத்தி பழம்.

ஒன்பது: உடல் பலவீனத்தை போக்கும்

எப்பொழுதும் அதிக சோர்வு அசதி எந்த வேலையும் செய்ய மனமின்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறவர்களுக்கும், நீண்ட நாட்கள் நோயினால் உடல் மெலிந்து உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கும் மிகவும் நல்லது அத்திப்பழம். இரவு உணவுக்கு பிறகு மூன்று காய்ந்த அத்திப்பழங்களுடன் ஒரு கிளாஸ் பால் சேர்த்து 40 நாட்கள் குடித்து வர உடல் பலவீனம் நீங்கி உடல் பலம் பெறும். மேலும் உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க ரொம்பவே உதவக்கூடியது அத்திப்பழம்.

பத்து: குழந்தை இல்லாத பிரச்சினையை குணமாக்கும்.

அத்திப்பழத்தின் முதல் 10 ஆரோக்கிய நன்மைகள். ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்படக்கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளையும் எளிதில் குணமாக்க கூடியது அத்திப்பழம். அத்திப்பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர முறையற்ற மாதவிடாயை சீர்படுத்துவதோடு கர்ப்பப்பை சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கக்கூடியது அத்திப்பழம். குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது அத்திப்பழம். அத்திப்பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் அதிகப்படியான அமினோ ஆசிட்  புதிய விந்தணு உற்பத்திக்கு உதவி செய்யும். இதன் மூலமாக குழந்தையின்மை பிரச்சனையையும் எளிதில் குணமாக்க கூடியது அத்திப்பழம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *